பிரியமான ஊழியக்காரன்

07/09/2024 08:54

பிரியமான ஊழியக்காரன் :

ரோமர் 14: 17,18- தேவனுடைய ராஜ்ஜியம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுன்டாகும் சந்தோசமுமாயிருக்கிறது. இவைகளிலே, கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்கிறவன் தேவனுக்கு பிரியனும் மனுஷரால் அங்கீகரிக்கப் பட்டவனுமாயிருக்கிறான்.  It also says that people who serve Christ in this way are pleasing to God and will be accepted by others.

ஒருவேளை நீங்கள் நினைக்கலாம் ஊழியம் செய்வதே ஆண்டவருக்கு பிரியம்தானே என்று.  ஆம் அது சரிதான்.  ஆனால் “இவைகளிலே கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்கிறவன் என்று” இந்த வேத வசனம் சுட்டிக் காண்பிக்கிறது.  எப்படி ஊழியம் செய்கிறவன், கிறிஸ்துவுக்கு பிரியமானவனாக? இவைகளிலே? என்றால் எவைகளிலே?.... “நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷத்தினாலே ஊழியம் செய்கிறவனே தேவனுக்கு பிரியமானவன்”. 

கிறிஸ்துவை கிட்டிச் சேருவதற்கு முன்பு, சந்தோஷம் என்றால் அது புசிப்பும் குடிப்புமாய் இருந்தது. சந்தோஷம் என்பது களியாட்டுகளிலும், வெறிகளிலும்தான் இருந்தது. சினிமாக்களிலும், நாடகங்களிலும் இருந்தது. நண்பர்களிலும், மது(போதை), மாது, சூது என்று இருந்தது. அவைகளெல்லாம் போலியான, ஒன்றுக்கும் உதவாத நிலையற்ற சந்தோஷங்கள்.

இன்றைக்கு Yehova Witness, Satinic Worship, இன்னும் அநேக வேத புரட்டர்கள், சிலர் worship என்ற பெயரில் சினிமா பாட்டிற்கு ஆட்டம் பாட்டம் போடும் ஊழியம், போன்றவர்கள் கூட கிருஸ்தவர்கள் என்ற போர்வையில் ஊழியம் செய்கின்றனர்....

இங்கே அதைக் கூறவில்லை பவுல், கிறிஸ்துவுக்காக ஊழியம் செய்ய முழு நேர ஊழியருண்டு, பகுதி நேர ஊழியருண்டு, சரீரப் பிரகாரமான ஊழியங்களும் உண்டு, ஆவிக்குரிய ஊழியங்களும் உண்டு, பிரசங்கிக்கிற ஊழியங்களும் உண்டு, ஜெபிக்கிற ஊழியங்களும் உண்டு, இப்படி அநேக ஊழியங்களுண்டு. இவைகளிலே நாம் எப்படி ஒப்படைப்புடன் ஊழியம் செய்கிறோம் என்பதை ஆண்டவர் கவனிக்கிறார் என்று பவுல் கூறுகிறார். குறிப்பாக இந்த அதிகாரம் பலவீனமான ரோம விசுவாசிகளுக்காகக் கூறப்பட்டது.  பொதுவாக நாம் ஆவிக்குரிய ரீதியில் பலவீனமானவர்கள் என்பதை ஒத்துக் கொள்வது கிடையாது.  

பிரியமானவர்களே, நாம் அனேக நேரங்களில் மனிதர்களின் பார்வைக்காகவும்,  அவர்கள் நம்மைக் கவனிக்கிறார்களா என்றே ஊழியம் செய்கிறோமே ஒழிய ஆண்டவரின் பார்வைக்கு பிரியமாக என்னுடைய ஊழியம் இருக்கிறதா என்று பார்ப்பது கிடையாது.  குறிப்பாக நாம் கடமைக்காகவோ அல்லது முறுமுறுப்போடோ ஊழியம் செய்யாமல், பரிசுத்த ஆவியினால் உண்டாகும் சந்தோஷத்தோடே ஊழியம் செய்வதே கர்த்தருக்கு பிரியமானது. 

ஊழியம் என்பது ஆண்டவரின் கட்டளை :  மத்தேயு 28 -19. ஆகையால், நீங்கள் a) புறப்பட்டுப்போய்(getting ready / prepare), b) சகல ஜாதிகளையும் சீஷராக்கி (Practical & theoretical teaching of Christ) , c) பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து, 19. Go ye therefore, and teach all nations, baptizing them in the name of the Father, and of the Son, and of the Holy Ghost:

சரியாக புரிய வேண்டுமெனில் :  (ஞானஸ்நானம் என்பது ஆண்டவருக்குள்ளாக நமது புதிய வாழ்க்கையின் ஒரு ஆரம்ப நிகழ்வு, இயேசுவின் சாயலில் தோய்ந்து,  அவரை விசுவாசித்து அவருக்கு கீழ்ப்படிந்து ஆவி ஆத்துமா சரீரம் மாற்றப்படுவதோடு இயேசு நம்முடைய பாவங்களுக்காக மரித்ததைப் போல, பாவத்திற்கு நாம் மரிப்பதின் நிகழ்வு. இது இயேசுவை அடக்கம் செய்தது போல், நமது பழைய வாழ்க்கை முறையை அடக்கம் செய்யும் நிகழ்வு. இயேசு மரித்தோரில் இருந்து எழுந்தது போல நாமும் அவருக்குள் புதிய சிருஷ்டியாக மாறும் நிகழ்வு).

20.  நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்;  இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.  20. Teaching them to observe all things whatsoever I have commanded you: and, lo, I am with you always, even unto the end of the world. Amen.

சரி இப்பொழுது ரோமர் 14: 17,18 வசனத்திற்கு வருவோம்..... ஆண்டவருக்கு பிரியமாக ஒருவர் ஊழியம் செய்ய வேண்டுமென்றால் அவருக்கு இரண்டு விதமான அனுபவங்கள் இருக்கவேண்டும்:-

முதலாவது, இரட்சிப்பின் அனுபவும் அவருக்கு தேவை என்று வேதம் சொல்லுகிறது.   இந்த வசனம் சொல்லுகிறது “நீதியும் சமாதானமும்” பெற்றவர்களாய் ..... அதாவது இயேசு கிருஸ்துவை விசுவாசித்து மனமாற்றம் அடைந்து பாவமன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்ற அந்த இரட்சிப்பின் அனுபவத்திற்குள் வந்தவர்களாய் நேர்மையாய், சமாதானமாய் ஊழியம் செய்யவேண்டும். இரட்சிக்கப்பட ஒருவர் அனுபவிக்கும் முதல் அனுபவம் சமாதானம், இரண்டாவது நேர்மை.  இதுதான் இரட்சிப்பின் சந்தோசம். நம்முடைய முந்தைய பாவ இருதயத்தில் அடையும் மாற்றமே இந்த நீதி(நேர்மை தவறாத நடத்தை) மற்றும் சமாதானம் (உணர்வுகளைக் கட்டுப்படுத்துதல்) அடையும் நிகழ்வு.    எபிரெயர் 9-14 “ நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!How much more shall the blood of Christ, who through the eternal Spirit offered himself without spot to God, purge your conscience from dead works to serve the living God? (உயிருள்ள கடவுளுக்கு சேவை செய்ய உங்கள் மனசாட்சியை இறந்த செயல்களிலிருந்து தூய்மைப்படுத்துங்கள்) எவ்வளவு அழகான, ஆழமான வசனம் பாருங்கள்.......எந்தப் புலவராலும், அறிஞராலும் கூறமுடியாத வார்த்தைகள்....

மேலும் கர்த்தருடைய வசனம் எப்படிப்பட்டது........“தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.” (எபிரெயர் 4:12

ஆகவே தேவனுக்கு ஊழியச்செய்ய முதலாவது கிறிஸ்துவின் இரத்தத்தினால் பாவமன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்று, கழுவப்பட்டு புது சிருஷ்டியாக (இரட்சிப்பு) இருக்கவேண்டும். (2 கொரி 5:17) அதோடு விட்டுவிடாமல், அதன்பின்னர், இரட்சிக்கப்பட்ட ஒவ்வொருவரும் தேவ வசனத்தால் நமது இருதயத்தை நிரப்பவேண்டும். அது வெறுமையாக இருக்கக் கூடாது. உங்கள் இருதயம் வசனத்தால் நிரம்பியிருப்பதால் உங்களுடைய வாய் சத்தியத்தைப் பேசும். (இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்-மத் 12-34).    

இரண்டாவது, பரிசுத்த ஆவியின் சந்தோசம் அவருடைய உள்ளத்திலும், ஊழியத்திலும் நிரம்பியிருக்கவேண்டும்.  இரட்சிப்பின் சந்தோசம் முதலில், இப்பொழுது இந்த பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தில் இன்னும் அதிகமான சந்தோஷம் வருகிறது. பரலோகத்தில் வாசம் பண்ணுகிற தேவாதி தேவன், பரிசுத்த ஆவியினாலே உங்களுக்குள் வந்து வாசம் பண்ணுவது ஒரு பெரிய மகிழ்ச்சிதானே. அவர் உங்களோடு இருப்பதும், உங்களோடு பேசுவதும், உங்களை வழிநடத்துவதும் மகிழ்ச்சியின்மேல் மகிழ்ச்சியை உங்களுக்குக் கொண்டு வருகிறது. கடமைக்காக செய்யாமல், மனப்பூர்வமாயும், உற்சாகமாயும் சந்தோஷத்துடன் ஊழியம் செய்யும்போது நாம் அதிகமான அறுவடையைக் காணமுடியும். “நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்கள் என்றும் தேவனுடைய ஆவி உங்களில் வாசாமயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா” ..1 கொரி 3-16. அந்த பரிசுத்த ஆவியானவர், பரிசுத்தமான இடத்தில் வாசம் பண்ணுகிறார்.  ஆக நாம் பரிசுத்தமாக இருக்கவேண்டும், என இயேசு கிறிஸ்து விரும்புகிறார். 

முக்கியமாக, அந்த பரிசுத்த ஆவியின் மூலமாக தேவனுடைய அன்பு உங்களுடைய இருதயத்தில் ஊற்றப்படுகிறது (ரோமர் 5:5).   பரிசுத்த ஆவியின் மூலம் உங்களுக்குள் சந்தோஷம் ஏற்படுவதற்கு இன்னொரு காரணம், அதனால் உங்களுக்குள் கனிந்து வருகிற ஆவியின் கனிகள்தான். பரிசுத்த ஆவியாகிய நதி உங்களுக்குள்ளே பாய்கிறதினாலே ஆவியின் கனிகள் உங்களுக்குள் உண்டாகின்றன. அவை எத்தனை இனிமையான கனிகள்! அந்த ஒன்பது கனிகளையும் குறித்து கலா. 5:22-ல் ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், 23. சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.

பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும்போது, மகிழ்ச்சியுடனே கர்த்தருக்கு ஊழியம் செய்ய நீங்கள் புறப்பட்டுப் போகிறீர்கள். உங்களுக்காக பூமியிலே இறங்கி வந்து ஊழியம் செய்தவருக்காக நீங்களும் ஊழியம் செய்வது என்பது ஒரு பாக்கியமான அனுபவம் அல்லவா? சந்தோஷமான கடமை அல்லவா? அப். பவுல், “சந்தோஷத்துடனே உங்களிடத்தில் வந்து உங்களோடு இளைப்பாறும்படியாக” (ரோமர் 15:30).   பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட சீஷர்களை கர்த்தர் மகிழ்ச்சியினாலும் நிரப்பினார். வேதம் சொல்லுகிறது, “சீஷர்கள் சந்தோஷத்தினாலும் பரிசுத்த ஆவியினாலும் நிரப்பப்பட்டார்கள்” (அப். 13:52). தேவபிள்ளைகளே, நீங்களும் அவ்விதமாய் நிரப்பப்படுவீர்களாக. பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும்போது நிச்சயமாகவே உங்களுக்கு சந்தோஷமும், மனமகிழ்ச்சியும் உண்டு.

ஆம் பிரியமானவர்களே, எந்த மனுஷன் இரட்சிப்பின் அனுபவமில்லாமல், பரிசுத்த ஆவியின் சந்தோசமில்லாமல் ஊழியம் செய்கிறாரோ, அவனுடைய ஊழியத்தில் அதிக / நல்ல கனிகள் இருப்பதில்லை.  அவன் சோர்ந்து போவான். (எரேமியா 48-10 கர்த்தருடைய வேலையை அசதியாய்ச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன், என்று வேதம் சொல்லுகிறது).

பவுலையும் சீலாவையும் பாருங்கள் அவர்கள் எப்போதும் உற்சாகத்தோடு கர்த்தருக்கு ஊழியம் செய்தார்கள்.  ஒருமுறை அவர்கள் பிலிப்பி பட்டணத்தில் ஊழியம் செய்தபோது பவுலையும் சீலாவையும் பிடித்து அடித்து உள்காவல் அறையிலே அடைத்து அவர்கள் கால்களை தொழுமரத்தில் மாட்டிவைதார்கள்.  அந்தப் பாடுகளின் மத்தியிலும் அவர்கள் உள்ளம் பரிசுத்த ஆவியினால் உண்டாகிற சந்தோஷத்தினாலே நிறைந்திருந்தது. வேதம் சொல்லுகிறது, நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள். காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்...அப் 16-25அப்படியே அவர்கள் தியாகமாய் ஊழியம் செய்ததைக் கர்த்தர் கண்டு மனமகிழ்ந்தார், அவர்கள் மேல் பிரியமானார்.  அப் பவுலின் ஊழியமெல்லாம் கர்த்தரைப் பிரியப்படுத்துகிறதாகவே இருந்தது.  மட்டுமல்லாமல் சந்தோஷத்தோடு அவர் கர்த்தருடைய ஊழியத்தைச் செய்தார்.  தேவபிள்ளைகளே, சமயம் வைத்தாலும் வைக்காவிட்டாலும் கர்த்தருடைய ஊழியத்தைச் சந்தோஷத்தோடு செய்வீர்களா.

யோவான் 12-26 ஒருவன் எனக்கு ஊழியம் செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக் கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்.  ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம் பண்ணுவார்.

நாம் யாருக்கு ஊழியம் செய்கிறோம் அல்லது ஆத்துமா ஆதாயப் பணி செய்கிறோம் தெரியுமா. வெளி 1-8 “இருக்கிறவரும், இருந்தவரும், வருகிறவருமாகிய “சர்வவல்லைமையுள்ள கர்த்தர்; அல்பாவும், ஓமேகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்”.

இந்தக் கதையை ஒரு இணையதளத்தில் படித்தேன், இதைப் பகிராமல் இருக்க முடியவில்லை. அதை படித்து நம் வாழ்வுக்கு ஒரு பாடமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

காட்டின் நடுவில், கர்ப்பிணி மான் ஒன்று குட்டியைப் பெற்றெடுக்கும் தருவாயில் இருக்கிறது. அது ஒரு ஆற்றின் அருகே தொலைதூர புல்வெளியைக் கண்டுபிடித்து, அது பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்து மெதுவாக அங்கு செல்கிறது.   தாய் மான் (அவள்) மெதுவாக நகரும்போது, ​​அவளுக்கு பிரசவ வலி ஏற்படுகிறது. அதே நேரத்தில், அதன் வலதுபுறம் ஒரு வேடன் அம்பினால் இதைக் குறி வைத்திருக்கிறான், அதற்கு எதிர்புறம் ஒரு புலி அந்த மானை புடிக்க ரெடியாக பதுங்கி இருக்கிறது, அப்பொழுது சடிதியாக அந்த பகுதியைச் சுற்றி கருமேகங்கள் குவிந்து மழையும்,  மின்னல் புயல் போன்று காட்டுத் தீயைத் தூண்டுகிறது. மின்னல் வேடனைத் தாக்க அவன் குறி தவறி அம்பு புலி மீது பட்டு புலி செத்துவிட்டது, வேடனும் கீழே விழுந்து விட்டான்.  மழை, காட்டுத் தீயை அணைத்துவிட்டது.  சிறிது நேரத்தில் அந்த இடத்தில் அமைதி நிலவியதும், அந்த மான் குட்டியை ஈன்று இருவரும் சமாதானமாக தங்கள் பகுதிக்கு சென்றதாம்.

இது ஒரு கதையாக இருந்தாலும், ஆண்டவர் தமது பிள்ளைகளை இப்படியாக அதிசயமாக காப்பாற்றுகிறவர் மட்டுமல்ல இளைப்பாறுதல் தருகிறவர். நம்மைச் சுற்றிலும் அனேக எதிரிகள் அல்லது கடினமான சூழல் இருந்தாலும் ஆண்டவர் அவருடைய பிள்ளைகளுக்கு சமாதானத்தை தருவதற்கு வல்லவராக இருக்கிறார்.

ஆக, நமது ஊழியத்தில் அதிக கனிகள் வேண்டுமென்றால், நமக்கு இரட்சிப்பின் அனுபவம் வேண்டும் அதோடு பரிசுத்த ஆவியின் சந்தோசத்தோடு ஊழியம் செய்ய வேண்டும். ஆமென் ... 

மேலும் யாருக்காக, எப்படி ஊழியம் செய்ய வேண்டும்?

நீங்கள் மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், தேவனுக்கு பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடே ஊழியஞ்செய்யுங்கள். கொலோசெயர் 3:22 என்று பவுல் சொல்வது    போல இன்றைக்கு நாம் மனுஷர்களை பிரியப்படுத்தி அவர்கள் பார்க்கும் படிக்கு நம் ஊழியங்களை தெரியப்படுத்துகிறோம். ஜனங்கள் நம் ஊழியங்களை தெரிந்து கொண்டு அவர்கள் நம்மை மேன்மைபடுத்தும் படியாக நாம் செய்யக்கூடிய காரியங்கள் தேவனுக்கு முன்பாக அருவருப்பாக இருக்கிறது. இதை தான் இயேசு கிறிஸ்து மனுஷர் முன்பாக மேன்மையாக எண்ணப்படுவது தேவனுக்கு முன்பாக அருவருப்பாக இருக்கிறது என்றார்.லூக் 16-15.

எனவே பிரியமான ஊழியக்காரர்களே பரலோகம் உன்னை அங்கீகரிக்க வேண்டுமென்றால் முதலாவதாக தேவனுக்கு முன்பாக உங்களை உத்தமனான நிறுத்தி கொண்டு சத்தியத்தை போதியுங்கள்.  ஆதியாகமம் 17-1. ஊழியம் செய்து அநேகரை தேவனுக்காக ஆதாயப்படுத்தினாலும் நாம் தேவனுக்கு முன்பாக நம் செயல்கள் மற்றும் கிரியைகளெல்லாம் எல்லாம் உத்தமமாக இல்லையென்றால் ஒரு பிரயோஜனமில்லை. எனவே முதலாவதாக நாம் உண்மையும் உத்தமமுமாக வாழும் படி நம்மை ஒப்பு கொடுப்போம். ஆமென்.

இயேசு தன் சீஷர்களைத் தேர்ந்தெடுத்தபோது, அவர்களில் ஒருவரைக்கூட எந்த “பைபிள் -ஸ்கூலிலிருந்தும்” தேர்ந்தெடுக்கவில்லை!

அன்று எருசலேமில் “கமாலியேல்” நடத்திய ஒரு பைபிள்-ஸ்கூல் இருக்கத்தான் செய்தது. ஆனால் இயேசுவோ, தன் சீஷர்களைத் தேர்ந்தெடுக்க அங்கு செல்லவேயில்லை! அவரோ தன் சீஷர்களைக் கலிலேயா கரையோரத்திலிருந்த “கல்வியறிவில்லாதவர்களையேத்" தேர்ந்தெடுத்து அவர்களைத் தனது அப்போஸ்தலர்களாய் மாற்றினார். கல்வியறிவில்லாத இவர்களே புத்தகங்கள் எழுதினார்கள்! இன்று அந்தப் புத்தகங்களை, வேத-கலாசாலைகள் தங்கள் மாணாக்கர்களுக்குப் படிக்கக் கொடுத்து, அவர்களை “வேதாகம டாக்டர்களாகப்" பட்டம் பெறச் செய்கிறார்கள்!? இது நம் கண்களுக்கு விந்தையான காட்சியாய் இருக்கிறதல்லவா? இன்றைய வேத-கலாசாலை ஒன்றிற்கு “பேதுரு” சென்று கற்றால், அவர் “பாஸ்” பண்ணி பட்டம் பெற்றிட முடியாது என்றே நான் எண்ணுகிறேன்! ஒருவேளை, அந்த 12- இயேசுவின் சீஷர்களில் திறமையும், கெட்டிக்காரனுமாயிருந்த 'யூதாஸ்காரியோத்து மாத்திரமே' இதுபோன்ற வேதகலாச்சாலை பட்டம் பெற்றிடக் கூடுமோ என்றும் வியக்கிறேன்!!?

இயேசு ஏன் இதுபோன்ற ஜனங்களைத் தேர்ந்தெடுத்தார்? ஏனெனில், இவர்களே எளிய - இருதயமும், இயேசு கூறுவதை கவனித்துக் கேட்க விருப்பம் கொண்டவர்களாயுமிருந்தனர்!  அவர் சொன்னபடி நடந்தாலே போதும்.

லூக்கா 9:23 பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.

இயேசு சொன்னார், தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல-மத்தேயு 10:38

மீன் பிடித்துக்கொண்டிருந்த சீஷர்களை இயேசு கண்டு என் பின்னே வாருங்கள் உங்களை மனிதர்களை பிடிக்கிறவர்களாக மாற்றுவேன் என்று சொன்னார். உடனே, சீஷர்கள் இயேசுவின் பின்னே சென்றார்கள். ஆனால், இயேசு சிலுவை மரணத்திற்கு நேராக சென்றபோது, இயேசுவை பின்பற்றியவர்கள் சீமோன் பேதுரு முதற்கொண்டு எல்லாரும் ஓடிப்போனார்கள்.

இயேசு சொன்னார் என்னை பின்பற்றவேண்டும் என்று சொல்லுபவர்கள் தங்கள் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொள்ளவேண்டும். அப்படியென்றால், உடல்களில் சிலுவை போன்ற பச்சை குத்திக்கொள்ளுவதோ, சிலுவை போன்ற தங்க செயின் போட்டுகொள்ளுவதோ அல்ல. மாறாக, இயேசு கடந்து சென்ற எல்லா பாதைகளையும் கடைபிடிப்பது. தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான் (லூக் 14:27) என்று இயேசு சொன்னார். அப்படியென்றால் அடிப்படை தகுதியே சிலுவையை நாம் சுமக்க வேண்டும்.

நம்முடைய வாழ்க்கையில் சில நேரங்களில் வேலை செய்யும் இடத்தில சிலர் சிலுவையாக மாறுவதுண்டு; குடும்பத்தில் சிலர் நமக்கு துன்பத்தை கொடுத்து சிலுவையாக மாறுவதுண்டு; ஊழியத்தில் நமக்கு எதிராக செயல்பட்டு நமக்கு சிலுவையாக மாறுவதுண்டு. ஆனால் நாம் சிலுவையை சுமக்கும் எல்லா சந்தர்ப்பங்களிலும் ஆண்டவர் நம்மை தனியே விட்டுவிட மாட்டார். உலகத்தின் முடிவு பரியந்தம் உன்னோடுகூட இருப்பேன் என்று சொன்னவர், சிலுவை சுமக்கும் நேரங்களிலெல்லாம் உங்களோடு கூட இருப்பார். அவர் கொடுக்கும் சுமை மெதுவானதாக இருக்கும். உங்களை அளவுக்கு மிஞ்சி சோதிக்கிறவர் அல்ல.

ஆகையால் உங்களுடைய சிலுவையை சந்தோசத்தோடு சுமந்து செல்லுங்கள். சிரேனே ஊரானாகிய சீமோன் சந்தோசத்தோடு சிலுவையை சுமக்கவில்லை. அவனை சிலுவை சுமக்கும்படி பலவந்தம்பண்ணினார்கள் என்று வேதம் சொல்லுகிறது. அப்படியாக தேவ ஜனங்கள் இருக்கலாகாது. இயேசு சிலுவையை சுமந்துசெல்லும்போது அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார் (எபி 12:2). இயேசு சிலுவையை பார்ப்பதற்கு முன்பாக, அதற்குப்பின்பு வைக்கப்பட்டிருக்கிற சந்தோசத்தை முதலாவது பார்த்தார். பிரசவ வேதனைபடுகிற ஸ்த்ரீ அவள் பெறப்போகும் பிள்ளைகுறித்து முதலாவது சந்தோசப்படுவதுண்டு, அதுபோல நீங்கள் கடந்து செல்லுகிற சிலுவை பாதைக்கு பின்பு வரப்போகும் நன்மைகளை நினைத்து சந்தோசத்துடன் பாருங்கள்; மாராவிற்கு பின்பு மதுரம் இருப்பதை பாருங்கள்; அழுகையின் பள்ளத்தாக்கிற்கு பின்பு நீரூற்று இருப்பதை பாருங்கள்; இக்காலத்து பாடுகளுக்கு பிறகு இனிவரும் மகிமையை நோக்கி பாருங்கள். உங்கள் சிலுவையை சந்தோசத்தோடு ஏற்றுக்கொண்டு கடந்து செல்லுங்கள். பாடுகள், நிந்தைகள், அவமானத்தை குறித்து சிறிதேனும் கவலைபடாதிருங்கள். உங்கள் சிலுவையை எடுத்து இயேசுவின் பின்னே நடந்துசெல்லுங்கள். கர்த்தர் உங்களோடு கூட உங்கள் சிலுவையின் பாதையில் இருப்பார். பச்சைமரத்துக்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்துக்கு என்ன செய்யமாட்டார்கள் (லுக் 23:31).

மதுரையில் ஒரு இறையியல் கல்லூரியில் படித்து வெளிவரும் Rev எனப்படும் போதகர்கள் இன்றைக்கு எப்படி இருக்கிறார்கள் தெரியுமா.”அவர்கள் ஒரு சமூக சீர்திருத்த வாதியாக” மாத்திரம் வெளியே வருகிறார்கள்.  ஆண்டவர் தெளிவாக வேதத்தில் கூறுகிறார்  உங்கள் ஆவி ஆத்மா சரீரம் நான் வரும்வரை குற்றமற்றதாக காக்கப்படுவதாக....இந்த காரியங்களில் இன்றைய இறையியல் மாணவர்கள் கவனம் செலுத்துவது கிடையாது.  ஆத்துமாவை மறந்தவர்களாக மனிதனின் சரீரம் பற்றி மட்டுமே கவலைப் படும் போதகர்கள்.  ஆத்துமா ஆதாயம் செய்வதில் கோட்டை விட்டு விடுகிறார்கள்.  தனக்குள்ளே ஒரு வட்டம் போட்டு அதற்குள்ளே இருந்து இறை பணி என்று செய்து கொண்டிருக்கின்றனர்.  அந்தப் படிப்பு ஒரு Professional Education – வேலைக்கான படிப்பாகி விட்டது.  ஒரு போதகர் ஆகி விட்டால் நல்ல மாத சம்பளம், மனைவி, பிள்ளைகள், மருமகள், மருமகனுக்கு அரசு வேலை போன்ற எண்ணத்தில் இறை பணியை மறந்தவர்களாக இறை பணி செய்கின்றனர்.  நம்முடைய பேச்சும் செயலும் ஆண்டவரின் நாம மகிமைக்காக இருக்கும்போது நாம் ஆத்தும ஆதாயம் செய்கிறவர்களாக இருப்போம். கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக.  ஆமென். ஆமென்.