மகிழ்ச்சியான திருமணத்திற்கு 10 எளிய குறிப்புகள்

19/03/2022 15:53

Thanks to நற்செய்தி மலர்

1. உங்கள் வரவுக்குள்ளாக உங்கள் செலவுகள் இருக்கட்டும்.(Your expenses within your income)

2. திருமணம் என்பது வெவ்வேறான குணாதிசியங்கள் உள்ள  இருவர் ஒன்று சேர்வது. ஒன்றுபட்ட நீங்கள் உங்கள் திருமணத்தில் இணைந்து செயல்படுங்கள். உங்கள் பெற்றோர்களின் வழி முறைகள் உங்களுக்கு பொருந்தாது.  Marriage is an assembly of two different charateristic persons.

3. உங்கள் துணையாளரை அறிந்து, ஊக்குவித்து அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகளை அங்கீகரியுங்கள். கருத்துகள் வேறுபடலாம்,  பொதுவான சமவெளிக்கு வாருங்கள். Encourage & recognize your partner to give respect to its individual views.

4. ஆதிக்கம் செலுத்துவதை மறந்து விடுங்கள். உங்கள் துணையாளர் உங்கள் போட்டியாளர் அல்ல. No one is competitor and domnent.

5. நீங்கள் கோபமாக இருந்தால் உங்கள் துணையாளருக்கு சாதாரண தொனியில் தெளிவுபடுத்துங்கள். மன்னித்து மறந்து விடுங்கள். If you are in an angry mood, reply softly and gently to give reply.  Forgive them.

6. ஒருவொருக்கொருவர் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் பிரச்சனைகள், எதிர்பார்ப்புகள், கனவுகள் எல்லவாற்றையும் பேசி தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். Share one another your problems, expectations and speak openly with clear mood.

7. உங்கள் துணையாளரை மகிழ்விக்க தினமும் புதிதாக ஏதாவது ஒன்று செய்யுங்கள். 

8. உங்கள் உடல் உறவு அன்பு மரியாதை இவற்றுக்குட்பட்டதாக இருக்கட்டும்.

9. வாழ்க்கையில் பிள்ளைகள் வருவார்கள், வளர்ந்தபின் உங்களை விட்டு பிரிந்து போவார்கள். ஆனால் உங்கள் துணை வாழ்க்கை முழுவதற்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

10. சிரியுங்கள். ஜெபியுங்கள். ஒருவொருக்கொருவர் நன்றி உணர்வோடு செயல்படுங்கள்.

 

தமிழ் நாடு சுவிசேஷக் குழுவின் மாதாந்திர இதழ்தான் "நற்செய்தி மலர்". 1982ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த குழு, பல்வேறு கிராமங்களிலும், பட்டணங்களிலும் சுவிசேஷத்தை அறிவித்து ஆத்துமாக்களை கிறிஸ்துவினடத்தில் வழி நடத்துகின்றார்கள்.