என் பலவீனத்திலே உம் பெலன்

29/07/2017 14:51

என் பலவீனத்திலே உம் பெலன்.

பெலன் என்றால் என்ன? பெலவீனம் என்றால் என்ன?

 ஒரு வேலை நீங்கள் நினைக்கலாம் ஏன் இந்த பெலவீன நிலை எனக்கு வந்தது.  மனிதன் இந்த உலகத்தில் பிறந்த நாள் முதல் இறக்கும் நாள் வரை ஏதோவொரு பெலவீனம் அவனை ஆட்கொள்கிறது. நடைமுறை வாழ்க்கையை பொறுத்தவரை, ஒரு காரியத்தை சரியாக முடித்தால் பெலன் என்றும், முடிக்கமுடியவில்லை என்றால் பெலவீனம் என்றும் பொருள் கொள்ளலாம். ஒருவருடைய பெலன் இன்னொருவருக்கு பெலவீனம் அதே போல் ஒருவருடைய பெலவீனம் இன்னொருவருக்கு பெலன்.  ஒரு மனிதனுடைய சுய பெலன் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கோ அல்லது நாட்களுக்கோ மட்டுமே இருக்கும். ஆக ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் பெலனோடு வாழ்வது நமது கைகளில் கிடையாது.  நல்ல சாப்பாடு, உடற்பயிற்சி, எல்லாம் இருந்தாலும் பெலவீனம் எல்லாருக்கும் ஏற்படும். எனவே நமது பெலவீனத்தில் நமக்கு உதவி செய்வதற்கு யார் வர முடியும்.

 


II கொரிந்தியர் 12:9 அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்..........

 

மனிதன் இந்த உலகத்திற்கு வரும்போது ஒன்றும் (பொருளும்) கொண்டு வந்ததுமில்லை, ஒன்றும் கொண்டு போவதுமில்லை என்று பெரியோர்கள் கூறுவார்கள், ஆனால் உண்மை எது என்றால், ஒருவன் இந்த உலகத்திற்கு வரும்போது உறவுகளை சேர்க்கிறான் அல்லது கொண்டுவருகிறான். அதாவது மகனாக, மகளாக, பேரனாக, பேத்தியாக, அண்ணனாக, தம்பியாக, ........பிறந்த குழந்தைமுதல் ஒவ்வொரு வயதுக்கும் பல வகையான பெலவீனம் நேரிடும். ஆகவே பெலவீனம் நமது மனித வாழ்வில் ஒரு அங்கம் என்றே கூறவேண்டும்.  ஆனால் இந்த உலகத்தை விட்டு போகும் போது நாம் சேர்த்த “கண்ணுக்கு தெரியும் பொருள்கள்(Visible things)” மற்றவர்களின் பொருள்கள் ஆகிவிடும், நம்முடனும் வராது ஆனால், நம்முடைய “கண்ணுக்கு தெரியாத(Invisible things)” குணநலன்கள் மட்டும் நம்மை பற்றி பறை சாற்றிக்கொண்டிருக்கும். சரீர பெலவீனம், ஆன்மீக பெலவீனம் என இரண்டு பெலவீனம் மனிதர்களிடத்தில் இருக்கிறது. இங்கே கண்ணுக்கு தெரியும் பெலவீனம் சரீர பெலவீனம் என்றும், கண்ணுக்கு தெரியாத பெலவீனம் ஆன்மீக பெலவீனம் என்றும் பொருள் கொள்ளலாம்.

 

"கடவுள் (அவர்) சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்.” என்ற வேத வாக்கை நாம் நம்பி பின் பற்றினால் மட்டுமே இந்த இரண்டு பெலவீனங்களையும் மேற்கொள்ளமுடியும்.

பெலவீனம் என்பது, வலுக்குறைவு , தளர்வு, தளர்ச்சி , மெலிவு, பலமின்மை , பலவீனம், துர்ப்பலம், சத்துவக்கேடு, பலக்கேடு , பலட்சயம்,  தளர்வு, குபலம், சிங்கல், தள்ளாமை, ஓய்வு , ஓயல், தொய்வு, காதுவிடாய், அசத்தி, போன்ற  இந்த மாதிரி காரியங்கள் நம் வாழ்வில் அன்றாடம் இருப்பது அல்லது நடப்பது இயற்கை.

Weakness என்பதற்கு தமிழில் அர்த்தங்கள் பல உண்டு:

weakness : வலுக்குறைவு , தளர்வு .

weakness : தளர்ச்சி , மெலிவு .

weakness : பலமின்மை , பலவீனம் .

பலவீனம் , weakness .

துர்ப்பலம் , infirmity , weakness .

சத்துவக்கேடு , weakness , debility .

பலக்கேடு , -வீனம் , -ட்சயம் , weakness .

தளர்வு , staggering , weakness , relaxing .

குபலம் [ kupalam ] , (கு , bad) weakness , loss .

சிங்கல் , diminishing ; 2 . weakness , exhaustion .

தள்ளாமை , neg . weakness , feebleness , impotence .

ஓய்வு , ஓயல் , cessation , ceasing , rest , weakness .

தொய்வு , fatigue , weakness , difficulty of breathing .

காதுவிடாய் , weakness in hearing caused by extreme hunger .

அசத்தி [ acatti ] , (அ priv .) want of strength , weakness , பலவீனம் .

ஆனால் அவற்றை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பது தான் முக்கியம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி பெலவீனம் இருக்கும். இதை தடுக்க நாம் நமது சுய பெலத்தினாலும் முடியாது, அடுத்தவர் தயவினாலும் முடியாது. ஆனால், “என்னை பெலப்படுத்துகிற ஒரு சக்தியாலே எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலன் உண்டு என்று நம்புவதுதான்” அதை தடுக்க ஒரேயொரு வழியாகும். அந்த சக்தி எது? இதை போல் தான் எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் குடும்ப வாழ்க்கையிலும் பெலவீனங்கள் அனுதினமும் வந்தவண்ணம் இருக்கும். அவற்றை பற்றியும் அவற்றை எதிர்கொள்வது எப்படி என்பதை பற்றியும் இப்பொழுது காண்போம். நடைமுறைக்குரிய அனுதின வாழ்வை நாம் நம் ஒவ்வொருவர் வாழ்விலும் ஒப்பிட்டு பார்த்தால் அவைகள் நம் வாழ்விற்கு உகந்தவையாக இருக்கும். ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது மேலும் சர்க்கரை என பேப்பரில் எழுதினால் நக்க முடியாது. அது போல, நமது வாழ்வில் நடைமுறைக்கேற்றால்போல் சீர் தூக்கிப்பார்பது அல்லது செயல்முறை மேற்கொள்ளல்தான் நல்லது. காய்ச்சலும் தலைவலியும் அவரவருக்கு வந்தால் தான் தெரியும் என்பது போல, நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பெலவீன காரியங்களும் அவரவருக்கு வந்தால் தான் தெரியும்.

 

எனது சாட்சி:  நான் ஒரு கிருஸ்தவ பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்தவன். எனது தகப்பன் வழி பாட்டன் திரு.C.V.John (நாகர்கோயில்) , மறைந்த ஓவிய ஆசிரியர் ஆவார். எனது தாய் வழி பாட்டனார் திரு.பாலையா நாசரேத் அருகில் உள்ள மெய்ஞானபுரம் என்ற ஊரில் மிகவும் வசதியாக இருந்தபோது இறந்துவிட்டார்.  ஆகவே எனது தாயாரை அவரது ஆறு சகோதர சகோதரிகளையும் அவரது அண்ணன்தான் வளர்த்தார்.  எனது பிறப்பு பற்றி கூறும்போது, எனது தகப்பனார் திரு.B.M.சாமுவேல்ராஜ் ஜான் அவர்களும், எனது தாயார் திருமதி.B.இரத்தினமணி சாமுவேல்ராஜ் அவர்களும் ஆவார்கள். அவர்களுக்கு 1961ம் வருடம் டிசம்பர் 15ல் இரண்டாவது மகனாக பிறந்தேன். எனக்கு ஒரு அண்ணன், ஒரு தம்பி ஆக 5 நபர்கள் உள்ள ஒரு நடுத்தர குடும்பம். எனது பெற்றோர்கள் இருவரும் இடைநிலை பள்ளி ஆசிரியர்கள் ஆவார்கள். அளவான வாழ்க்கையில் உலகபிரகான சேமிப்பு என்பது அதிகம் இல்லாத ஒரு குடும்பம். எனது தகப்பன் வழி வீடு ஓன்று மட்டும் இருந்தது.  நாங்கள் மூவரும் ஆண்களாக இருப்பதால் ஒரு மிகபெரிய கண்டிப்பு வீட்டில் இல்லாத நிலையில், எனது தாயார் செய்த நேர்மையான ஜெப வாழ்க்கை எங்களை அதிகம் கவர்ந்தது. அனுதின குடும்பஜெபம், வேதம் வாசிப்பது, தசமபாகம் கொடுப்பது, மற்றவர்களை உபசரிப்பது, ஊழியர்களை மதிப்பது போன்ற பல நல்ல குணங்களை எனது பெற்றோர்கள் மூலம் செயல் விளைவாக எங்களுக்கு வந்தது என்றால் அது மிகை ஆகாது. எவ்வகையிலும் இரவு விளக்கு போடும்முன் வீட்டுக்கு வரவேண்டும் (பள்ளி கல்லூரி காலங்களில்) என்பது எனது தாயாரின் முதல் விருப்பம் அதுதான் வழக்கம்.  எனது தாயார்ஒரு விசுவாச ஜெப வீராங்கனை என்பதில் ஐயமேயில்லை. அனுதினமும் பசுமலை, பைக்காரா, அழகப்பநகர், முத்துப்பட்டி போன்ற பல ஊர்களுக்கு பள்ளி மாணவிகளுடன் பள்ளி முடிந்தவுடன் சென்று அவர்களின் வீட்டில் உள்ளவர்களுக்கு ஜெபிப்பது வழக்கம்.  மதியம் அவர்களின் வகுப்பு அறையில் பலர் ஜெபிப்பதற்கென்றே கூடுவது வழக்கம். ஆக அவர்கள் மதியம் சாப்பிடுவது கிடையாது என மற்றவர்கள் மூலம் பிற்பாடு அறிந்தேன்.  பல நல்ல சாட்சிகள், காரியங்கள் பலரின் வாழ்க்கையில் நடந்தது நான் பார்த்த உண்மை.  விடுமுறை நாட்களிலும் எனது வீட்டில் அனேக பெண்கள் தாங்கள் குடும்பங்களுக்காக ஜெபம் செய்ய வருவது உண்டு. எனது தகப்பனாரும் நல்லாசிரியர் விருது பெற்றவர், மேலும் பல மிசநெறி ஸ்தாபனங்களில் பல பொறுப்புகள் வகித்தவர். பசுமலை திருச்சபையில் பல ஆண்டுகள் செயற்குழு உறுப்பினராகவும், தெய்வீக அன்பின் திருக்காட்சியின் இயக்குனராகவும் இருந்தவர்.

1.எனது சிறு வயது, பள்ளி மற்றும் கல்லூரி பருவம் சுமாராக கடந்து சென்றது. கல்லூரியில் ஆரம்பித்த எனது தோல்வி தொடந்து வந்தது. B.A(Eng.) ஒரு வழியாக பாஸ் பண்ணிவிட்டேன். பிறகு  M.A(Eng), PGDCA, CCA, ஆகியவை படிக்க ஆரம்பித்தேன் ஆனால் சரிவர முடிக்கமுடியவில்லை. ஏன் என்றால் நான் விளையாட்டு துறையில்(கால்பந்து மற்றும் அதெலேடிக்ஸ்) அதிகம் கவனம் செலுத்தியதால். ஒரு வேலை நான் கல்லூரியில் அதெலேடிக்ஸ் சாம்பியன் ஆகினாலும், மாநில மற்றும் மாவட்ட அளவில் பல பரிசுகள் வென்றாலும் அதனால் ஒரு நல்ல அரசாங்க வேலையும் கிடைக்கவில்லை. ஆனால் பிறகு 2008ஆம் ஆண்டு   M.B.A(HR) மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் முடிக்க கிருபை செய்தார் ஆண்டவர். முதலில் எனக்கு 1982டில் Rs.450/-க்கு இரண்டு வேலைகள் கிடைத்தது.(MEPCO &  TNSTC(Govt) இரண்டிலும் ஒரே சம்பளம் ஆகையால், MEPCO வில் எனது தாயாரின் சித்தப்பா தலைவராகையால் அதில் சேர்ந்தேன். பின் 1988யில் திருமணம் ஆனது. அப்பொழுது எனக்கு சம்பளம் Rs.850/-. எனது திருமணதிற்கு ஒன்பது நாட்கள் முன்பாகத்தான் எனது தாயார் கான்சரில் இறந்துவிட்டார். 1989யில் எனது மகன் P.S.Samuel Ratna Kumar பிறந்தான், பிறகு நாங்கள் தனியாக ஒரு வாடகை வீட்டில் வசிக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதினால் RICE MILL LINE, பசுமலையில்  இருந்தோம். அவனுக்கு பால், மருந்து, மற்றும் பொருள்கள் வாங்க பணம் பத்தவில்லை, எனவே O.T இருந்தும் பயன் இல்லை. அப்பொழுது தான் எனது சித்தி திருமங்கலம் B.எஸ்தர், டீச்சர் அவர்கள் எனது குடும்ப நிலையை ஜெபத்தின் மூலம் அறிந்து உதவினார்கள். அவர்கள் எனது தாயாருக்கு பிறகு எங்களது ஆவிக்குரிய தாய் என்றே கூறலாம். ......ஒரு நாள் காலை வேளையில் வேலைக்கு செல்லும்போது என்னிடம் Rs.0.50 பைசா மட்டுமே இருந்தது, அதாவது Rs.0.75 பைசா இருந்தால்தான் அந்த பேருந்து நிறுத்தத்தில் ஏற முடியும் ஆகவே அடுத்த பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்று தான் ஏற வேண்டும், மாலை வர ஒரு பைசா கூட இல்லை. நான் வாழ்நாளில் காணாத அவ்வளவு வறுமை. அன்று வேலை பளுவின் நிமித்தம் அந்த காசு இல்லாத காரியம் அதுவரை தெரியவில்லை, ஆனால் மாலை சுமார் 4.45 மணியளவில்  எனது சித்தியிடமிருந்து ஒரு போன் வீட்டுக்கு வருமாறு அழைப்பு வந்தது. பிறகு  5.00 மணிக்கு வேலை முடிந்ததும், ஒருவருடன் மிதிவண்டியில் திருமங்கலத்தில் எனது சித்தி வீடு சென்றேன். எப்பொழுதும் போல காப்பி, தின்பண்டங்கள் கொடுத்துவிட்டு, ஜெபம் பண்ணிவிட்டு, தம்பி உனக்கு Rs.2000/- (இப்பொழுது அந்த பணம் Rs.20000/-திற்கு மேல் பெரும்) கொடுக்கவேண்டும் போல தோனுகிறது என்றும், சீனி, அரிசி, சில சாமான்கள் எல்லாம் வாங்கி வைத்திருந்து அவற்றை கொடுத்து அனுப்பினார்கள். அன்று நானோ எனது மனைவியோ அவர்களிடம் இதை பற்றி ஏற்கனவே கூறவில்லை. இதை என்னவென்று சொல்லுவது.

2.எனது இந்த சிறிய சம்பளத்தில், எனது மனைவியை மேலும் படிக்கவைத்தது மிகவும் அதிசயம். திருமணத்தின்போது அவர் M.Com. மட்டுமே படித்திருந்தார். பிறகு B.Ed., M.Ed., PGDCA அவ்வளவும் எனது சிறிய சம்பளத்திலேயேயும் எனது சித்தி உதவியினாலும் படிப்பை முடித்தார். பிறகு அவர் பசுமலை ஆண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் O.C.P.M. பள்ளியில் TUTOR ஆக ஓன்பது வருடங்கள் பணியாற்றினார். அதுவும் மிகவும் குறைந்த சம்பளம் Rs.1000/-(பேருந்து கட்டணமே பாதி). 1996ஆம் வருடம் எனது மகள் பிறந்தாள்.  1998வது வருடம் எனது தந்தை, நான், எனது மனைவி அனைவரும் சில நண்பர்கள் மூலம் நிரந்தர வேலை இருப்பது அறிந்து அப்பொழுது Bishop ஆக இருந்த மதிப்பிற்குரிய பேராயர் தவராஜ் டேவிட் அய்யா அவர்களிடம் ஒரு Appeal கடிதம் மட்டும் கொடுத்தோம். பிறகு சில மாதங்களில் (1998வது வருடம்) அரசு சம்பளத்துடன் சிவகாசி, சாட்சியாபுரம் பள்ளியில் CSI திருமண்டிலம் வாயிலாக PG Asst (Commerce) நிரந்தர வேலை கிடைத்தது. வேலைக்கு சேர்வதற்கு அந்த நேரத்தில் கட்டிட நிதியாக Rs.100000 கட்ட வேண்டும், ஆனால் எனக்கு Rs.40000/- மட்டுமே கட்டினால் போதும் என்றார்கள். அதுவும் நான்கு அதிகாரிகள் ஆளுக்கு ஒரு நபரை முன்மொழிந்த போதும், அந்த நால்வரில் யாரை போடுவது என சிக்கல் வரும் போது, அந்த ஒரு கடிதம் மூலம் கடவுள் உதவி செய்தார். ஐந்தாவது நபரான பேராயர் ஐய்யா அவர்கள் இந்த கடிதத்தில் உள்ள நபரையும் சேர்த்து ஐந்து பேரில் யார்  மூத்த நிலையில்(Seniority) இருக்கிறார் என்றார். சில மணித்துளிகள் கழித்து அனைவரும் ஐந்தாவது நபரான சாந்தி சகிலா (எனது மனைவி பெயர்) என்றனர். உடனே பேராயர் பணிஆணையில் கையப்பம் இட்டு எழுந்து சென்று விட்டார். நான்கு அதிகாரிகளுக்கும் அதிர்ச்சி, ஆனால் ஒன்றும் பேசமுடியவில்லை மூத்த நிலையில் இருப்பதால். பிறகு சில நாட்கள் கழித்ததான் அவர்கள் அனைவரும் சமாளித்து கையப்பம் இட்டனர். இதை யாருடைய செயல் என் கூறுவது.

3.எனது மகள், P.S.Deborah Ratna, 1996ஆம் வருடம் பிப்ரவரியில் பிறந்தாள். அதன் பிறகு மகள் சுமார் ஒன்பது மாதங்கள் எனது மாமனார் வீட்டில் இருந்தாள். அப்பொழுது அவளுக்கு உடல் வளரவேயில்லை, மேலும் அடிக்கடி சுகவீனம், பால், குடிப்பதிலும் சோர்வு.  அப்பொழுது 1996 டிசம்பர் மாதம், நாகர்கோயில் C.B.H என்ற பெரிய மருத்துவமனையில் சேர்த்தார்கள், இரவு நாங்கள் பார்க்கும்போது அவள் உடல் முழுவதும் குழாய்கள் பொருத்தப்பட்டு சிறிய அசைவோடு இருந்தாள்.  எனது சகலை திரு.சேகர் சொன்னார், அண்ணன், மதியம் மருத்துவர் சொன்னார் இவள் இறந்துவிட்டார் என்று. நான்தான் சொன்னேன், அவர்கள் பெற்றோர் வரும்வரை குழாய்கள் பொருத்தப்பட்டு இருக்கட்டும் என்று, ஆனால் இப்பொழுது அவளுக்கு உயிர் எப்படி வந்ததென்றே தெரியவில்லை.  மறுபடியும் அன்று, மருத்துவர்கள் பலர் சேர்ந்து இவள் ஒரு மறுபிறவி என்று, பல சோதனைகளை செய்து கடைசியாக, இவளுக்கு இருதய கோளாறு என்று கண்டுபிடித்தனர்.  அங்கே 15  நாட்கள் மருத்துவமனையில் இருந்தாள். ஆகவே இவள் இன்னும் ஒரு சில மாதங்களே உயிருடன் இருப்பாள் எனவும் கூறி மதுரைக்கு ஜவஹர் மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கேயும் அவளை பரிசோதித்தனர் 15  நாட்கள் கழித்து, இந்த பிள்ளை இன்னும் இரண்டு மாதங்களே இருக்கும் என சென்னை, ராமச்சந்திர மெடிக்கல் மிசன் செல்ல வேண்டும் என்றனர் அங்கே, Dr.Thanikachalam (MGRs Doctor) அவர்கள் அவளை முழுவதும் பரிசோதனை செய்து அவர்கள் பயிற்சி மருத்துவர்களிடம் இந்த குழந்தை ஒரு கடுமையான இருதய VSD கோளாறினால் இருக்கிறார் மேலும் ஓன்று அல்லது இரண்டு மாதங்களில் இறந்து விடுவார் என்றும் கூறினார். அப்படியே இருந்தாலும், நடக்க மாட்டாள். பேசுவது கடினம், மூளை வளர்ச்சியும் குறைவாய் இருக்கும், உடம்பு வளராது என கூறினார். நானும் எனது மனைவியும் அப்பொழுதுதான் ஒரு நிலைக்கு வந்து இவளை படைத்தது இந்த மருத்துவர்கள் அல்ல நமது ஆண்டவர் கொடுத்ததை அவர் நன்றாக கொடுக்கவேண்டும் அல்லது இப்பொழுதே எடுத்துக்கொள்ளவேண்டும் என் ஒரு சிறு ஜெபம் செய்துவிட்டு நான் மட்டும் மதுரைக்கு புறப்பட்டுவிட்டேன். அடுத்தநாள் எனது மனைவி, மாமியார், சகலை திரு.ஜான்சன் புறப்பட்டு மதுரைக்கு அவளை எடுத்து வந்துவிட்டனர். அப்பொழுது மருத்துவர்கள் இவளை நாங்கள் எங்கள் சொந்த முயற்சியில்தான் எடுத்து செல்கிறோம் என எழுத்து மூலம் வாங்கியபின் தான் அனுமதி கொடுத்தனர்.

அதன்பிறகு, பசுமலை நண்பர் தியாகராஜன் அவர்களின் மனைவி மருத்துவர் லலிதா தியாகராஜன் அவர்கள் MMC(மெட்ராஸ் மெடிக்கல் மிசன்), Chennai போய் பரிசோதனை செய்யசொல்லி அவர்கள் ஆலோசனையின் பெயரில் அறிமுகம் செய்துவைத்தார்கள் மதுரை, வடமலையான் மருத்துவர் பல திறமைகள் கொண்ட சிறந்தவர் Dr.B.R.J. கண்ணன் அவர்களை தொடர் சிகிச்சைக்காக. அவர் ஆரம்பத்தில் இவள் பூப்பெய்த மாட்டாள், உடல் வளர்ச்சி இருக்காது என கூறிவிட்டார். ஆனால் அவரைவிட பெரிய ஒரு மருத்துவர் அல்லது படைத்தவர் (CREATOR) அவளை பெரிய பெண்ஆக மாற்றிவிட்டார்.  ஒரு வருடத்தில் மரித்து போகவேண்டியவள், இப்பொழுது அவள் B.Com LDCயில் முடித்து C.A படிக்க தொடங்கிவிட்டாள்.  மருத்துவர் B.R.J.கண்ணன் அவர்கள் இதை அறிந்தவுடன் உங்கள் கடவுள் தான் இதை செய்தார் என கூறினார்.  யார் அந்த கடவுள்? 

4.எனது மகன் P.S.Samuel Ratna Kumar பிறந்து வளரும் போது மிகவும் துருதுரு  எனவும், சேட்டை அதிகம் செய்பவனாகவும் இருப்பான். நாங்கள் அவனை அடிக்காத நாட்களே இல்லை எனலாம். ஒரு சிலர் பசுமலை ரௌடி ஆக வருவான் என் கூறினார்கள். பிள்ளை நாளுக்கு நாள் வளர்ந்து, பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது அவன் தமிழில் பெயில் ஆகி விடிவான் lஎன அரையாண்டு பரீட்சை முடிவில் அவன் ஆசிரியர்கள் எங்களிடம் கூறினார்கள்.  ஆனால் அவன் பரீட்சை முடிவில் அந்த தேவசகாயம் பள்ளியின் 26 பெயரில் முதல் மார்க் தமிழில் வாங்கியவன் எனது மகன் தான். அது மாத்திரம் அல்ல, முதலில் (Karunya University) பொறியியல் படிப்பில் சேர்ந்தவனும் அவன் தான். அவனது B.E. மற்றும்   M.Tech, மற்றும்  Ph.D படிப்புக்கள் அனைத்தும் காருண்யா பொறியியல் கல்லூரி, கோவையில்தான் அதுவும் இந்த அளவுக்கு அவனை யார் நடத்தியது? இப்பொழுது நல்லதாக திருமணம் முடிந்து இரண்டு ஆண் பிள்ளைகளைப் பெற்றும் கோவையில்(Kumaraguru Collece of Technology) என்ற பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகிறான் என்றால் அது யாரால்? அவனும் தனது மாதா மாதம் கிடைக்கும் சம்பளத்தில் தசமபாகம் இதுவரை கொடுத்துவருகிறான். அதைவிட அவன் காருண்யாவில் படிக்கும் போதுகூட அவனுக்கு கிடைக்கும் நாங்கள் கொடுக்கும் சிறிய பணத்தில் ஒரு பங்கு எடுத்து எனது சித்தி எஸ்தர் டீச்சர் அவர்களிடம் மற்றும் திரு நெல்லை குமார் அவர்களிடமும் கொடுப்பது வழக்கம்.  நாம் நினைப்பதற்கும் வேண்டிக்கொள்வதற்கும் மிகவும் அதிகமாக கொடுக்கிறது யார்?  ஆக நான் இப்பொழுதே சொல்லும் காரியம் மிகவும் பெரியது.  ஆண்டவர் அவனை இப்பொழுது 29வயதில் ஒரு முனைவராக Doctorate(Phd) in Mechanical Engineering ஆக்கி, அவனது கல்லூரியில் சிறந்த ஆசிரியர் என்று 2016-17, 2017-18, 2018-19 ஆண்டுகளில் கவுரவிக்கப் பட்டான.  தற்பொழுது Dr P.S.சாமுவேல் ரத்னகுமார், PDF-UJ (அதாவது Post Doctoral Fellowship -University of Johannesburg (UJ) பெற்று ஆண்டவரின் அருளால் KCT, CBE யில் வேலை செய்து வருகிறான்.  

அவனே சொல்லுவது, daddy/mummy இது என்னால் முடியாதது ஆண்டவரே இதை முடிக்கச் செய்தார் என்று. ஆண்டவருக்கே மகிமை உண்டாவதாக.
 

5.நாங்கள் இப்பொழுது இருக்கும் எங்களது வீடு 1924லில் எனது தாத்தா வாங்கி    1930தில் கட்டினார்கள் 82வருடம் பழைமையானது. எனது தந்தைக்கு தனது ஒரு பையன் இந்த வீட்டை புதுப்பிக்கவேண்டும் என நினைத்து எனது பங்காக அதை  2012யில் முழுவதுமாக இடித்து புதிய வீடும் கட்டசெய்தார். யார் அவர்? இப்பொழுது உங்களுக்கு சொல்லபோகும் காரியம் மிகவும் ஆச்சரியம் உள்ளதாக இருக்கும். நான் எனது வீடு என்பெயரில் பாகம் பிரித்து உரிய முறையில் வந்த பிறகு, எப்படி கட்டுவது என்றே தெரியவில்லை. ஆனால், முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த நிலையில் எனது வங்கி கணக்கில் சுமார் Rs.350/- மற்றும் எனது மனைவியின் கணக்கில் சுமார்  Rs.1100/- மட்டுமே அதாவது SB A/c minimum balance (NIL) ஆக இருந்தது. இப்பொழுது நினைத்தாலும் அது எப்படி என்பது தெரியவில்லை. ஒரு முக்கியமான விசயம் சொல்கிறேன், பணம் கிடைக்கும் என்று நான் நினைத்த பணக்கார சொந்தத்தில் பணம் கிடைக்கும் சூழ்நிலை இல்லை, ஆனால் கிடைக்காது என்று நினைத்த வேற்று மத பெரியவர் எனக்கு உதவி செய்தார், அதுவும் இரண்டு மடங்கு அதிகமாக.  மற்றும் சிலரும் உதவிசெய்தனர். அந்த சக்தி எது?

6.தினசரி எங்களது வாழ்நாளில் ஒரு நொடியும் ஒரு சக்தி வழிநடத்திக்கொண்டிருக்கிறது. அது எது?

அன்பானவர்களே, அந்த சக்தி எது என்று தெரியவேண்டுமா?

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எங்களுக்காக இந்த இந்த காரியத்தை செய்தார் என்றால் அது தான் உண்மை. அந்த ஆண்டவர் உங்களுக்கும் இரக்கம் செய்ய வல்லவர்.   நாங்கள் எங்களது குடும்பத்தில் மிக அதிகமாக நினைக்கும் வேத வசனம்: “யோபு 19-25 என் மீட்பர் உயிரோடிருக்கிறார்...  My Redeemer lives…”   கீழே கொடுக்கப்பட்டுள்ள வேத வசனங்கள் அவற்றை தெளிவாக விளக்குகிறது:

வாக்குத்தத்தங்களை பிடித்துகொண்டு மன்றாடும் ஜெப வீரன்தான் தாவீது.  தகப்பனிடம் உரிமை கோரும் புத்திரசுவிகாரம் பிள்ளைகளுக்கு உண்டு அல்லவா.  அப்படியாக நாமும் செய்யவேண்டும். திருமதி பிலோ தாஸ் அவர்கள் (கேப்ரன்ஹால் மகளிர் மேல்நிலைப்பள்ளி முன்னாள் முதுநிலை ஆசிரியை) எங்களை ஆவிக்குரிய காரியங்களில் அதிகமாக நடத்தினார்கள் என்றால் அதுவும் ஒரு நல்ல கிருஸ்துவ ஆலோசனை கொடுத்து எந்த நேரமும் எங்களுக்காக ஜெபிப்பது வழக்கம். அவர்கள் அடிக்கடி சொல்வது வாக்குத்தத்தங்களை பிடித்துகொண்டு ஜெபம் செய்யவேண்டும்.

II கொரிந்தியர் 12:9 ....”என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்” என்ற ஆண்டவரின் வாக்கு மட்டுமே எங்களுக்கு ஆறுதல்.

பவுல் அப்போஸ்தலர் இவ்வாராக கூறுகிறார்: பிலிப்பியர் 4:12 தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன். 13-என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு

தொடரும்........

யோவான் 16   20. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.      Verily, verily, I say unto you, That ye shall weep and lament, but the world shall rejoice: and ye shall be sorrowful, but your sorrow shall be turned into joy.


II கொரிந்தியர் 12:9 ....என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன். 2 Corinthians 12: .... “My grace is sufficient for you, for my power is made perfect in weakness.” Therefore I will boast all the more gladly about my weaknesses, so that Christ’s power may rest on me. 



II கொரிந்தியர் 12:10 அந்தப்படி நான் பலவீனனாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்குவரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்.


I கொரிந்தியர் 1:27 ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.
 

மாற்கு 14:38 நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.

ஆக மாம்சமோ(சரீரமோ) பலவீனமுள்ளது தான் ஆனால் நமது ஆவி(ஆன்மா) உற்சாகமுள்ளதாய் இருக்க வேண்டுமானால் நாம் எப்பொழுதும் ஜெபம் செய்யவேண்டும் அப்பொழுதுதான் சோதனைகளை மேற்கொள்ளமுடியும். இரண்டும் பெலவீனமாக ஆகி விட்டால் நாம் இருந்தும் செத்தவர்கள். கண்கள் இருந்தும் குருடர்கள், காதுகள் இருந்தும் செவிடர்கள், உடல் இருந்தும் செத்தது.

 

ரோமர் 7:5 நாம் மாம்சத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் நியாயப்பிரமாணத்தினாலே (வாழ்கை கோட்பாடுகள் அல்லது சட்ட திட்டங்கள்) தோன்றிய பாவ இச்சைகள் மரணத்திற்கு ஏதுவான கனிகளைக் கொடுக்கத்தக்கதாக நம்முடைய அவயவங்களிலே பெலன்செய்தது.

 

பிலிப்பியர் 4:6- 7 : நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.

         திட மனது            யோசுவா 1:1-9

“பலங்கொண்டு திட மனதாயிரு” (யோசு 1:7)     

திட மனது என்பது தைரியத்தைக் குறிக்கிறது. யோசுவா, மிகப் பெரிய பணியை செய்யவேண்டிய காலக்கட்டத்தில் தேவன் யோசுவாவைப் பார்த்து இவ்விதம் சொன்னார். பலங்கொள்ளாமல் திட மனது வராது. ஆனால் இந்த பலம் எங்கிருந்து வரும்? இது மனித பலம் அல்ல, தேவ பலம். இது தேவனிடத்திலிருந்து மட்டுமே நமக்குக் கிடைக்க வேண்டும்.

இதைச் சொல்லுகிறவர் யார்? தேவன். தேவாதி தேவன். அவர் சொன்னால் செய்கிறவர். நீ இவரைச் சார்ந்துகொள்ளமுடியும். யோசுவாவைப் போல நீ நிறைவேற்றவேண்டிய பணி மிகப்பெரிய பணியாய் இருக்காலாம் அல்லது நீ செய்யவேண்டிய எந்த காரியமாக இருந்தாலும் அவர் பெலன் கொடுப்பார். அதன் மூலம் நீ திடமனதாய் இருக்கலாம். ஒரு வேளை நீ அநேக காரியங்களின் மத்தியில் சோர்ந்து போகலாம் அல்லது சோர்ந்து போயிருக்கலாம். ஆனால் தேவன் சொல்லுகிறார் சோர்ந்து போகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து,சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார் (ஏசாயா40:29).

சங்கீதக்காரன் கர்த்தர் என் பெலன் என்று சொல்லுகிறார். இன்று அநேகர் கர்த்தரை தன் பெலனாகக் கொள்ளாததினால் எதற்கும் பயப்படுகிறார்கள். திடமனது என்பது அவர்களில் இருப்பதில்லை. எதற்கெடுத்தாலும் பயம். எதிர்காலத்தைக் குறித்த பயம். நீ உன்னுடைய வாழ்க்கையில் தேவனை பெலனாகக் கொண்டிருக்கிறாயா? அநேகர் தேவனை அல்ல தங்களின் சுய பெலத்தையும் செல்வத்தையும் சார்ந்திருக்கிறார்கள். அவர்களைக்குறித்து வேதம் என்ன சொல்லுகிறது? தேவனைத் தன் பெலனாக

எண்ணாமல் தன்செல்வப்பெருக்கத்தை நம்பிதன் தீவினையில் பலத்துக்கொண்ட மனுஷன்இவன் என்றும் இன்னுமாக இவர்களுடைய முடிவைக்குறித்து  ‘தேவன்  உன்னைஎன்றென்றைக்கும் இராதபடி அழித்துப் போடுவார்அவர் உன்னைப் பிடித்து,உன் வாசஸ்தலத்திலிருந்து பிடுங்கிநீ ஜீவனுள்ளோர் தேசத்தில் இராதபடிக்குஉன்னை நிர்மூலமாக்குவார்‘(சங்கீதம் 52:7,5). ‘கர்த்தர்

மேல் நம்பிக்கைவைத்துகர்த்தரைத்தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன்பாக்கியவான்‘ (எரேமியா 17:7).

 

அருமையான சகோதரரே, சகோதரியே, நாம் நமது இந்த இரண்டு பெலவீனங்களை எப்படி மேற்கொள்வது என தெரியாமல் இருக்கிறோம்

ரோமர் 8:26 அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார் செய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.

 

ஆமென்... 


II கொரிந்தியர் 12:9 அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்.