ஏன் உங்கள் பணி ஓய்விற்குப் பிறகு நீங்கள் வேலை செய்வதை எண்ணிப்பார்க்க வேண்டும் ?

31/03/2018 10:24

 

ஏன் உங்கள் பணி ஓய்விற்குப் பிறகு நீங்கள் வேலை செய்வதை எண்ணிப்பார்க்க வேண்டும் ?

 

அருமையானவர்களே, இந்த மானிடனுக்கு ஓய்வு கிடையாது என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

கடவுள் மற்ற அனைத்துப் படைப்புகளை  உண்டாக்கி மனிதனையும் உண்டாக்கி கடைசியாக மனிதன் வேலை செய்துதான் பிழைக்கவேண்டும் என்று உறுதியாக கூறுகிறார். இதை நாம் முதலில் நன்றாக புரிந்து கொள்ளவேண்டும்.  நாம் இந்த உலகத்தில் பிறந்துவிட்டால் ஆவி, ஆத்மா, சரீரம் நன்றாக இருக்கும் பொது ஓய்வு தேவை இல்லை.

 

ஓவ்வொரு வேலைக்கும் இடையே எடுக்கும் ஓய்வு என்பது வேறு, நிரந்தர ஓய்வு என்பது வேறு. வேலைப்பளுவின் 

போது இடைப்பட்ட ஓய்வு கண்டிப்பாக தேவை. ஆனால் நிரந்தர ஓய்வு கூடவே கூடாது.

 

ஓய்வு என்பதே ஒரு மனிதன் தனது சுறுசுறுப்பான பணிகளைத் துறந்து மறுபுறும் மாறும் ஒரு நிலைதான் இந்த பணி ஓய்வு.  
ஒருவேளை நாம் இந்த பார்வையில் வேண்டும் என்றால் பார்க்கலாம், அதாவது அரை ஓய்வு, தனது சுறுசுறுப்பான வேலையை விட்டு 
விட்டு மற்ற வேலைகளை கவனிப்பதே இது ஆகும். 
 
சில நேரங்களில் மனிதன் இந்த அரை ஓய்வு நிலையில் தான் தனது சுறுசுறுப்பான மறு பக்கத்தைக் காட்டுவான்.
 
உலகப் பிரசித்திப் பெற்ற ஊழியர் பில்லி கிரகாம் தனது 99 வயதிலும் கூட ஆண்டவருக்காக ஊழியம் செய்தவர். 
 
 
            Billy Graham

Graham in a suit with his fist clenched

Religion

Christianity (evangelical Protestantism)

Denomination

Baptist

Church

Southern Baptist Convention[1]

Education

Florida Bible Institute
Wheaton College

Personal

Born

William Franklin Graham Jr.
November 7, 1918
Charlotte, North Carolina, U.S.

Died

February 21, 2018 (aged 99)
Montreat, North Carolina, U.S.

Spouse

Ruth Bell (m. 1943; d. 2007)

Children

5, including Anne and Franklin

Religious career

Profession

Evangelist

Website

billygraham.org

Signature

Billy Graham Signature.svg

William Franklin Graham Jr. KBE (November 7, 1918 – February 21, 2018) was an American evangelist, a prominent evangelical Christian figure, and an ordained Southern Baptist minister who became well known internationally in the late 1940s. One of his biographers has placed him "among the most influential Christian leaders" of the 20th century.

 

 

எனது பசுமலை கிராமத்திலும் திரு.சற்குணம் ஐயா (திரு.தேவஇரக்கம் அண்ணன் அவர்களின் தகப்பன்) என்ற ஒரு பெரியவர் இருந்தார். அவர் தனது 101வது வயதில் மரித்தார்.  ஆனால் நாங்கள் கண்டது, சுமார் 100 வயது வரை தனது ஜோல்னா பையில் துண்டு பிரதிகளை வைத்துக்கொண்டும், சில மிட்டாய்களை வைத்துக்கொண்டும் எல்லா இடமும் எல்லா மக்களிடமும் கொடுப்பார். அவர் பேசுவதை விட செயல்தான் அதிகம் செய்வார்.

 

ஆனால் இன்றைய சமுதாயத்தில் பலர் தனது வேலை ஓய்வை  அல்லது பணி ஓய்வை ஒரு நிரந்தரமான ஓய்வாக கருதிக்கொண்டு தங்களுக்குள் ஒரு சிறிய வட்டத்தை வரைந்து கொண்டு அதற்குள்ளேயே முடங்கி தன்னையும் வருத்தி தன்னுடன் இருக்கும் மற்றவர்களையும் வருத்திக் கொள்கிறார்கள். தங்களது வாழ்க்கைக்கு இது ஒரு முற்றுப்புள்ளி போல நினைக்கிறார்கள்.  இது பெரிய தவறாகும்......இதற்குப் பிறகும் ஒரு வித்தியாசமான, புது விதமான, பெரிய, இன்பமான வாழ்க்கை இருப்பது நமக்குத் தெரியவேண்டும்..

 

சிலர் பணி ஓய்விற்குப் பிறகு தனியாரோ, அரசாங்கத்திலோ இருந்தால் ஓய்வூதியம் வர வாய்ப்புள்ளது.  சிலர் தனது உடல் பலவீனத்தின் நிமித்தம்மாகவோ, விபத்துக் காரணமாகவோ, சட்டத்தின் நிமித்தமாகவோ “O” என்ற இந்த நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ஆனால் பலர் இந்த ஓய்வூதியம் வராமலேயே வாழ்கின்றனர் அதிலும் பலர் குறைந்த ஆயுட்காலம் மூலம் இந்த உலகத்தை விட்டு கடந்து போகின்றனர். 
 
இந்த ஓய்வூதிய திட்டம் ஜெர்மனி நாட்டில்தான் 1889ம் ஆண்டு முதலில் கொண்டுவரப்பட்டது. பொதுவாக எல்லா வளரும், வளர்ந்த நாடுகளிலும் இந்த ஓய்வூதிய திட்டம் அமுலில் இருக்கிறது. 
 
இது அரசாங்கத்தால், காப்பீடு மூலமாகவோ, தனியார் முதலாளிகலாலோ  பணி ஓய்வு வயது என்று நியமித்து அதன் பிற்பாடு ஒரு தொகையை மாதாமாதம் அவர்களுக்கு கொடுக்கிறார்கள். பொதுவாக அந்த வயது வந்த நிலையில் அவர்களது குடும்பத்தை அவர்களது பிள்ளைகள் தாங்கவேண்டும் என்பதே கடமை. இதை ஒரு காலாச்சாரமாகவும், கடின சித்தாந்தமாகவும், சமூக சம்பந்தமான காரியமாகவும், அரசியல் சம்பந்தமாகவும் இருந்தாலும் இப்பொழுது இது ஒரு வேலையாளின் உரிமையாக ஆகிவிட்டது. இதைதான் மேலை நாடுகளில் தேசிய அரசியலமைப்புகளாக குறிப்பிடப்படுகிறது.

 

இந்த ஓய்வூதிய திட்டம் மூலமாகவோ அல்லது இல்லாவிட்டாலோ மற்ற சில அனுகூலங்களோ அல்லது நன்மைகளோ நம்மையும் அறியாமல் அனுமதிக்கபடுகிறது. இந்த காலங்களில் நாம் பொருளாதார மற்றும் மனதிலும் விடாமுயற்சியுடன் நமக்கு முடிந்த மற்றும் பிடித்த பணியில் ஈடுபட்டு பொற்காலமாக மாற்றவேண்டும்.
 
பணி ஓய்வு வயது என்பது ஏதோ ஒரு தோட்டத்தை அமைப்பதில் ஈடுபடுதல் என்றோ, நமது பேரக் குழந்தைகளுடன் இருப்பதே என்று நினைக்காலாம். சிலர் இந்த பணி ஓய்வு வயது என்பதை பார்ப்பது ஒரு விடுமுறைக் காலம் என்று ஓய்வெடுக்கவோ, பயணம் செய்யவோ விரும்புகின்றனர். காசி, மெக்கா, எருசெலேம் போன்ற இடங்களுக்கு செல்லும் வயதாக நினைக்கின்றனர்.  ஒன்றை நாம் நன்றாக தெரிந்து கொள்ளவேண்டும், பணி ஓய்வு வயது என்பது வாழ்க்கையின் ஒரு முடிவு அல்ல. அதற்கு மாறாக வாழ்க்கை முறையை மறுவரையறை செய்து அதிக திருப்தி ஆக்கிக் கொள்ள பழக்கபடுத்திக் கொள்ளவேண்டிய வயது. 
நான் வேலை செய்த ஒரு பெரிய கம்பெனியில், அதின் பாதுகாப்பு அதிகாரி திரு.சுந்தரம் மானுவல், ஒரு ஓய்வு பெற்ற காவல் அதிகாரி, அவருக்கு அப்பொழுது வயது 72. அவர் எங்களை போன்று (அப்பொழுது எனக்கு சுமார் 35 வயது இருக்கும்) நடு வயதுள்ளவர்களிடமே அதிகம் பழகுவார். நான் ஒருநாள் அவரிடம் கேட்டேன், சார், நீங்கள் இந்த வயதிலும் பேருந்தில் ஏறி நின்றுகொண்டு, எங்களோடு ஓடி பேருந்தில் எப்படி ஏறுகிறீர்கள் என்று கேட்டதற்கு, அதான் உங்கள் மாதிரி நடுத்தர வயதுள்ளவர்களிடம் பழகுவாதால்தான் என்றார்.  மேலும் அவர் எந்த கெட்ட பழக்க வழக்கமும் இல்லாதவராகவும், அவர் முப்பது ஆண்டுகள் காவல்துறையில் பணியாற்றியதில் 26 முறை பணிமாற்றம் செய்யப்பட்டதாகவும் சொன்னார். அதாவது அவரது நேர்மைக்கு கிடைத்த பரிசு, தொடர்பணியிடை மாற்றம். உங்கள் எண்ணம் முதலில் சரியாக வேண்டும்.  பணி ஓய்வு வயது என்பது இனிமேல் வாழ்க்கையின் முடிவு ஆகாது இது ஒரு மாற்று தன்மை.

ஏன் பணி ஓய்வு வயதுக்குப் பிறகும் சிலர் வேலை செய்கிறார்கள் என்று தெரியுமா? கீழே கொடுக்கப்படும் ஐந்து காரணிகாளால் ஆகும்.

1.   வாழ்வின் நல்ல ஆரோக்கியத்தை அனுபவிக்க:

ஒரு நாளேடு “ஆக்கபூர்வமான ஆரோக்கிய உளவியல்” இவ்வாறாக கூறுகிறது:
பணி ஓய்வு வயதுக்குப் பிறகும் வேலை செய்பவர்கள் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பதாகவும், ஆனால்  பணி ஓய்வு வயதில் வேலையின்றி இருப்பவர்கள் அதிகம் உடல் நலம் பாதித்தவர்கள் என்றும் கூறுகிறது. மேலும் அந்த வயதில் வேலை செய்பவர்கள் பெரிய வியாதிகளிலோ அல்லது குறைபாடுகளாலோ பாதிக்கப் படுவது குறைவு. அதினால் அவர்களின் மருத்துவ செலவும் குறைகிறது. அதற்காக வேளையில் இருக்கும் போது நன்றாக கிம்பளம்(லஞ்சம்) வாங்கிக்கொண்டு அதனால் மற்ற பழ கெட்ட பழக்க வழக்கங்கள் ஏற்ப்பட்டு மருத்துவ செலவு செய்பவர்களை நான் கூறவில்லை.

 

2.      உங்கள் மனதார உடன்பட்டு ஈடுபட :

 

வேலை முனைப்பில் அதாவது உங்கள் மனதை சுறுசுறுப்பாகவும், ஈடுபடவும் வைக்கிறது.  பொதுவாக பணி ஓய்வுபெற்ற பின் அதிகமாக வீட்டில் உட்கார்ந்து டெலிவிஷன் பார்த்துக் கொண்டு நாள் முழுவது கழிப்பது வழக்கம். ஆனால் நாம் விரும்பிய வேலைசெய்வது இது ஒரு சில வகையான வேலைப்பாலமாகவும், பகுதி நேர வேலையோ, முழு நேர வேலையோ, வேலை என்பது வாய்ப்புகளை வழங்குகிறது மற்றும் நமது மனநிலையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்கிறது.

 

3.       உங்கள் சமூக வாழ்க்கையை மேம்படுத்த:
 
நமது குடும்ப மற்ற உறுப்பினர்கள் அவர்களது தொந்த வேலைகளில் வேலையாயிருக்கிறபோது, பணி ஓய்வு ஒரு தனிமையான சூழலை ஏற்படுத்தும், அதாவது உடன் பணி செய்பவர்களோ, வாடிக்கையாளர்ளோ இன்றி காணப்படும். அடிக்கடி பணி ஓய்வு பெற்றவர்கள் தொடர்ந்து மற்ற வேலைகளைச் செய்வதால் அவர்களது சமூக சூழலில் சுறுசுறுப்பாகவும் ஒரு தோழமையையும் அந்த வேலை கொடுக்கிறது. இந்த அதிசய சமூக ஈடுபாடு மனநிலை, வேலைகளை செய்கிறது மட்டுமன்று, மனச்சோர்விலிருந்து விலகிச் செல்லவழி வகுக்கிறது.
 
 

4.      ஒரு நோக்க உணர்வை திரும்ப பெறுதல்:

பணி ஓய்வுக்கு பிறகு வேலைக்குச் செல்லும் மனிதர்களின் வாழ்க்கை ஏதோ ஒரு திசையை நோக்கி செல்லுவதாக தெரிகிறது.  அப்படி முழுவதும் நம்பினால் ஒரு படகு துடுப்பில்லாமல் பயணம் செய்வது போலத்தான். ஆகவே தான்  பணி ஓய்வுக்கு பிறகு வேலைக்குச் செல்லும் மனிதர்கள், எந்த வேலை இடம் ஒரு நோக்க உணர்வையும் திருப்தியையும் தருகிறதோ அங்கே தான் செல்ல வேண்டும், செல்லுகிறார்கள்.

5.      புதிதாக ஒன்றை துவங்குவது:

பணி ஓய்வுக்கு பிறகு ஒரு புது துணிகரமான ஒரு அற்புத வாய்ப்பாக உங்கள் அனுபவங்களை வெளிப்படுத்தும் இடமாக இருக்கச் செய்யவேண்டும்.  நீங்கள்தான் உங்கள் குடும்பத்திற்கு எல்லாம் செய்யவேண்டும் எனும்நிலை இல்லாதபோது ஒரு சுமை நீங்கியது போல தெரிகிறது.  இதுதான் உங்கள் வாழ்நாளின் ஒரு நீண்டகால கனவு பலித்தது போல தோன்றும். அதிகமாக பணி ஓய்வு பெற்றவர்கள், புதிதாக ஒரு காரியத்தைத் செய்யத்தான் விரும்புகிறார்கள்.

இதிலிருந்து வெளிப்படையாக தெரிவது என்னவென்றால், பணி ஓய்வுக்கு பிறகு பலவிதமான வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் இன்று உலகில் பலர் பணி ஓய்வுக்கு பிறகு வேலை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது, ஏனென்றால் எதுவும் ஒதுக்கி வைக்கவில்லை ஆகவே அவர்களுக்கு பணத்தேவை அதிகம்.
 
ஆகவே நீங்கள் ஓய்வு பெரும் முன்பு, இருக்கிற வளங்களைக் கொண்டு திட்டமிடல் அவசியம். சந்தை மாற்றம், பொருளாதாரம் அல்லது உங்கள் தேவைக்கு இந்த திட்டமிடல் அவசியம்.
இந்த வளங்களில் முக்கியமான கூறு என்னவென்றால் காப்பீடு, அவை உங்கள் இலக்கை சமாளிக்கவும், கஷ்டம் இல்லா வாழ்க்கை மீதமுள்ள நாட்களில் அமையவும் வழி வகுக்கும். 

அதுமட்டுமல்ல அநேகர் இந்த காலங்களில் ஆண்டவருக்கு (கடவுளுக்கு) தொண்டு செய்யவேண்டும் என்று விரும்புகின்றனர். இதில் இரண்டு வகை உண்டு...

1) நன்றாக ஓடி, ஆடி, தெம்பாக இருக்கும்போது கடவுளை மறந்து நாடி நரம்பு தோய்ந்து போன பிறகு, ஆண்டவருக்காக வேலை செய்யாலாம் என்றால் அது சற்று கடினம்தான்.

2) வேலை செய்யும்போது எல்லா மனிதர்களைப்போல அவர்களுடன் உடன் பட்டு கடவுளை விட்டு தூரமாக சென்று விட்ட ஒரு குற்ற உணர்ச்சியால், இப்பொழுது ஆண்டவருக்கு (கடவுளுக்கு) தொண்டு செய்யவேண்டும் என்று உந்தப்பபடுகின்றனர்.

ஆக இந்த இரண்டுமே தவறு, கடவுளுக்கு நீங்கள் பிச்சை போடவேண்டாம். நன்றாக வேலை செய்து கொண்டே கடவுளின் பணியைச் செய்வதே ஆண்டவரின் விருப்பம். அப்பொழுதுதான் அவர் தொடர்ந்து பணிசெய்ய விருப்பப் படுவார்..

ஆக நாம் பணிசெய்யும் காலத்திலேயும், பணி ஓய்வுக்கு பிறகும், வேலை செய்வதே இயற்கையான ஆண்டவருக்கு பிரியமான முடிவு. இது ஒரு தொடர்ச்சியான முயற்சி என்றே சொல்லலாம். பணி ஓய்வுக்கு பிறகு வேலை செய்வது ஒரு இறைவன் கொடை என்றே எடுத்துக் கொள்ளவேண்டும்.