ஆலய மணி ஓசை கேளீர் ! – பசுமலை ஆலய மணி ஓசை கேளீர் !! - வரலாறு முக்கியம்

23/05/2023 08:19
 

ஆலய மணி ஓசை கேளீர் ! – பசுமலை ஆலய மணி ஓசை கேளீர் !!

பசுமை வளம் மிகுந்த வியப்பளிக்கும் பசுமை காணீர் !
எழில் மிகு புகழ் மணக்கும் நினைவுகள் பல !
சங்கீதம் 77 – 5 : “பூர்வ நாட்களையும் ஆதிகாலத்து வருஷங்களையும் சிந்திக்கிறேன்”
பசுமலை – பெயர் காரணம்! ஒரு சரித்திர உண்மை உண்டு:-
நம் மாநிலம் “தமிழ்நாடு” எனப்படும், சங்க காலத்திற்கு பின்பாக “மெட்ராஸ் ஸ்டேட்” (Madras State) என்றனர்.  
(Madras State was a state of India during the mid-20th century. At the time of its formation in 1950, it included the whole of present-day Tamil Nadu (except Kanyakumari district), Coastal Andhra, Rayalaseema, the Malabar region of North and central Kerala, Bellary, South Canara and Kollegal. 
It was on January 14, 1969 that the Madras State was officially renamed Tamil Nadu. Here is how the name change came about.)
 
திருமலை நாயக்கர், மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவராவார். இவர் கி.பி 1623 தொடக்கம் 1659 வரையான காலப்பகுதியில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தார். இவர் காலத்தில் டெல்லி சுல்தானின் படைகளாலும், மற்றும் அயலிலிருந்த முஸ்லிம் அரசுகளாலும் தொடர்ந்து பயமுறுத்தல்கள் இருந்து வந்தன. எனினும் அவற்றை முறியடித்துத் தனது நாட்டை இவர் சிதையாமல் காப்பாற்றினார். இவரது ஆட்சிப்பகுதிக்குள் பண்டைய பாண்டிநாட்டின் பெரும் பகுதி அடங்கியிருந்தது.
திருமலை நாயக்கர், மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவராவார். இவர் கி.பி 1623 தொடக்கம் 1659 வரையான காலப்பகுதியில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தார்.  இவரது ஆட்சிப்பகுதிக்குள் பண்டைய பாண்டிநாட்டின் பெரும் பகுதி அடங்கியிருந்தது.
அப்பொழுது இருந்த இந்த சங்க காலத்தில் மதுரையை மையமாக வைத்து “பாண்டிய மன்னர்கள்” ஆண்டனர். அது மன்னராட்சி, மன்னர் பாராமரித்து வந்த கால் நடைகளில், “பசுமாடுகள்”, பசுமை நிறைந்த அடர்ந்து வளர்ந்த செழிப்பான, சோலை போன்ற இந்தக் காட்டுப் மலைபகுதியில் வளர்த்து பராமரிக்கப்பட்டன. எனவே பசுமை மிகுதியான குன்று (மலைக்குன்று) பகுதிக்கு பசு + மலை = பசுமலை எனப் பெயர் வழங்கினர். மணற்ப்பாங்கான குன்றுகள், பாறைகள் மிகுதியான மரங்கள் மிகுந்த அருகில் இருக்கும் மற்றொரு மலைபகுதியில் “காளைமாடுகள்” வளர்க்கப்பட்டன(இன்றைய Taj Retreat Hotel).  இம்மாடுகள் பராமரிக்கப்பட்ட மலைபகுதி காளை + மலை = காளைமலை என்று பெயர் பெற்றது. எனவே இயற்கை வளம் கொண்ட மணற்பாங்கான பசுமைவளம் கொண்ட சிறிய பூமிதான் “பசுமலை” என்ற சிற்றூர்.  மதுரை மாநகரின் அருகாமையில் சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு அமைதியான இயற்கை வளம் நிறைந்த பகுதி. இரண்டு குன்றுகளுக்கு இடையில் மலைஅடிவாரத்தில் அமைந்த ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஊர். தண்ணீர் நிரம்பிய குளம் "தென்கரைக் கண்மாய்" பசுமலையின் மற்றுமொரு சிறப்பு. 
இயேசு கிறிஸ்துவின் தரிசனம் நோக்கி : அமெரிக்கா முதல் இந்தியா வரை பயணம் செய்தனர் ஆறு மிஷனெரி தரிசன நடுத்தர வாலிபர்கள்.  
திருப்பணிகள் : மிஷனெரிகள் மதுரையை நோக்கிய பார்வையும், பசுமலையை மையமாக தேர்ந்தெடுத்த தரிசனமும் மிக வல்லமை மிகுந்தது. ஊழியம்(இறைபணி) செய்ய வேண்டுமென்ற ஆவல் மிகுதி. அர்ப்பணித்தனர் தாங்கள் உடல் பொருள் ஆவி என்ற வாழ்வை. மதுரை, பசுமை பகுதிகளுக்கு மெய் வீரராக வந்து கோதுமை மணியாய் திருப்பணி ஏற்றனர். துதிப்போம் வாழ்த்துவோம் அண்ணல் இயேசுவை.  மிஷனெரிகள் ஆறுபேரும் இங்கேயே தங்கி, தங்களுக்கென பங்களாக்கள் கட்டி முடித்து குடும்பமாக குடியேறி தங்களை முற்றிலும் அர்ப்பணித்து பல பணிகள் செய்தனர். “தொண்டரின் பெருமை சொல்லவும் பெரிதே” – முதுமொழி.  பணி : THEIR MOTTO WAS DUTY. 
மிஷனெரிகள் தங்களது தேசபெருமை, குடும்ப பெருமை, குலப் பெருமை, உறவுகள், மதவழிபாடு, காலநிலை மாறுபாடு, பொருளாதார நிலை, பதவி, பட்டம், கல்வி, உத்தியோகம், உடல் ஆரோக்கியம், சுகாதார நிலை, நிறப்பெருமை, ஆரோக்கிய உணவு, மதவழிபாடுகள், மொழிவலிமை, செல்வம், நற்குடிபிறப்பு, சீர்சிறப்புகள் யாவற்றையும் மெய்யான தேவன் சித்தம் நிறைவேற பல மணி நேரங்கள் முழங்காலில் நின்று வேதம்வாசித்து கர்த்தருடைய வழிநடத்துதலை அறிந்து செயல்பட்ட அர்பணிப்பு மகத்தானது.
இவர்களில் மிகவும் முதன்மையானவர் கனம் Rev.,L.L.லார்பீர் மற்றும் அவரது மனைவி கனம் எல்வா லார்பீர் ஆவார்கள்.
“அர்பணித்தேன் என்னை முற்றிலுமாய், அற்புத நாதா உம் கரத்தில்
அனைத்தும் கிறிஸ்துவுக்கே, அனைத்தும் அற்பணமே 
நொறுக்கி வீழ்ந்தேனே உம் பாதத்தில் – துதிப்பாடல்
 
“கனி கொடுப்போமே, இயேசுவுக்காய் கனி கொடுப்போம்
கனிகளால் பிதாவை கனபடுத்துவோம், நிலைத்திருப்போம் – அல்லேலூயா
அர்ப்பணிப்பில் மிஷனெரிகள் : அவர்களைப்போல நம்மையும் அழைத்தவர் உண்மையுள்ளவர், புதிய தரிசனம், திட்டங்கள் செயல்படுத்த தேவன் கிருபை செய்வாராக.
ஆயத்தம் : கடவுளின் தொண்டர்கள் பசுமலை பெரியோர் முதியோர் கல்விமான்கள் பாதிரியார்கள் அதிகாரிகள் சபைமக்கள் யாவரும் சேர்ந்து ஆலோசனை கூட்டங்களை நடத்தி முன்னேற்றப் பணிக்கு திட்டமிட்டனர்-செயல்பட்டனர்-தேவனுக்கு-கீழ்படிந்தனர்.
பசுமை நிறைந்த பசுமலை பூமியில் இறைபணி, கல்விப்பணி, சமுதாயப்பணி, சுகாதாரப்பணி, களப்பணி, மருத்துவப்பணி, ஒழுக்கம், சாலைகளை ஒழுங்குபடுத்துதல், மூடப்பழக்கம் களைதல், ஜாதி மதம் பேதம் ஒழித்தல், என பல சீர்திருத்தங்கள் செய்ய துவங்கினர். பசுமலை என்ற பூமியில் தேவனுக்கு கீழ்ப்படிதல் தேவனுக்கு முன் தாழ்மைப்படுதல் தேவனையே சார்ந்து வாழும் சிந்தனையை கற்ப்பித்தனர்.
கல்விப் பணியையும் இறை பணியையும் இரு கண்கள் என போற்றினர். மருத்துவப்பணி ஒரு தெயவீகப்பணி என்று செயல்படுத்தினர். மக்கள் வசிக்கும் பகுதியில் ஒரு பெரிய “வளாகம்” அமைத்தனர்.
இறைப்பணி : சங்கீதம் : 27-4 நான் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.
1845இல் பசுமலையில் "புதிய இங்கிலாந்து திருச்சபை" (New England Church) உருவானது. அன்று மிஷனெரிமார்களும் செமினரி மாணவர்களும்தான் ஆரம்ப அங்கத்தினர்கள். பசுமலை தந்தை என்று போற்றப்படும் "Rev வில்லியம் டிரேசி" தான் முதல் போதகர். அமெரிக்க மிஷன் இவருடன் மிஷேனரி செர்ரி என்பவருடன் இந்த ஆலயத்தை கட்டினார்கள்.  பின்னர் இந்த ஆலயம் 1846 இல் ஆரம்பிக்கப்பட்டு 1847இல் முடிக்கப்பட்டது. எமது பசுமலை மக்காளால் "பழைய கோவில்" அல்லது "சின்னக் கோவில்"  என்று வழங்கப்பட்டது.   பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்  இதை "கிண்டர்கார்டன்" (Kindergarten) என்று அழைக்கிறார்கள்.  அன்றைய நாட்களில் சுமார் Rs.2853 செலவில் கட்டப்பட்டதாக கூறுகிறார்கள் . அதில் சுமார் 250 நபர்கள் மட்டுமே அமரக்கூடியது.       
ஆக விஸ்தரிப்பு நோக்கில் அதிகம் நபர்கள் அமரக்கூடிய தேவாலயம் பசுமலையில் 1904இல் ஒரு பெரிய அளவில் கட்டினர்,. மேலும் மிடுக்காக, குளிர்ச்சியாக,  தெய்வீக அமைதி தரும் வகையில் அமைந்துள்ளதுதான் தற்பொழுது இருக்கும் “CSI WHITIN MEMORIAL CHURCH” 
பாடல் :
கவலைக் கண்ணீர் போக்கும் ஜெப ஸ்தலம் வாரீர்
பாவிகளின் பரிகார ஸ்தலம் இவ் தேவாலயம்
ஆராதிக்க ஒரு கூடம், அதுவே பசுமலை தேவாலயம் 
   அறியாமை அகற்றும் பசுமலை உயர்நிலைப்பள்ளி
   ஏழைகளின் அடைக்கல ஸ்தலம் இப்பள்ளி
   குழந்தைகளின் அறிவு சிந்தனை வளர்ச்சிக்கும் இப்பள்ளியே!!
இதுவே மிஷேனரிகளின் சமர்பண்.
19ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட, மதுரை அத்தியட்சாதீனத்திற்கு உட்பட்ட தேவாலயம் இதுவே.  இவ்வாலயம் மதுரையின் “HOME CHURCH” எனப்படும்.
இதைத்தாண்டி முக்கியமாக ஆசிரியர் குடியிருப்பு, செமினரி குடியிருப்பு, அச்சக பணியாளர் குடியிருப்பு, அரங்கசாலையில் குடியிருப்பு, சுகாதார பணியாளர் குடியிருப்பு மற்றும் அவர்களுக்கு குடிநீர் வழங்க ஒரு தொட்டி கட்டி அங்கிருந்து செட்டியார் hostel அருகில் ஒரு தொட்டிக்கு வந்து இந்த இடங்களுக்கு குழாய்மூலம் குடி தண்ணீர் மக்களுக்கு வழங்கப்பட்டது. இவற்றிற்கு தண்ணீர் வழங்க ஒரு பெரிய கிணறு அரங்கசாலையில் தோண்டப்பட்டு இன்றும் இருக்கிறது.  முக்கியமாக “ஜோன்ஸ்புரம்” என்று நான்கு தெருக்கள் பசுமலையில் அமைக்கப்பட்டுள்ளது. இரவில் சுமார் எட்டு மணியளவில் தெருவில் நடந்துசென்றால் பொதுவாக அனைவரின் வீட்டில் இருந்து பாடல் மற்றும் வேதம் வாசிப்பது, ஜெபிப்பது கேட்கும். இது ஒரு வித்தியாசமான அனுபவம் மட்டுமல்ல, இன்றைய நாட்களில் நமது குடும்பங்கள் இதைச் செய்கின்றதா என்று சிந்திக்கும் தருணம். குடும்பங்கள் ஆண்டவருக்குள் ஆசிர்வதிக்கப்பட இந்த குடும்ப ஜெபம் முக்கியம்.      
அதின் நடுவில் ஒரு பெரிய நல்ல தண்ணீர் கிணறு அனைவருக்கும் வாளி வைத்து எடுக்கும் முறையில் அமைந்தது. அதன் அருகில் ஒரு நூலகம் அமைக்க ஒரு இடமும் ஒதுக்கபட்டது.  இவ்வாறாக பசுமலைப் பள்ளியின் மேலே மூன்று பங்களாக்கள் ஒரே மாதிரி கட்டப்பட்டது. ஆசிரியர் குடியிருப்பு உள்ளே ஒரு சிறிய மருத்துவமனையும் அதனை ஒட்டி ஒரு குழந்தைகள் காப்பகமும் இருந்தது. மூன்று இடங்களின் விளையாட்டு மைதானங்களும், மூன்று இடங்களின் தோட்டங்களும் வைத்து பராமரிக்கப்பட்டன. தோட்டங்களில் நெல், காய்கறிகள், கீரைகள் பயிரிடப்பட்டு மக்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது.    
அரங்கசாலையில் ஒரு “இறையியல் கல்லூரி” Red House என்று அழைக்கப்படும்படி நடத்தப்பட்டு அனேக மக்கள் ஆண்டவரின் ஊழியத்திற்கு தங்களை ஆயத்தப்படுத்த இங்கே பயின்றனர். 
ஆண்டவரின் அருளால் மிஷனெரிமார்கள் அவர்களுக்கு மட்டுமல்ல அவர்களைச் சார்த்து இருக்கும் அனைவருக்கும் பயன்படும் விதத்தில் கூட்டு முயற்சியால் இவையாவும் உருவாக்கப்பட்டதுதான் இந்த பசுமலையின் முக்கிய சிறப்பு.      
 
கல்விப்பணி : அகவிருள் நீக்கி, அறிவொளி பெறச் செய்தனர், அமெரிக்க மிஷனெரிமார்கள்
ஆலயமும் உயர்நிலைப்பள்ளியும் ஒரே வளாகத்தில் கட்டப்பட்டுள்ளது இதன் சிறப்பு. ஆலயமும் அது சார்ந்த கட்டிடங்களும் பள்ளிக்கூடமும் அது சார்ந்த கட்டிடங்களும் பசுமலைக்கு பெருமை சேர்க்கின்றன.
மணி சத்தம் கேளீர் ----- எசேக்கியேல்43-5 கர்த்தரின் மகிமை ஆலயத்தை நிரப்பிற்று. மத்தேயு 4-15 இருளில் இருக்கின்ற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்
மதுரை-திருநெல்வேலி-கன்னியாகுமரி (GST) நெடுஞ்சாலையின் ஓரமாக அமைந்துள்ளது தான் இந்த தேவாலயம். அதன் பின்னால் காணப்படுவது உயர்நிலைப்பள்ளி. உயரமான கோபுர மணிக்கூண்டு இரு கட்டிடங்களிலும் உண்டு.  கோபுர உச்சியின் உள்பகுதியில் வெண்கல மணி பொருத்தப்பட்டுள்ள்ளது. வட்ட வடிவ சக்கரம் ஓன்று, மணியோடு தொடர்புகொண்டு இயங்குவதற்கு தாங்கிப்பிடித்துள்ளது. கோபுரத்தின் அடித்தளத்திலிருந்து ஒரு கயிறு சக்கரத்தில் தொங்கவிடப்பட்டு சக்கரம் சுழல ஏதுவாக அமைகிறது.  அடித்தளத்திலிருந்து மேலும் கீழுமாக கயிற்றை இழுத்தால் சக்கரத்தோடு தொடர்புடைய வெண்கலமணி தொட்டி ஓசை எழுப்பும். அதுமட்டுமின்றி தவறாது நேரத்தைக் காட்டுவதற்கு ஒரு கடிகாரம் பொருத்தப்பட்டுள்ளது.  இதின் மேலே ஏறுவதற்கு படிகளும் அமைக்கப்பட்டுள்ளது.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று :  எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் – தெரிந்து கொள் – நான் உரக்க ஒலிக்கும் மணியோசை : வாரீர் வந்து பாரீர்.
மூன்று மணிகள்  அமெரிக்கா நாட்டின் BOSTON நகரத்திலிருந்து வரவழைக்கப்பட்டு சுமார் 336 ராத்தல் எடைகொண்ட ஒரே எடை கொண்ட ஒரே ஓசை கொண்ட இரண்டு மணிகள், ஓன்று நமது பசுமலை கிருஸ்தவ ஆலயத்திற்கும், ஓன்று திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கும் அங்குள்ள நிர்வாகிகள் மற்றும் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப மிஷனேரிமார்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.   மற்றுமொரு மணி வேறு அம்சங்களுடன் பள்ளிக்கு பொருத்தப்பட்டது.
பசுமலையில் ஆலய கோபுரத்தில் ஒரு மணிக்கூண்டு, கல்விக்கூடத்தில் ஒரு மணிக்கூண்டு உண்டு.  இரு மணிகளில் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது.  இதுவே கோபுரங்களின் சிறப்பு அம்சமாகும்.
ஆலயமணி : ஒரு அழைப்பு மணியாகும். மணி இசை கேட்ட உடன் மனுக்குலமே எழுந்து அணி அணியாய் புறப்பட்டு இறைவனை தரிசிக்க விரைந்து செல்! வேகமாக போ! என்பதாகும்.
பள்ளி மணி : ஒரு எச்சரிப்பு சத்தமாகும்! இச்சத்தம் கேட்டவுடன் கல்வி கற்க பள்ளி நோக்கி விரைந்து செல்.  நடக்காதே, ஓடு, விரைந்து சென்றடை என்பதுபோல் ஒலிக்கும்.
மணி ஓசையானது வெகு தொலைவில் உள்ளவர்க்கும் கேட்கும்படியாக அமைக்கப்பட்டுள்ளது
வேறுபாடு “ இரண்டு மணி சத்தத்தின் ஒலிகள் வேறு இசையில் ஒலிக்கிறது. ஒலியின் மெல்லிய இசையை நோக்கின் இது ஆலயமணி இசை ஒலியா அல்லது பள்ளியின் மணி ஒலி சத்தமா என வேறு படுத்தி அதற்கு இசைய செயல்படமுடியும்.  இரண்டு மணிகளும் வெவ்வேறு சமயங்களில் மாறுபட்ட தொனியில் ஒலிக்கும் தன்மை உடையது. இதன் அம்சம்.
சிறப்பு அம்சம் : இதில் வரலாற்று சிறப்பு யாதெனில், “பசுமலை” என்ற கிராமம் மதுரையின் தென்வாயில் எனப் புகழப்படுகிறது. குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் மதுரை திருமண்டலத்தின் மணி மகுடம் பசுமலை.   மதுரை முகவை அத்தியட்சாதீன அலுவலகம் பசுமலையில் தான் ஆரம்பிக்கப்பட்டது. மதுரை முகவை அத்தியட்சாதீன “சின்னம்” DMR Diocese Logo எனது தந்தை பசுமலை ஓவிய ஆசான் திரு C.V. ஜான் அவர்களால் 1958ல் குழு அமைத்து, பின்னர் 1961ல் மதுரை முகவை அத்தியட்சாதீன ஆட்சிக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது.   அதன் வரலாறு கீழ்க்கண்ட இணையதளத்தில் பார்க்கலாம் :  
https://paulshumanmanagement-in.webnode.in/news/logo-of-c-s-i-madurai-ramnad-diocese/
OR
https://paulshumanmanagement-in.webnode.in/
Mr.C.V.JOHN, Drawing Master , Pasumalai 
 
தென்னிந்திய திருச்சபை மதுரை முகவை அத்தியட்சாதீன சின்னம் .(CSI DIOCESE OF MADURAI & RAMNAD)
 
ஆக மதுரை அத்தியட்சாதீன அப்போஸ்தலர் எனப் புகழப்படுகிறார் கனம் Rev L.L லார்பீர் அவர்கள்.  பாசத்தின் உறைவிடம், அன்பின் ஆழம், இறை சிந்தனையுடன் எந்த பாகுபாடும் காட்டாத செயல்வீரர். நமது பசுமலை கிராமத்தில் இது போன்ற நிறைய பெரிய சாதனையாளர்கள், சீர்திருத்தவாதிகள், அனேக அளப்பெரிய காரியங்கள் செய்துள்ளனர். வாழ்க அவர்கள் புகழ்.
“சாதனை வீரர்களின் அடிச்சுவட்டில் நடப்போம்.
தரணியில் இயேசு பெருமானின் அன்பைக் கூறுவோம்”. 
 
நாங்கள் பசுமலை அந்தநாள் வாலிபர்கள் படித்து வளர்ந்து பார்போற்றும் அகில உலகெங்கும் புகழ் சேர்த்தோம்.  பசுமலையில், உண்மையில் பரலோக வாழ்வை அனுபவித்தோம். உண்மையில் இச்சிற்றூர் ஒரு குட்டி பரலோகம் என்பதில் மகிழ்ந்து இயேசுவை துதிக்கிறோம்.
அதுமட்டுமல்ல, வாரவிடுமுறை மற்ற விடுமுறை நாட்களில், சுமார் 1௦ குடும்பங்கள் சேர்ந்து மொத்தமாக ஆட்டுக்கறி, மீன் எடுத்து பிரித்துக் கொள்ளுவது வழக்கம். முக்கியமாக வேட்டைக்கு சென்று அதில் கிடைக்கும் வேட்டை கறியையும் அனைவரும் பிரித்துக் கொள்ளுவது வழக்கம். அவ்வளவு நெருக்கமான உறவு கொண்டு இருந்தார்கள் நமது மூதாதையர்கள், யாரும் எந்த ஜாதி என்று எவருக்கும் தெரியாது. ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு கிடையாது.        
“நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
நாவாலே துதிக்கிறோம் நாதா, நன்றி இயேசு ராஜா”
----
அல்லேலூயா, அல்லேலூயா, ஆ ஆ ஆமென், இயேசுவை நேசி, அவரையே ஆசி.
வாழும்வரை வல்லவர் இயேசு நாதர் புகழ் பரப்புவோம்.
---
LOVE DIVINE(தெய்வீக அன்பின் திருக்காட்சி)  :-  மற்றுமொரு வரலாற்று மிக்க முக்கிய நிகழ்வு ஊழியமான "தெய்வீக அன்பின் திருக்காட்சி" என்ற தமிழ் இயல், இசை, நாடகம். இந்த ஊழியம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, வளர்ப்பு, அவரின் அற்புதங்கள், சிலுவைப் பாடுகள், மரணம் மற்றும் உயிர்த்தெழுந்து பரமேறுதல் போன்ற காட்சிகளுடன் தத்ரூபமாக பசுமலை மக்களால் நடித்துக் காண்பிக்கும் ஒரு ஊழியம்.  இதை கனம் L.L.லார்பீர் அவர்களுடன் பல பசுமலை பெரியவர்கள் சேர்ந்து ஆரம்பித்தனர். இதன் 300 மீட்டர் நாடக மேடை இயற்கை மலையில் செதுக்கபட்டது.  இதை எனது தந்தை ஓவிய ஆசான் திரு C.V.ஜான் அவர்களின் மூன்று ஆண்டுகளாக(1942-1944) இரவு பகலாக அரும்பாடுபட்டதின் வெளிப்பாடு ,சீரிய முயற்சி என்பதில் பெறும் மகிழ்ச்சி அடைகிறேன். 1942இல் இந்த நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு இந்நாள்வரை நடைபெற்றுக் கொண்டிருப்பது ஆண்டவரின் கிருபை. இந்த வகையிலான "திறந்த வெளி அரங்கம் " ஆசியாவிலேயே மிகச்சிறந்தது என்று கூறப்படுகிறது. 1977இல் எனது தகப்பனார் இறக்கும் வரையில் பல மாற்றங்கள் அவ்வப்போது செய்து அதைப் பொறுப்பேற்று நடத்தினார் என்றால் அது மிகையாகாது.  ஆண்டவருக்கே துதி ஸ்தோத்திரங்கள்      
     .
நான் மிஷேனரி கிராமமாம் பசுமலை மண்ணில் மதிப்பிற்குரிய ஓவிய ஆசான் திரு C.V.ஜான் அவர்களுக்கு கடைசி மகளாக பிறந்து, வள்ளியூரில் மனம் முடித்து பாளையங்கோட்டை என்ற மற்றொரு மிஷேனரி நகரத்தில் வாழும் ஓய்வுபெற்ற முதுகலை ஆசிரியை என்பதில் பெருமிதம் கொள்ளுகிறேன்.
இப்படிக்கு
Mrs G Z Annie Bai John, M.Sc., B.Ed.,  
w/o S.V.D GNANADURAI
பாளையங்கோட்டை, திருநெல்வேலி