திருமணம், மறுமணம், விவாகரத்து - கிருஸ்துவர்கள்
அருமையானவர்களே, நமது இந்திய பண்பாட்டில் திருமணம் என்பது சடங்காக மட்டுமில்லாமல், இரு ஜீவன்கள் கடவுள் கொடுத்த ஆயுள் வரை இன்ப-துன்பங்களில் இணைந்து வாழ்க்கை நடத்த வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டுள்ளது சரி. கணவன் மனைவி என்பவர்கள் ஒரு புது சமுதாயத்தை உருவாக்குபவர்களாகவும் அல்லது ஓர் புது அத்தியாயத்தை தோற்றுவிக்கிறவர்களாகவும் இருப்பார்கள். இன்றைய கிருஸ்துவ சமுதாயம் புறஜாதிகளை போல அல்ல, மிகவும் அதிகமாக அல்லது வேகமாக கணவன் மனைவி பிரிவை, இந்த விவாகரத்தை (Divorce) செய்துவருவது தான் வருத்தத்துக்குரியது. நீதிமன்றங்களில், தினசரி செய்திதாளில், ஊடகங்களில் அதிகம் தெரிவது கிருஸ்துவ குடும்பங்களின் சீரழிவுகள். ஒருவேளை ஒரு குறிப்பிட்ட ஊடகம் ஒருமணிநேரம் இந்த காரியங்களை விவாதிப்பதிலேயே தங்களின் TRP விகிதம் கூடுவதற்காக அதிகமாக கிருஸ்துவ குடும்பங்களை தெரிந்தெடுத்து ஒளிபரப்பு செய்கிறார்கள். இதில் அதிகம் பாதிப்பு அடைந்தவர்கள் யார் எனில், காதல் திருமணம் புரிந்தவர்கள் தான் என்றால் அது மிகை ஆகாது. அன்பானவர்களே, நாம் இந்த பாவத்திலிருந்து மீள்வதற்கு என்ன தான் வழி என்று வேதம் சொல்லுகிறது. முதலில் திருமணம், விவாகரத்தை பற்றியும் பிறகு மறுதிருமணத்தை பற்றியும் பார்ப்போம்.
இப்படியாக, திருமண பந்தத்தை பற்றி வேதம் நமக்கு திட்டமாக கூறுகிறது. விவாகரத்தைப் பற்றி ஒருவர் எந்த கண்ணோட்டத்தை எடுத்துக்கொண்டாலும், மல்கியா 2:16 “தள்ளிவிடுதலை (விவாகரத்து) நான் வெறுக்கிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்” என்பதை முதலாவது நினைவிற்கொள்ள வேண்டும். கர்த்தர் ஒரு காரியத்தை வெறுக்கிறார் என்றால் அது பாவம் என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.
அவிசுவாசியான கணவனோ மனைவியோ விசுவாசியான தன்னுடைய துணையை விவாகரத்து செய்யும்போது மறுதிருமணத்திற்கு அனுமதியை 1 கொரிந்தியர் 7:15இல் சொல்லப்பட்டுள்ள “விலக்கு” மூலம் அளிக்கப்படுவதாகச் சிலர் புரிந்துகொள்கிறார்கள். |
I கொரிந்தியர் 7 : 15. ஆகிலும், அவிசுவாசி பிரிந்துபோனால் பிரிந்துபோகட்டும், இப்படிப்பட்ட விஷயத்தில், சகோதரனாவது சகோதரியாவது அடிமைப் பட்டவர்களல்ல. சமாதானமாயிருக்கும் படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார். .... ஆனாலும் இது வேதாகமத்தில் காரணமாகக் கூறப்படவில்லை. இது இப்படியாகவே இருந்தாலும் கர்த்தருடைய வசனத்திலும் அப்படித்தான் கூறப்பட்டிருக்கும் என்று ஒரு ஊகத்தில் சொல்லுதல் சரியானதல்ல. குடும்பம்: II தீமோத்தேயு 3 : 1. மேலும், கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக. 2. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், 3. சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், 4. துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், 5. தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு. 6. பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுப்புண்டு, 7. எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற பெண்பிள்ளைகளுடைய வீடுகளில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக்கொள்ளுகிறார்கள். “அதிகம் படித்துவிட்டோம் என அநேகர் நினைத்து தன்னைத்தான் ஒரு கன்னியிலே விழ வைக்கும் ஒரு கூட்டம் இன்றைய கிருஸ்தவ மக்களிடையேஇருக்கிறது. ஆகவே பெண்கள்தான் அதிக கவனமாய் இருக்கவேண்டும். காதல் என்ற கன்னி வலையில் நம்முடைய பெண்கள் அநேகர் சிக்கிக்கொண்டு எதிர்கால வாழ்க்கையை இழந்து பரிதாபமாக இருக்கின்றனர். நாம் வாழும் இந்த ஒரே வாழ்க்கையில் முன்னேறி போகமுடியாது, ஆக இந்த மாதிரி சிக்கல்கள் வந்தால் பிற்கால/வருங்கால வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாக நேரிடும் மற்றுமல்ல உங்கள் குடும்ப மற்ற உறுப்பினர்களையும் அது பாதிக்கும். ஒரேயொரு வாழ்க்கைதான், அதை நன்றாக ஆண்டவர் விரும்பும் வகையில் அமைத்துக்கொண்டால் நமது சந்ததி ஆசிர்வதிக்கப்படும் நாமும் சாபம் நீங்கி ஆசிர்வதிக்கப்படுவோம்.” அப்படியே காதல் செய்துவிட்டால் அவரிடம் வாழ்நாள் முழுவதும் கூட இருந்து அன்போடு வாழவேண்டும். I கொரிந்தியர் 12:24 நம்மில் இலட்சணமுள்ளவைகளுக்கு அலங்கரிப்பு வேண்டியதில்லை. அநேக பெண்கள் இன்றைய வாழ்வில் தமக்கு தேவை என புற அலங்கரிப்பு, பொன், பொருள், உலக ஆசை, சிற்சில சிற்றின்ப ஆசைகள் (மாற்றான் ஆசை வார்த்தைகளை நம்புவது, சினிமா, சீரியல், ஆபாச காரியங்களை பேசுவது) இவைகளுக்காக தங்களின் வாழ்க்கையையே இழந்திருக்கிறார்கள். பணத்தை ஒரு பெரும் பொருளாக பணத்தாசை மிகுதியால் தங்கள் கணவரை அல்லது தகப்பனாரை லஞ்சம் மற்றும் செய்யக்கூடாத காரியங்களை செய்யவைப்பதின் மூலம் குடும்பமாக பாவம் செய்கின்றனர். நமது பெண்கள் அநேகர் இந்த பண ஆசையால் என்ன செய்வதென்றே தெரியாமல் கடும் சொற்களால், கெட்ட காரியங்களால், தங்களை கெடுத்துக்கொண்டிருக்கிரார்கள். குடும்பம் உடைவதற்கு இதெல்லாம் பல வேளைகளில் காரணமாகின்றது.
ஊழியம் செய்பவர்: I தீமோத்தேயு 3 : 1. கண்காணிப்பை விரும்புகிறவன் நல்லவேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை. 2. ஆகையால் கண்காணியானவன் (a person who supervises others- A Good Husband) குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும். 3. அவன் மதுபானப்பிரியனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனுமாயிராமல், பொறுமையுள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பண ஆசையில்லாதவனுமாயிருந்து, 4. தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும், தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாயிருக்கவேண்டும். 5. ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்? ..7. அவன் நிந்தனையிலும், பிசாசின் கண்ணியிலும் விழாதபடிக்கு, புறம்பானவர்களால் நற்சாட்சி பெற்றவனாயுமிருக்கவேண்டும். மேலும் பல வசனங்கள் கணவன் மனைவி உறவு பற்றி வேதாகமத்தில் உள்ளது:
I கொரிந்தியர் 7:10 விவாகம்பண்ணிக்கொண்டவர்களுக்கு நானல்ல, கர்த்தரே கட்டளையிடுகிறதாவது: மனைவியானவள் தன் புருஷனை விட்டுப் பிரிந்துபோகக்கூடாது.
இருவரும் சேர்ந்து செய்யும் பாவம்:
மேலும் வேதம் கணவன் மனைவியின் உறவின் ஆழத்தை கூறும்போது: - I கொரிந்தியர் 7:4 மனைவியானவள் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி; அப்படியே புருஷனும் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி. குடும்பம் பண்ணும் ஊழியம் செய்பவர்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்:
மாற்கு 6:18 யோவான் ஏரோதை நோக்கி: நீர் உம்முடைய சகோதரன் மனைவியை வைத்துக்கொள்வது நியாயமல்லவென்று சொன்னதினிமித்தம், ஏரோது சேவகரை அனுப்பி, யோவானைப்பிடித்துக் கட்டிக் காவலில் வைத்திருந்தான்.... இங்கே நாட்டை ஆளும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கும் அதே நிலை தான், “நியாயம் இல்லை” என்பதை பாவம் என்று பொருள் கொள்ளலாம். வேதாகமத்தின் படி ஒருவனுக்கு ஒருத்தி என்பது தான் முறை; அவற்றை கீழ்காணும் வசனங்கள் மூலம் நாம் காணலாம்: லூக்கா 16:18 தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம்பண்ணுகிறவன் விபசாரஞ்செய்கிறான், புருஷனாலே தள்ளப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறான். மாற்கு 10:7 இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அன்பான பெண்களே, நீங்கள் ஒரு புத்தியுள்ள மனைவி என்று உங்கள் கணவரிடமும், பிள்ளைகளிடமும், சமுதாயத்திடமும் பேர் வாங்க வேண்டும். அவர்களிடம் வாங்குவதை விட கடவுள் உங்கள் இருதயத்தை பார்க்கிறவர், ஆக யார் பார்த்தாலும், பார்க்காவிட்டாலும் அவர் உங்களை எப்பொழுதுதம் பார்க்கிறவர். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக.......
என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு. பிலிப்பியர் 4:13 |