Collected Jokes
Joke 1:
ஒரு விறகு வெட்டியொருவன் இருந்தான் …!
ஒருநாள் காட்டில் விறகு வெட்டிக்கொண்டு இருக்கையில் அவனது கோடரி காணாமல் போய்விட்டது ……!
கடவுளே என்று உரத்து கத்தினான் …என் குடும்பத்தை காப்பாற்று ..என் கோடரியை கண்டுபிடித்து தா என்று மன்றாடினான் …!
கடவுள் திடீரெனெ தோன்றி நான் உனக்கு உதவுகிறேன் என்றார் ..! அவரது சக்தியால்
**தங்க உலோக கோடரியை வரவழைத்து இதுவா உன் கோடரி என்று கேட்டார்****
விறகு வெட்டி இல்லை சாமி -என்றான்
**வெள்ளிஉலோக கோடரியை வரவழைத்து இதுவா உன் கோடரி என்று கேட்டார்****
விறகு வெட்டி இல்லை சாமி -என்றான்
**அவனது தொலைந்த கோடரியை வரவழைத்து இதுவா உன் டகோரி என்று கேட்டார்**
ஆமா சாமி ..என்றான்
கடவுள் இவனது பண்பை அவதானித்து அவனிடம்
நீ உண்மையை கூறியதால் மூன்று கோடரியையும் கொடுத்தார் …
நடந்ததை தன் மனைவியிடம் கூற பேராசைபிடித்த மனைவி தன்னையும் கடவுளிடம் கூட்டிச்செல்ல மன்றாடினாள்
அவனும் சம்மதித்து காட்டுக்கு அழைத்து சென்றபோது திடீர் என மனைவி காட்டு வழியில் காணாமல் போய்விட்டாள்…!
கடவுளே என்று உரத்து கத்தினான் …என் குடும்பத்தை காப்பாற்று ..என் மனைவியை கண்டுபிடித்து தா என்று மன்றாடினான் …!
கடவுள் வந்து நான் உனக்கு உதவுகிறேன் என்றார் ..! அவரது சக்தியால்
**சமந்தாவை வரவழைத்து இதுவா உன் மனைவி என்று கேட்டார் …?
அவன் ஆமாசாமி என்றார்
கடவுள் திகத்துவிட்டார் …என்னப்பா ..?உன் நேர்மை எங்கே ..? பொய்சொல்லிட்டியே …?
இல்ல சாமி நீங்கள் …..!
**முதல் சமந்தாவை காட்டி இதுவா மனைவி என்று கேட்பீர்கள்** நான் இல்லை சாமி என்பேன் …
அடுத்து தமனாவை காட்டி இதுவா மனைவி என்று கேட்பீர்கள்** நான் இல்லை சாமி என்பேன்
என் உண்மை மனைவியை காட்டி இதுவா மனைவி என்று கேட்பீர்கள்** நான் ஆம் என்பேன்......
நீ உண்மை பேசியதால் மூன்றுபேரையும் வைத்திரு என்பீர்கள் நானோ விறகு வெட்டி எப்படி சாமி…மூன்றுபேரையும் வைத்து வாழுறது அதுதான் .....
-------
Joke 2:
செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா, நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது .
--- தீவிரமாக யோசிப்போர் சங்கம்
(எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது )
இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.
சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்...
ஆனா, கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?
--- ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்
என்னதான் மனுசனுக்கு வீடு ,வாசல் , காடு , கரைன்னு எல்லாம்
இருந்தாலும் , ரயிலேறனும்னா, ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும் .
இதுதான் வாழ்க்கை .
பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும் . ஆனா,ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா ?
நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது !!!
என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும், ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது !!
அதேமாதிரி,
என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும், லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது !!!
டிசம்பர் 31 க்கும், ஜனவரி 1 க்கும் ஒரு நாள்தான் வித்தியாசம் .
ஆனால், ஜனவரி 1 க்கும், டிசம்பர் 31 க்கும், ஒரு வருசம் வித்தியாசம். இதுதான் உலகம்.
பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும் .
ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும் ..
சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும் . ஆனா...
கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா ??
யோசிக்கனும்............ ...!!
தத்துவம் 1:
இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம் .
ஆனா
பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?
தத்துவம் 2:
ஆட்டோக்கு ' ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும் ,
மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும் .
தத்துவம் 3:
தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும் ,
ஆனா
இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது !
(என்ன கொடுமை சார் இது !?!)
தத்துவம் 4:
வாழை மரம் தார் போடும்
ஆனா....... அதை வச்சு ரோடு போட முடியாது!
(ஹலோ ! ஹலோ !!!!)
தத்துவம் 5:
பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம் ,
ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?
இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?
(டேய் ! எங்க இருந்துடா கிளம்புறீங்க ?!)
தத்துவம் 6:
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் ...
சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும் ,
அதுக்காக, மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா ?
(ஐயோ ! ஐயோ !! ஐயோ !!! காப்பாத்துங்க!!!)
பில் கேட்ஸோட பையனா இருந்தாலும் ,
கழித்தல் கணக்கு போடும்போது, கடன் வாங்கித்தான் ஆகனும்.
கொலுசு போட்டா சத்தம் வரும் . ஆனா,
சத்தம் போட்ட கொலுசு வருமா ?
பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,
ஃப்ரன்ட் வீல முந்த முடியாது .
இதுதான் உலகம்
T Nagar போனா டீ வாங்கலாம் .
ஆனால்....... விருதுநகர் போனா விருது வாங்க முடியுமா?
என்னதான் பெரிய வீரனா இருந்தாலும், வெயில் அடிச்சா,
திருப்பி அடிக்க முடியாது .
இளநீர்லயும் தண்ணி இருக்கு,..... பூமிலயும் தண்ணி இருக்கு.... .
அதுக்காக,
இளநீர்ல போர் போடவும் முடியாது ,
பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது ..
உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்
ஒரு செல்லில் கூட ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது .
ஓடுற எலி வாலை புடிச்சா............ .நீ ' கிங்'கு
ஆனா.........தூங்குற புலி வாலை மிதிச்சா...... உனக்கு சங்கு....
நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்
ஆனா...... ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது .
வண்டி இல்லாமல் டயர் ஓடும் .
ஆனால்............டயர் இல்லாமல் வண்டி ஓடுமா ?
(இது மல்லாக்கபடுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.)
சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா..... ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா? இல்ல.......... பிளேன் ஓட்டுறது பிளானிங் னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும் மெஸேஜ் Forward தான் பண்ண முடியும்..... Rewindலாம் பண்ண முடியாது
"Tea" / "Cofee" எது சுகாதாரம் இல்லாதது ??........ "Tea"ல ஒரு "ஈ " இருக்கும்.
"Coffee"ல 2 "ஈ " இருக்கும்.
நோ நோ நோ... நோ பேட் வோர்ட்ஸ்...
----
Joke 3:
கொஞ்சம் சிரிங்க பாஸ்...
வாட்ச்மேனை கூட்டிகிட்டு வந்து
கடன் கேட்கிறீங்களே ஏன்???
நீங்கதானே சார் சொன்னீங்க செக்யூரிட்டி இல்லாம கடன் கொடுக்க மாட்டேன்னு அதான்…….
---
Joke 4:
ஒரு காப்பி எவ்வளவு சார் ?
5 ரூபாய் .
எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?
டேய் . சாவுகிராக்கி அது XEROX காப்பிடா !
---
Joke 5:
நீங்க உடனடியா மீன் , ஆடு , கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் .
அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர் .
---
Joke 6:
மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது ?
ஐந்து கேள்விப்பா
நீ எத்தனை கேள்வி விட்டுட்டே ?
முதல் மூணும் கடைசி இரண்டும்
வெரிகுட் கீபிடப்
---
Joke 7:
ஒரு ஊரில் எலித்தொல்லை. அதைப் பார்த்த ராஜா, ”ஒரு செத்த எலி கொண்டு வந்தால் பத்து ரூபாய் தரப்படும்,” என்று அறிவித்தார்.
மக்களும் நிறைய எலிகளைக் கொன்று பையில் போட்டு அரண்மனையில் கொடுத்துப் பணம் பெற்றுச்சென்றனர்.
அரண்மனை துர்நாற்றம் எடுக்க ஆரம்பித்தது, அரசன் உடனே செத்த எலியின் வாலைக் கொண்டு வந்தால் போதும் என்று அறிவித்தார்.
வாலைக் கொண்டு வந்து பரிசு வாங்கும் மக்களின் எண்ணக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருந்தது, ஆனால் எலித்தொல்லை குறையவில்லை.
இது பற்றி அரசன் தீவிரமாக விசாரித்ததில் தெரிய வந்தது
பணம் கிடைக்குமே என்று மக்களே வீட்டில் எலி வளர்க்க ஆரம்பித்து விட்டார்கள்!
இலவசங்கள் வழங்குவதால் மக்கள் பிரச்சினைகள் தீர்ந்து விடாது, வேறு உருவத்தில் உருவெடுக்கும்.
Joke 8:
மனைவி,
"நீங்க சும்மா இருங்க,
*உங்களுக்கு*
*செலக்ட் பண்ணவே* *தெரியாது"*
எனும் போது
கணவனின்
நினைவில் வந்து போகிறது
அவளை
*"பெண் பார்த்த நாள்"*
Joke 9:
உலகத்தையே ஒரு கலக்கு கலக்கனும்னு ஆசை
but
அந்த கரண்டித்தான் எங்க இருக்கூனு தெரியல்ல
Joke 10:
''டேய்..ஓடாதே.. நில்ரா.. எதுக்குடா
இவளை தூக்கிட்டு ஓடறே ?''
''நீங்கதானே சார் சொன்னீங்க… விளையாட்டு விழா ஆரம்பிக்கறதுக்கு முன்னால , ஜோதியைத் தூக்கிட்டு ஓடணும்னு ''
Joke 11:
ஒரு கணவர் தன் மனைவிக்கு மொபைலில் இருந்து ஒரு மெசேஜ் அனுப்புகிறார்....
சிரிக்க சிந்திக்க: கணவர் : Thanks for making my life wonderful and being a part of my life. Whatever I am is only because of u , u are my Angel, thanks for coming in my life and make it worth living.You are Great.
மனைவியின் பதில் மெசேஜ் : குடிச்சிருக்கியா ? அமைதியா வீட்டுக்கு வந்துடு, பயப்படாதே எதுவும் செய்ய மாட்டேன்.
கணவர் : Thank You.
Joke 12:
ஒரு சிந்தனைக் கடி:
ஒரு புடவை வாங்க முன்னூறு புடைவைகளை புரட்டிப்பார்த்த மனைவியிடம் கணவன் எரிச்சலுடன் சொன்னான்,
"ஆதி காலத்தில் ஏவாள் வெறும் இலையை மட்டுமே உடுத்தி
இருந்தாள். இதுபோன்ற தொல்லைகள் நல்லவேளை ஆதாமுக்கு இல்லை"
இதற்கு மனைவி பதில் சொன்னாள்,
"அதுக்கு அவள் எத்தனை மரம் ஏறி இறங்கினாளோ.......?" !!!!
Joke 13 :
எனது சர்ச்சில் அன்று நிறைய கூட்டம். காணிக்கை எடுப்பவர் அருகே வந்தவுடன் அருகில் இருந்த நண்பர் ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து போட்டார். அதுவும் பலரும் பார்க்கும்படியாக. ஆனால் அது சற்று கிழிந்து வெளியில் யாரிடமும் கொடுத்தால் வாங்காத அளவில் இருந்தது.
சரி நம்ம கடவுள் தானே! அவரிடம் செல்லாத நோட்டு என்று ஏதேனும் உண்டோ ? இதெல்லாம் இறைவனுக்கு பெரிய காரியமல்ல என்று தனக்குத்தானே ஆறுதல் படுத்திக்க கொண்டார். சத்தமாக காணிக்கை கீர்த்தனைப் பாடலை பாடிக்கொண்டிருந்தார்.
அடுத்த வினாடி !
எனக்கு அடுத்த பக்கம் இருந்த நபர் அவரின் தோளைத் தட்டி Rs.500 கொடுத்தார். அவருக்கு காணிக்கை பை சற்று தூரம் போனதால். எனது நண்பர் சரி என்று அதை வாங்கி உடனே அதைக் காணிக்கைப் பையில் போட்டுவிட்டார். சே! எவ்வளவு பக்தி இவருக்கு என்று வியந்து, என் நண்பர், சார் நீங்கள் உண்மையிலே கிரேட் என்று சொன்னார்.
அவரும் புரியாமல் எதற்கு என்றார்?. "காணிக்கையாக Rs.500 போடுகிறீர்கள் அதற்குத்தான் என்றார்.
அதற்க்கு அவர், "நானா, இல்ல சார், உங்கள் பாக்கெட்டிலிருந்து காணிக்கை பணம் எடுக்கும்போது இந்த 500 ரூபாய் கீழே விழுந்தது. அதைத்தான் நான் எடுத்து உங்களிடம் கொடுத்தேன்" என்றார்.
இது எப்படி இருக்கு !
Joke 14 :
நான் வாய் பேச முடியாத ஊமை."
வீட்டுக்காரம்மா: " பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா...
எனக்கு காது கேட்காது."
Joke 15 :
மற்றவள்: "ஏன் கேட்குறே?"
முதலாமவள்: "என் மாமியாருக்கு உடம்பு சரியில்லை,
அவங்களுக்கு காட்டத்தான்"
Joke 16 :
டாக்டர்: ஏன் முடியாது?
நோயாளி: ஏன்னா எங்க வீட்டு கோழி வெள்ளை முட்டைதான் போடும்.
Joke 17 :
"போடா நான் பத்திரமா பீரோ பின்னாடி போய் நின்னுக்கிட்டேன்."
Joke 18 :
மாணவர்கள்: நீங்க தான சார், நேற்று சொன்னீங்க "துன்பம் வரும் வேலையிலே" சிரிங்கன்னு, அதான்......
Joke 19 :
ஹோட்டல் முதலாளி: பின்ன என்னங்க, சாப்பிட வந்தவங்க 'டிபன் ரெடியா?'ன்னு கேட்டா 'நேத்தே ரெடி'ங்கறான்!
Joke 20 :
தெரியாம ரொம்ப நேரம் திரு திருன்னு முழிச்சுகிட்டு இருந்தார்
அப்புறம்?
நான் தான் தட்டிக் கொடுத்து தூங்க வச்சேன்…!
Joke 21 :
Joke 22 :
Joke 23 :
Joke 24 :
Joke 25 :
Joke 26 :
Joke 27 :
Joke 28 :
Joke 29 :
Joke 30 :