காதல் அன்பு - Romantic Love

04/11/2017 02:47

அன்பு நான்கு வகையாக இருக்கிறது.

 

[1] Philia= brotherly (sisters/brothers/friends/relatives) love - சகோதரத்துவ அன்பு


[2] Storge = parents love towards their children, vice versa.  - குடும்ப அன்பு : பெற்றோர் பிள்ளைகளிடம் அன்பு.  பிள்ளைகள் பெற்றோரிடம் காட்டும் அன்பு.

 

[3] Agape = God's love  - தேவனின் அன்பு

 

[4] Eros = romantic love : காதல் என்னும் அன்பு before and after marriage

    (கணவன் மனைவி இருவரிடையே உள்ளது after marriage).

 

சகோதர அன்பு, குடும்ப அன்பு மற்றும் தேவ அன்பு(கடவுள்) பற்றி பிறகு பார்க்கலாம். இப்பொழுது கடைசி அன்பாகிய “Eros = romantic loveவைப் பற்றி மட்டும்  பார்க்கலாம்.  “ஒருவர் ஏன் அடுத்த நபரை காதலிக்கின்றார் என்று பார்ப்போம் என்றால், அதற்கு விடை – அந்த நபர் ஏதோ ஒரு விதத்தில் அவரது மனதை பாதித்திருக்கிறார் என்றுதான் அர்த்தம். அது எந்த பாதிப்பு என்பது தான் முக்கியம். இதை பெற்றோர் அல்லது குடும்பத்தினர் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.  நீங்கள் இந்த கேள்வியான - "ஏன் இவர் அந்த நபரைமட்டும் காதலிக்கின்றார்?" (பலரைக் காதலிப்பதாக கூறுபவரைப் பற்றி இப்பொழுது கூறவில்லை) என்ற கேள்வியை எழுப்பினால், அதற்கு பதிலாக பல காரணங்கள் இருக்கும், அதாவது அவரது தோற்றம், குணம், நிறம், பணம், ஜாதி, பேச்சு, திறமை, சிரிப்பு, போன்ற ஏதோ ஒன்று அவரை இந்த இச்சைக்கு உட்படுத்தியிருக்கிறது.   

 

இந்த Eros வகைக் காதலில் முதலில் கணவன் மனைவி இடையே உள்ள மனப்பூர்வமான அன்பு ஒரு வகையும், அடுத்த வகை திருமணத்திற்கு முன் உள்ள இருபாலின உறவு "கண்களின் இச்சை" (lust of the eye)  என்பது இரண்டாவது வகையும் ஆகும்.  இச்சை தவறு என்று வேதம் தெளிவாக சொல்லுகிறது என்றால், “காதலிப்பது” (Infatuation)  தவறு எனப்படும்..... இதை நாம் பார்க்கலாம்...I கொரிந்தியர் 7:27  நீ மனைவியோடே கட்டப்பட்டிருந்தால், அவிழ்க்கப்பட வகைதேடாதே; நீ மனைவி இல்லாதவனாயிருந்தால் மனைவியைத் தேடாதே. (நீயாக காதல் செய்யாதே என்பது பொருள்).


“வேதத்தில் நாம் பார்க்கலாம், ஆபிரகாம் தன் குமாரனாகிய ஈசாக்குக்கு பெண் தேடியதை அறிவோம். யூதர்களின் முறையில் நிச்சயதார்த்தம் செய்தபின்தான் திருமணம் நடைபெற்றது. ரூத் என்னும் சரித்திரமும் அப்படியே சொல்கின்றது. இயேசுவின் தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நிச்சயிக்கப்பட்டிருந்தாள் என்று அறிவோம். இயேசு அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்து நமக்கு உதாரணமாக இருந்துள்ளார்.

 

வாட்ட சாட்டமாக, நல்லவன் போல் பேசுவது, மிடுக்கான ஆடை, கழுத்தில் செயின், மோதிரம், பைக், கார், போன்ற பல காரியங்கள் செய்து உங்களை ஏமாற்றுவதற்கு அதிகம் கவனம் செய்கிறான் சாத்தான்.......திருமணமான அநேகரும் இதற்க்கு விதிவிலக்கல்ல. மாற்றான் தோட்டத்து மல்லி மணக்கும் என்பதுபோல. மனிதர்களின் காதலை ஆதரித்து வேதத்தில் பேசப்பட்டதாகத் தெரியவில்லை.

 

இச்சையைக் குறித்து தெளிவாக வேதத்தில் 57 இடங்களில் கூறுகிறது.


ரோமர் 7:7 ஆகையால் என்ன சொல்லுவோம்? நியாயப்பிரமாணம் பாவமோ? அல்லவே. பாவம் இன்னதென்று நியாயப்பிரமாணத்தினால் நான் அறிந்தேனேயன்றி மற்றப்படி அறியவில்லை; இச்சியாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் அறியாமலிருப்பேனே.


I கொரிந்தியர் 9:25 பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள்.


கலாத்தியர் 5: 22. ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், 23. சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.

கலாத்தியர் 5:24 கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.

யாக்கோபு 1:14 அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.

யாக்கோபு 1:15 பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.

மத்தேயு 5:28 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.


மாற்கு 4:18 வசனத்தைக் கேட்டும், உலகக்கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற இச்சைகளும் உட்பிரவேசித்து, வசனத்தை நெருக்கிப் போட, அதினால் பலனற்றுப்போகிறார்கள்;
ரோமர் 6:12 ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக.

 

நீங்கள் காதலிப்பதை தேவன் தடை செய்வதில்லை. ஆனால் அதற்குப்பின்வரும் விளைவுகளுக்கு அவர் பொறுப்பும் அல்ல. எனவே அவரிடம் போய் புகார் செய்யாதீர்கள், என்பதுதான் எனது எண்ணம்.

 

ஆக அதிக கவனத்துடன் பெற்றோர் இந்த நேரத்தில் இருக்க வேண்டும்.  காதலில் விழுந்த பிள்ளைகளை எப்படி கையாளுவது என்பது நமது அறிவுக்கு மீறிய செயலாகும். கடவுளின் ஞானம் இதற்க்கு தேவை, ஏனெனில் அது “முள்ளில் விழுந்த சேலையை எடுப்பது போன்றது”. வாலிப வயது உணர்ச்சி மிக்க வயது. அன்புக்காக ஏங்கி, யாரிடமாவது தன் அன்பை செலுத்தவேண்டும் என்று எண்ணுகிற வயது. கற்பனைகளில் வாழும் வயது, எதிர்மறையாக செய்யும் வயது, விரும்பியபடி நடக்கிற வயது, பாவ இச்சைகளுக்கு இழுக்கும் வயது... அதை சமாளிப்பது சற்று கடினமானதுதான்..  அந்த வயதை கடப்பதற்கு தாவீது தரும் ஆலோசனை அல்லது விளக்கம் இதுதான்....... சங்கீதம் 119-9. வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே.

 

பெற்றோர் வேத வசனத்தை உட்கொள்ளப் பழக்கப் படுத்தினால் அவர்கள் நல்லது எது கேட்டது எது என்பதை தாங்களே தெரிந்து கொள்வார்கள் அல்லது ஆண்டவரிடம் தனது குறைகளை அல்லது கேள்விகளை கேட்டுப் பதிலைப் பெற்றுக்கொள்வார்கள். வேதவசனம் அவர்களை வழிநடத்தும்....

 

பெற்றோர் தனது பிள்ளைகளிடம் எப்பொழுதும் அன்பை காண்பிக்க தவறக்கூடாது, முக்கியமாக அதிக அன்பும் கூடாது. அவர்களின் மன நிலையை திசை திருப்பும் காரியங்கள் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதற்க்கு அவர்களிடம் மனம் திறந்து பேச அனுமதிக்க வேண்டும். நல்ல ஆலோசனைகளை கனிவுடன் கூறவேண்டும்.  இதில் பொதுவாக பெற்றோர் சண்டையிடும் பிள்ளைகளே அதிகம் பாதிக்கப் படுகிறார்கள். எந்த அடுத்து நபராயினும்(மூன்றாவது நபர்) ஆணோ, பெண்ணோ ஒரு அளவோடு பழக விடவேண்டும். முக்கியமாக தொட்டுப் பேசுவதை அனுமதிக்கக்கூடாது. நமக்கு முன்னே அல்லது தெரிந்தே அலைபேசி, முகநூல், போன்ற மற்ற காரியங்களை பகர பழக்கப்படுத்தவேண்டும். அவர்களின் சூழ்நிலை அறிந்து உதவி செய்யவேண்டும்.

 

என் அப்பா அல்லது அம்மா அடிப்பார்கள், அவர்கள் என்னைப் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்ற நிலை வரக்கூடாது.

 

மனிதனை படைத்த கடவுள் அவன் வெற்றிகரமாக பரிசுத்தமாய் வாழும்படி கிருபைகளை கொடுத்திருக்கிறார்....

 

ஆனாலும் மல்கியா :2 16. தள்ளிவிடுதலை நான் வெறுக்கிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்; அப்படிப்பட்டவன் கொடுமையினால் தன் வஸ்திரத்தை மூடுகிறான் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; ஆகையால் நீங்கள் துரோகம்பண்ணாமல் உங்கள் ஆவியைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.  Easy to read- version  16 The Lord, the God of Israel, says, “I hate divorce, and I hate the cruel things that men do. So protect your spiritual unity. Don’t cheat on your wife.”

 

ஆகையால் காதலித்து கலியாணம் பண்ணியவர்கள் கடைசி பரியந்தம் ஓற்றுமையாக இருப்பதே நல்லது.  I கொரிந்தியர்  7 :   15. ஆகிலும், அவிசுவாசி பிரிந்துபோனால் பிரிந்துபோகட்டும், இப்படிப்பட்ட விஷயத்தில், சகோதரனாவது சகோதரியாவது அடிமைப் பட்டவர்களல்ல. சமாதானமாயிருக்கும் படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார்.

 

 

சிரிக்க:

கூட்டமான பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸுக்குள் இருவர் பேசிக்கொண்டது
ஒருவர் :சார் இது என் சீட் . . . டவல் போட்ருக்கேன் பாருங்க
மற்றொருவர் :அப்போ பஸ் மேல என் வேஷ்டிய அவுத்து போட்டுட்டா பஸ் எனக்கு சொந்தமாயிடுமா. . . ?    திருந்துங்கடா

 

GOD’S PLAN IS ALWAYS THE BEST.

SOMETIMES THE PROCESS IS PAINFUL AND HARD, BUT DON’T FORGET THAT WHEN GOD IS SILENT. HE IS DOING SOMETHING GREAT FOR YOU.