ஜெபமும் ஆயுதங்களும்

18/07/2017 15:47

ஜெபமும் ஆயுதங்களும்

எபேசியர் 6 - 10. கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.   11. நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.  12. ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும்,  அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.

கதை: ரவி சின்ன பையன் அவன் ஆலயம் செல்லும்போது ஒரு நாய் குளைத்துக்கொண்டிருந்தது, அவன் மிகவும் பயந்தான்...பிறகு அடுத்த வாரம் தனது அப்பாகூட சென்றான் ..ஆனால் பயம் இல்லை.........  இயேசு அப்பா கூட நீங்கள் நடக்கும் போது எதற்கும் பயம் இல்லை.   ரோமர் 8-31. இவைகளைக்குறித்து நாம் என்னசொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?  சங்கீதம் 118- 6. கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்னசெய்வான்?

 

நீங்கள் எப்பொழுது இயேசுகிருஸ்துவை ஏற்றுகொண்டு, அவருடைய ஒளிமயமான குடும்பத்திற்குள் வருகிறீர்களோ, அப்பொழுது இருளின் அதிபதியான பிசாசு உங்களுக்கு எதிராளியாக வருகிறான். உங்களை அவனுடைய விரோதியாய் எண்ணுகிறான்.  உங்களை எப்படியாவது மறுபடியும் பாவத்திற்கு அழைத்து பின் மாற்றத்திற்கு தள்ளி மறுபடியும் அவனுடைய பிள்ளையாய் மாற்ற முயற்சிக்கிறான்.

பிதாவாகிய தேவனையும், குமாரனாகிய இயேசுகிறிஸ்துவையும், பரிசுத்த ஆவியான தேற்றரவாளனையும் பிசாசு வெறுக்கிறபடியால்  அந்த வெறுப்பை அவன் உங்களிடத்தில் காண்பிப்பான். உங்களுக்கு பரம விரோதியாக இருந்து எல்லாவிதத்திலும் உங்களை தாக்க முயற்சிப்பான்.

அதற்காகவே சோதனை என்ற அக்கினியாஸ்திறங்களையும், விஷ அம்புகளையும் உங்களுக்கு விரோதமாக தொடுக்கிறான். இன்னும் விபசார ஆவிகள், வேசித்தன ஆவிகள், கன நித்திரையின் ஆவிகள், கொலைவெறி, ஜாதி வெறியின் ஆவிகள், கோபம், எரிச்சல்கள், பொறமை, குழப்பத்தை ஏற்படுத்தும் ஆவிகள், போன்றவற்றை கொண்டு வருகிறான்.

ஒரு பக்கம் பரிசுத்த தேவனும், அவருடைய தூதர்களும், கேருபீன்களும், செராபீன்களும், இருக்கிறார்கள்.  மறுபக்கத்தில் பிசாசும் அவனது கூட்டமும் இருக்கின்றன.  இந்த உலகத்தில் கர்த்தர் தன்னுடைய இராட்சியத்தை ஸ்தாபிக்க விரும்புகிறார். அதே நேரம் சாத்தானும் அவனுடைய   இராட்சியத்தை ஸ்தாபிக்க முற்படுகிறான்.

கயிற்றின் ஒருமுனை ஒரு கூட்டமும், மறுமுனையில் ஒரு கூட்டமும் இழுப்பது போன்று...... கடைசியில் பெலவான்கள் வெற்றி பெறுவார்கள்...கயிறு இழுக்கும் போட்டி...   இதைப்போலத்தான் நமது ஆத்மா. ஒரு பக்கம் கிறிஸ்துவும், அவருடைய தூதர்களும், ஊழியக்காரரும், மறுபக்கம் சாத்தானும் , வானமண்டல பொல்லாத ஆவிகளும் , சினிமா நடிகர்கள், நடிகைகள், மாம்ச இட்சைகள் சிற்றின்பங்கள் வெளிப்படுத்துகிறவர்கள் இழுப்பார்கள்.

யார் ஜெயிப்பார்கள்?....கர்த்தர்-பரலோகத்தை நோக்கி அல்லது சாத்தான் ....பாதாளத்துக்கும் அக்கினி கடலுக்கும் கொண்டு செல்ல.

தென் கொரியா, போதகர் பால் யாங்கி சோ......ஒருமாதம் ஒரு வியாதி. போனது..  ஆவியானவரே உதவி செய்யும், “. ...ஒரு சத்தம் “மகனே நீ பிசாசை ஜெயிக்கும்படி இயேசுவின் இரத்தத்தை பயன்படித்திக்கொள்” பிசாசே இயேசு உன் தலையை நசிக்கினார். இயேசுவின் இரத்தத்தை உன்மேல் தெளிக்கிறேன் என்றார் உடன் அந்த சர்ப்பம் பிடியை தளர்த்தி அவரை விட்டு போய் விட்டது.

பிசாசை எதிர்த்து ஜெபிக்கும்போது, முதலாவது கர்த்தர் உங்களுக்கு கொடுத்த வல்லமையின் ஆயுதமாகிய இவற்றை பயன் படுத்துங்கள்:

இயேசுவின் இரத்தம் & இயேசுவின் நாமம்: வெளி 12- 11. மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்....
யாக்கோபு 4:7 ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு  எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.

உபாகமம் 28 - 10. அப்பொழுது கர்த்தருடைய நாமம் உனக்குத் தரிக்கப்பட்டது என்று பூமியின் ஜனங்களெல்லாம் கண்டு, உனக்குப் பயப்படுவார்கள்.

     இயேசுவின் நாமத்தை நீங்கள் எப்போது, உங்கள் முன் வைத்திருப்பீர்களானால், நீங்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உங்களை எதிர்த்து நிற்பதில்லை.

 

கொளியத்தை தாவீது .... I சாமுவேல் 17- 45. அதற்குத் தாவீது: பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்...

1 வல்லமை உண்டு, உண்டு, அற்புத வல்லமை

2 இரத்தத்தால் ஜெயம் , இரத்தத்தால் ஜெயம், இரத்தத்தால் ஜெயம், இயேசுவே

3 இரத்தக்கோட்டைக்குள்ளே நான் நுழைந்துவிட்டேன் இனி எதுவும் அணுகாது....

கொஞ்சே நேரத்தில் பிசாசு தானாய் போய்விடுவான்.. இயேசுவின் இரத்தம் ஜெயம், இயேசுவின் நாமம் ஜெயம் என்று கூறவேண்டும்.

பேதுரு... அப்போஸ்தலர் 3- 6. அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி;
7. வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான், உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன் கொண்டது.   8. அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூட தேவாலயத்திற்குள் பிரவேசித்தான்.

கொலோசெயர் 3-17. வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகியஇயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.  எபிரெயர் 13- 15. ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.

வேத வசனம்: சாத்தனுக்கு இன்னொரு பெயர் உண்டு என்ன? “சோதனைக்காரன்”. சோதிப்பதற்கான காரணம், உங்களை சோதனையில் விழச்செய்து, மனசாட்சியை வாதித்து, மற்றவர்கள் காலில் மிதிக்கத்தக்கதாக, கீழே தள்ளுவதாகும்.. மத்தேயு 4...மூன்று சோதனை.. எபேசியர்  6- 17. இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். எபிரெயர் 4:12 தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ளஎந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.

வேதவசனம் உங்களுக்கு விரோதமாக வரும் அந்தகார வல்லமையை முறியடிக்கிறது.

ஆடு நனைகிறது என்று ஓநாய் வருத்தப்பட்டது போல..இயேசுவை.....   மத்தேயு 4-4 அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.   அப் 20-29..... பிலிப்பியர் 2-14....ஜீவ வசனத்தை பிடித்துக்கொண்டு உலகத்திலே சுடர்களைப் போலப் பிரகாசியுங்கள்.

கண்ணீரின் ஜெபம் & உபவாச ஜெபம்:  ஓசியா 12-3,4...யாக்கோபு தன் சகோதரன் ஏசா நானுறு பேரோடு அவனுக்கு எதிர்கொண்டு வரும்போது, பயந்து “தேவனோடு போராடி ஆசிர்வாதத்தை பெற்றுக்கொண்டான்...”.. சத்துருவை எதிர்த்து நிற்க ஜெப ஜீவியம் அவசியம்.. (ஆதி.32-28) ...ஓசியா 12-3,4.... விசுவாசத்தோடு கண்ணீரின் ஜெபம், கர்த்தருடைய உள்ளத்தை உருக்குகிறது. அவர் ஜெபத்தை கேட்கிறவர் மாத்திரமல்ல, பதில் கொடுக்கிறவர்...ஆமென்...

உங்களுக்கு பிரச்சனையா, போராட்டமா, அநேகர் உங்களுக்கு விரோதமாக எழும்பினார்களா, மந்திரமா, தந்திரமா, பில்லிசூனியமா, ஜெபியுங்கள், கண்ணீருடன், .... சங்கீதம் 126-5. கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள். 6. அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்.  ......  இயேசு கண்ணீர் விட்டார்...யோவான் 11-35... லூக்கா 19-41.கெத்செமனே தோட்டத்தில் கண்ணீருடன் ஜெபித்தார்....எபி 5-7....சங்கீதம் 51-17... நிச்சயமாகவே பதில் உண்டு..... 1 கொரி 15- 42,43... பலமுள்ளதாய் எழுந்திருக்கும்....

ஒருவர் பாரத்தை ஒருவர் சுமத்து ஜெபிக்கவேண்டும்..உபவாசமும், கண்ணீரின் ஜெபமும் கர்த்தர் கொடுக்கிற வெற்றியின் ஆயுதங்களாகும்.....சங்கீதம் 51 17......  மத்தேயு 17-21. இந்த ஜாதிப்பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்....பாவத்திற்கும் & சாத்தனுக்கும் உபவாசம் இருக்க வேண்டும்.

மத்தேயு 6:17 நீயோ உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு.
எஸ்றா 8:23 அப்படியே நாங்கள் உபவாசம்பண்ணி, எங்கள் தேவனிடத்திலே அதைத் தேடினோம்; எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டருளினார்.
ஏசாயா 58:3 நாங்கள் உபவாசம்பண்ணும்போது நீர் நோக்காமலிருக்கிறதென்ன? நாங்கள் எங்கள் ஆத்துமாக்களை ஒடுக்கும்போது நீர் அதை அறியாமலிருக்கிறதென்ன என்கிறார்கள்; இதோ, நீங்கள் உபவாசிக்கும் நாளிலே உங்கள் இச்சையின்படி நடந்து, உங்கள் வேலைகளையெல்லாம் கட்டாயமாய்ச் செய்கிறீர்கள்.
ஏசாயா 58:7 பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக்கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்.

துதியின் சத்தம்:   எரிகோவுக்கும், அங்கே இருந்த வீரர்களுக்கும், மதில்களுக்கும் விரோதமாக யோசுவா பயன்படுத்திய ஆயுதம் என்ன? அது துதியின் சத்தம்.  யோசுவா 6 - 20. எக்காளங்களை ஊதுகையில், ஜனங்கள் ஆர்ப்பரித்தார்கள்; எக்காள சத்தத்தை ஜனங்கள் கேட்டு, மகா ஆரவாரத்தோடே முழங்குகையில், அலங்கம் இடிந்து விழுந்தது; உடனே ஜனங்கள் அவரவர் தங்களுக்கு நேராகப் பட்டணத்தில் ஏறி, பட்டணத்தைப்பிடித்து,....... துதிகளின் மத்தியில் வசம் பண்ணுகிற ஆண்டவர்.. துதிக்கும் போது எல்லா தடைகளையும் எதிர்ப்புகளையும் சத்துருவுடைய எல்லா வல்லமைகளையும் நொறுக்கி விழ செய்வார்....சங்கீதம்..34 -1. சங்கீதம் 145-2 .....பவுலும் ஷீலாவும் சிறைச்சாலையில் தேவ அன்பினால் நிரப்பப்பட்டு நடுராத்திரியில் கர்த்தரை பாடி துதித்து ஆர்ப்பரித்தார்கள்.அப்பொழுது....அப்.16-26..........எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று..

யூதா என்றால் கர்த்தரை துதிப்பேன் என்பதாகும்... துதிக்கும் போது ஜெயம் பின்னாலே வரும்..  சாத்தனை எதிர்த்து நின்று ஜெபிக்கும் போது பரிசுத்த ஆவியனவருடன் சார்ந்து கொள்ளவேண்டும்.. யூதா 1 – 20......     

பரிசுத்த ஆவிக்குள் ஜெபியுங்கள்...    யோவான் 14-26..தேற்றரவாளன்...ரோமர் 8-26. ஜெபத்திலே உங்களுடைய பெலவீனங்களில் உதவி செய்கிறவர்..கர்த்தருடைய ஆவியானவர் எங்கேயோ’ அங்கே விடுதலை உண்டு..2 கொரி 3-17.    2 தீமோ 1-7 தேவன் நமக்கு பயமுள்ள ஆவியை கொடாமல் பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்...

யுத்தம் கர்த்தருடையது. தோல்வி சாத்தானுடையது..ஜெயமோ உங்களுடையது. உங்களுக்கு ஜெயம் கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.

ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு
கோடி கோடி ஸ்தோத்திரம்
வாழ்வளிக்கும் இயேசு ராஜாவுக்கு
வாழ்நாளெல்லாம் ஸ்தோத்திரம்.......அல்லேலூயா அல்லேலூயா பாடுவேன் ஆனந்த தொனியால் உயர்த்துவேன்

நீதியின் கரத்தினால் தாங்கியே நடத்துவார்
கர்த்தரே என் பெலன் எதற்குமே அஞ்சிடேன்

அற்புதம் செய்பவர் அகிலம் படைத்தவர்
யுத்தத்தில் வல்லவர் மீட்பர் ஜெயிக்கிறார்

நம்பிக்கை தேவனே நன்மைகள் அளிப்பவர்
வார்த்தையை அனுப்பியே மகிமைப்படுத்துவார்

உண்மை தேவனே உருக்கம் நிறைந்தவர்
என்னைக் காப்பவர் உறங்குவதில்லையே