கிருஸ்தவர்கள் கண்டிப்பாக செய்யவேண்டிய நியமனங்கள்

20/10/2017 12:40

சில நியமனங்களை மற்றவர்கள் போல கிருஸ்தவர்களும் தெரிந்தோ தெரியாமலோ கடைப்பிடிக்க மாட்டேன் என்கிறோம்...மற்ற உலக மனிதர்கள் தவறு என்பதை நாம் செய்வது எவ்வளவு வேதனையான செயல்:

அவற்றில் சில இதோ உங்கள் பார்வைக்கு..........

  1. நிர்விசாரமாய் திருவிருந்தில் பங்கெடுப்பது
  2. மற்றவர்களை சீக்கிரத்தில் குற்றவாளியாக தீர்ப்பது. பிறருடைய சிறிய குற்றத்தை பெரிதாக்குவது.(தனது பெரிய குற்றத்தை மறைப்பதற்காக)
  3. சரியான ஆண் பெண் உறவு வைக்காதது.
  4. ஏழைகளிடமும், விதவைகளிடமும், பிணியாளிகளிடமும், கண்ட சகோதர/சகோதரிகளிடமும் அன்பு கூறாதது.
  5. வாரா வாரம் “பாவ அறிக்கை” ஒரு சடங்காக செய்வது, பின்னர் அதே குற்றத்தை செய்வது.
  6. பெரும்பாலான பெண்கள் தேவாலயத்தில் தலையை மூடுவது இல்லை.
  7. ஜாதி வெறியாட்டம் போடுவது. தனதாளுக்கு ஒரு நீதி மற்றவர்க்கு ஒரு நீதி என்பது. ஆலய வழிபாடுகளில் அவரது ஆட்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது.
  8. மற்ற ஊழியங்களையும், ஊழியர்களை தரக்குறைவாக மதிப்பது....தனது ஊழியர்களையும் தரம் குறைத்து பேசுவது..
  9. பெற்றோரை மதிக்காதது, பிள்ளைகளை மதிக்காதது. பெரியவர்களை மதிக்காதது மற்றும் குருவானவர்களை மதிக்காதது.
  10. சொந்த குடும்பத்தை நடத்த முடியாமல் அடுத்தவர்க்கு புத்திமதி சொல்லுவது அல்லது பிரசிங்கப்பது.
  11. தனக்கென மட்டுமே வாழ்ந்து, பிறர் நலன் பாராதவர்கள்.
  12. ஜெபம் செய்யும் போது வீணான வார்த்தைகளை போடுவது.
  13. ஞானஸ்தானம் சரியாக புரிவதில்லை பலருக்கு, ஆக இதை எந்த போதகர்களும் விசாரிப்பதில்லை அவரை அங்கத்தினராக்கும் முன்.
  14. பணபலம், அதிகார பலம் மூலம் சபைக்குழுவில் அங்கம் வகிப்பது.
  15. குறுக்குவழியில் சபைக் குழுவில் சேர்வது.
  16. ஆலய நிர்வாக குழுவில் தேர்வாவதர்க்காக மற்ற ஏழைகளை பயன்படுத்துவது. அவர்களுக்காக மாதந்தோறும் சந்தாபணம் கட்டுவது.
  17. பொதுவாக நல்லவர் போல நடிப்பது. ஆவிக்குரியவர்க் போல நடிப்பது. ஆலயத்தில் முதல் இடம் பிடிப்பது. அதிக வேத வசனங்களை மனனம் செய்வது ஆனால் அதன்படி நடப்பதில்லை.
  18. பெண், பொன், மண் இவற்றில் மனம் முழுவதும் செலுத்துவது.
  19. அடுத்துவருக்கு வந்தால் இரத்தம், அவருக்கு வந்தால் தக்காளி சட்னி என மனப்பாங்கில் இருப்பது.
  20. திருமணதிற்கு ஆயத்தம் ஆகும் ஆண் மற்றும் பெண்ணிடம் மன நல கிருஸ்துவ ஆலோசனை செய்வது இல்லை.  அவர்கள் பெற்றோருக்கும் ஆலோசனை கொடுப்பதில்லை. ஆக கிருஸ்தவ தம்பதியர் பலர் ஒன்று காவல் நிலையத்தையோ அல்லது நீதி மன்றங்களையோ நாடுகிறார்கள். பலரை “சொல்வதெல்லாம் உண்மை” போன்ற குழுவினர் அழைத்துச் செல்கின்றனர். பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.
  21. பிள்ளைகளுக்கு அவர்கள் வளர வேண்டிய கிருஸ்தவ நடைமுறைகளை சொல்லிக் கொடுப்பதில்லை. பெற்றோர்களை வயதானபின் எப்படி கையாளுவது என்றும் போதிப்பது இல்லை. அளவிற்கு அதிக பணம், அலைபேசி, இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சிறு வயதில் கொடுப்பது மிகவும் தவறு.
  22. Career Guidance / Job opportunities போன்ற சுய மற்றும் நாட்டிற்க்கும் வீட்டிற்க்கும் வேண்டிய சமுக காரியங்களையும் சொல்லிக் கொடுப்பதில்லை மேலும் நாட்டின் சட்ட திட்டங்களை மதிப்பதும் இல்லை.
  23. மது, மாது, சூது போன்ற விசயங்களில் நமது பிள்ளைகள் சிக்கிக் கொள்ளாதவாறு பார்ப்பதும் இல்லை.
  24. குறைந்தபட்சம் ஆலயத்திற்கு வரும்போதாவது ஆண்களும் பெண்களும் சரியான முறையில் ஆடை அணிவது நல்லது என்பதை அவர்தம் பெற்றோர் சொல்லிக் கொடுப்பதில்லை.
  25. கடைசியாக நமது பிள்ளைகளிடம் முக்கியமாக பெண் பிள்ளைகளிடம் சாத்தானின் நய வஞ்சக நாக்கிற்கும் கடவுளின் தூய வாக்கிற்கும் உள்ள வித்தியாசத்தை புரிய வைக்கவில்லை. பிள்ளைகள் சிக்கி சின்னா பின்னமான பிறகே கடவுளே என்னை கை விட்டு விட்டீரா என்று புலம்புவது.

 

மேல்கண்ட காரியங்களை அனேக போதகமாரும் தங்கள் சபைக்கு ஏன் தனது பிள்ளைகளுக்கே சொல்லுவதில்லை. ஆக கிருஸ்தவ பெற்றோர்களுக்கு முதலில் இந்த மாதிரி ஆலோசனைகள் வழங்கவேண்டும். பின்னர் பிள்ளைகளுக்கு அவர்களுக்கு வேண்டிய காரியங்களை எடுத்துச் சொல்லவேண்டும்.....யார் செய்வார் இந்த காரியங்களை..... ?

“உலகத்தில் நாம் எதிர்கொள்ளும் எல்லா பிரச்சனைகளுக்கும் இந்த வேதாகமத்தில் பதில் உண்டு” என்று அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் கூறினார்.............................. ஆக வேறு எங்கும் நாம் நம்மை திருத்த ஓடவோ, தேடவோ வேண்டியதில்லை. வேதத்தை கவனமாய் படித்து அதன்படி நடக்கவேண்டும். கிறிஸ்துவின் முன் மாதிரியை...... மற்ற கிறிஸ்தவர்களின் மாதிரியை அல்ல....”

டீ.எல். மூடி (D.L.Moody) என்ற பக்த்தன் ஒருமுறை சொன்னது என்னவென்றால், “நீங்கள் வாலிப வயதில் வேதத்தை சுமந்தால் வயதான காலத்தில் வேதம் உங்களைத் தூக்கிச் சுமக்கும். வேதம் உங்களை பாவத்திற்கு தூரப்படுத்தும், நீங்கள் வேதத்தின்படி நடவாவிட்டால், பாவம் உங்களை வேதத்திற்குத் தூரப்படுத்தும்.”

மத்தேயு 12:30 & லூக்கா 11:23 என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான்; என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்...............கிறிஸ்துவுக்கு நண்பரா விரோதியா?