வேதாகமத்தில் (பைபிள்) மனிதவள குறியீடுகள் – Human Resource Symbols in the Bible(Scriptures)

05/08/2024 14:26
வேதாகமத்தில் (பைபிள்) மனிதவள  குறியீடுகள்  Human Resource Symbols in the Bible(Scriptures)

உலக மக்களில் பெருவாரியான கிறிஸ்தவர்களின் மூலநூலாகிய வேதாகமம் (BIBLE) ஆண்டவர் கொடுத்த வாழ்வியல் தத்துவங்களை அடக்கிய ஒரு இரண்டு பகுதிகள்(Old Testament & New Testament) கொண்ட நியாயப்பிரமாணங்கள், நிபந்தனைகள், வாக்குத்தத்தங்கள், ஆசீர்வாதங்கள், கட்டளைகள் மட்டுமல்ல ஒவ்வொரு காலங்களில் மனிதன் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை, தடைகளை மேற்கொள்ளும் வழிமுறைகளைக் கொண்ட புதையலாக இருக்கின்றது.  அவை ஒவ்வொன்றும் தேவனால் மனிதனுக்கு அருளப்பட்ட ஜீவ வார்தைகள் என்பது மட்டுமல்ல அவைகள்தான் கிருஸ்தவ கலாசாரம் மற்றும் வாழ்வாதாரம்  என்றும் நம்பப்படுகிறது. நேற்றும், இன்றும், என்றும் மாறாத வார்த்தைகள், அதாவது அதிலுள்ள வார்த்தையின் ஆழங்கள் காலத்தால் அழியா கருத்துக்கள் கொண்டவை மேலும் மனிதனால் அழிக்க முடியாதது மட்டுமல்ல எந்த காலத்திற்கும் ஏற்ற சித்தாந்தங்களாக இருகின்றன. (யோவான் 1) ஆக ஏனோ தானோ வென்று வாழும் வாழ்வு கிடையாது கிருஸ்தவ வாழ்வு என்பது, அது ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் அந்த நிறுவனத்தின் சட்ட திட்டங்களை நன்கு புரிந்தவர்களாக, கடின உழைப்பு செய்து, வாழ்விலும் தாழ்விலும் இன்பத்திலும் துன்பத்திலும் கூட்டாக அதன் நிறுவனர் எண்ணம் ஈடேறும்படி நடப்பது போல ஒரு கட்டுக் கோப்பான, சட்ட திட்டங்களுக்குட்பட்டு வாழும்படியாகத்தான் இயேசு கிறிஸ்து விரும்புகிறார்.  அநேகமாக இந்த வேதாகமத்தில் உள்ள அனைத்துக் கருத்துக்கள்தான் இன்றைய உலகளாவிய நிறுவனத்தின் மனிதவள கருத்துக்களாக வெவ்வேறு வடிவத்தில், வெவ்வேறு சூழலில் பிரதிபலிக்கிறது என்றால் அது மிகையாகாது.

 

வேதத்திலுள்ள அதிசயம் என்னவென்றால் உலகின் எந்த மூலையில் வாழும் மக்கள் அதைப் படித்தாலும் அது அவர்களை இந்த மனிதவள கோட்பாடுகளுக்குள் கொண்டுவரும் என்பதுதான் நிதரிசனமான உண்மை. வேதத்தை வாசிப்பதைக் காட்டிலும் அதை தியானிப்பதே தலைசிறந்தது. அதுமட்டுமல்ல எந்தக் காலத்திலும் அதன் உட்கருத்து மாறாததால் அதை ஒரு கடவுளின் அருட்கொடையாகவே கிருஸ்தவர்கள் கருதுகின்றனர்.  ஆகவேதான் இதை வாசிக்கும்போது (உட்கொள்ளும் போது) ஆண்டவர் அவர்களோடு பேசுகிறார், உரையாடுகிறார், அதிசயங்களையும், அற்புதங்களையும் செய்கிறார் என்பது அவர்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையை ஆதிமுதல் இந்நாள் வரை கிருஸ்தவர்கள் பின்பற்றி வருவதோடு “இயேசு கிறிஸ்து” கூறிய வழிமுறைகளைப் பின்பற்றி “மனிதவள குறியீடுகள்” அதாவது அவரின் பிள்ளைகளாகிய மனிதனுக்காக அருளப்பட்ட வார்த்தைகள் பொன் எழுத்துக்களால் வரையறுக்கப்பட்ட கோட்பாடுகளின்படி நடந்து வருபவர்கள் வெற்றி பெறுகின்றனர்.  கிறிஸ்தவம் ஒரு மதமல்ல மாறாக அது “வாழ்வியல் தத்துவம்” என்றும் “அன்றாட வாழ்வியல் கூர் தீட்டும் மார்க்கம்” என்றும்  வேத வல்லுனர்கள் கூறுகின்றனர் மேலும் அது ஒரு கட்டுக்கோப்பான, வெற்றி, தோல்வி கண்டு துவளாத ஒரு நிறுவனம். அதன் முதலாளியாகிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொன்னபடி வாழ்வோம் என்றால் வெற்றி நிச்சயம். 

 

முக்கியமாக கிருஸ்தவர்கள் இந்த உலகில் மட்டுமல்ல, மறுமையில் நித்திய பரலோகத்தில் ஆண்டவரோடு வாழும் பாக்கியத்தையும் பெறுவார்கள் என்பது அவர்களின் நம்பிக்கை. இறைவனை, மனிதன் அடைய “பக்தி மார்க்கம்” உதவும் என்று பொதுவான வேதங்கள் கூறுகின்றன. ஆனால் மதம் என்பது கடவுள் நம்பிக்கையின் அடிப்படையிலான கோட்பாட்டமைப்புகளில் ஓன்று ஆகும். ஒரு கடவுள் அல்லது கடவுள்கள் மீதான நம்பிக்கையும் அது தொடர்பான செயல்பாடுகளும், சமயச் சடங்குகளும் “மதம்” குறிக்கிறது. ஆக அனைவருக்கும் இறைவன் பொதுவானவன் என்றும், அந்த இறைவனை எந்த மனிதனும் கிருஸ்தவின் போதனைகளைக் கொண்டு மார்க்கமாகப் பின்பற்றலாம், மதமாக அல்ல என்கிறது வேதம்.  பின்பற்றுவது வேறு, அதின் அங்கமாக இருப்பது வேறு.  இன்று அநேகர் கிறிஸ்தவத்தை ஒரு மதமாக பின்பற்றுவதால் இறைவனை அடையமுடியாத சூழல் ஏற்படுகிறது. அவர்கள் எல்லாம் “பெயர் கிருஸ்தவர்கள்”, எப்படி ஒரு தொழிலாளி தனது முதலாளியின் எண்ணப்படி நடவாமல் ஒரு கடமையைச் செய்யும் ஒரு வேலையாளாக இருப்பானோ அப்படியே அனேக கிருஸ்தவர்கள் இருக்கிறார்கள்.  ஆனால் ஒரு கிறிஸ்தவன் அவன் கிறிஸ்து தனக்கு சொல்லிக் கொடுத்த மாதிரியான வாழ்க்கையின்படி வாழும்போது மட்டுமே அவன் “உண்மை கிறிஸ்தவன்” ஆகிறான். ஆக  இதை ஒரு மார்க்கம் என்றே கூறவேண்டும், கிருஸ்துவைப் போல அவரின் போதனைகளைப் பின்பற்றுவதே இந்த மார்க்கத்தின் குறிக்கோள். வேலையாள் அதன் நிறுவனர் எண்ணம் ஈடேற வேலை செய்தால் மட்டுமே அந்த நிறுவனம் சரியான வெற்றி பெற்றதற்குரிய அடையாளம்.  ஒரு நிறுவனத்தின் தொழிலாளி தான் அதன் முதல் வாடிக்கையாளர்(customer) மட்டுமல்ல அந்த நிறுவனத்தின் அங்கம்(share holder).   ஆக கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களை உலகம் பொதுவாக கிறிஸ்தவர் என்கிறது.

 

மேலும் வேதாகமத்தில் பணத்தின் முக்கியத்துவம் பற்றியும் அதைக் கையாளும் முறை பற்றியும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. பணத்தைக் குறித்து இயேசு கிறிஸ்து வேதாகமத்தில் அதிகமாக எடுத்துரைத்துள்ளார். உவமைகளாக எடுத்துக்கொள்ளுவோம் என்றால் 38 உவமைகளில் 16 உவமைகள் பணத்தையும், பொருள் அல்லது உடைமைகளை எவ்வாறு கையாளுவது என்பதைப் பற்றியது. இயேசு கிறிஸ்து வேறெந்த கருப்பொருளைக் காட்டிலும் பணத்தைப் பற்றியும், உடமைகளைப் பற்றியும் அதிகம் பேசினார் என்றால் அது மிகைஆகாது. வேதாகமத்தில் ஜெபத்தைக் குறித்து 5௦௦ வசனங்களும், விசுவாசத்தைக் குறித்து 5௦௦க்கும் குறைவான வசனங்களும் இருக்கின்றன, ஆனால் பணத்தையும் உடைமைகளைப் பற்றியும்  235௦ வசனங்களுக்கு அதிகமாகவும் கொடுக்கப்பட்டுள்ளது.  பணத்தைக் குறித்தும் உடைமைகளைக் குறித்தும் மனிதனுக்கு ஒரு தொலைநோக்குப் பார்வை இருக்க வேண்டும் என்பதே அதன் நோக்கமாக இருக்கவேண்டும். மேலும் அதை சரியாக கையாளவேண்டும், கடன் சுமையில்(கடன் கொடுத்தவர்களுக்கு அடிமை) மாட்டக்கூடாது, சேமிப்பு அவசியம், அதைவிட ஈகை, கொடை, தேவையானவர்களுக்கு உதவியைக் கொடுப்பது மிக மிக முக்கியம்.  இயேசு கிறிஸ்து தனக்கு என்று ஒரு பணம் கூட வைத்தது இல்லை என்பது மற்றுமொரு உண்மை.  மேலும் மனிதவள கொள்கை அல்லது ஒரு நிறுவனம் நடத்துவதற்கான விதிமுறைகள் பற்றி தெளிவாக பல இடங்களில் நமக்கு விளக்கியும் இருக்கிறார்.    

ஓன்று மட்டும் மனிதன் புரிந்துகொள்ளவேண்டும், “ எல்லாவற்றிற்க்கும் தேவனே உரிமையாளர்” ஆக நமது உடைமைகள் ஒவ்வொன்றும் அவருடையது. இத்தகைய கண்ணோட்டம் மனிதனுக்கு அவசியம்.  ஆக அவற்றை சரியாக அவர் கூறியதுபோல கையாளவேண்டும்.  நான், என், எனது, என்னுடையது, என்னுடைய அப்பா சொத்து, அம்மா சொத்து என்று சொல்லுவது கூடவே கூடாது, ஏனெனில் அனைத்தும் ஆண்டவருடையது, அவர் நமக்குத் தந்தது.  இந்த பூமியும் அதிலுள்ள உடைமைகளும் நமக்கு ஒரு நிரந்தர கூடாரம் இல்லை.  உலகில் நிகழும் சம்பவங்கள் அனைத்தையும் தம்முடைய கட்டுப்பாட்டில் தேவன் வைத்திருக்கிறார் என்பது எப்பொழுதும் நம்முடைய நினைவில் இருக்கவேண்டும்.  

  

வேதம் சொல்லுகிறது 1 கொரிந்தியர் 10-26 :  பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது.

I நாளாகமம் 29 – 11 கர்த்தாவே மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள், வானத்திலும் பூமியிலும் உள்ளவைகள் எல்லாம் உம்முடையவைகள், கர்த்தாவே ராஜ்யமும் உம்முடையது, தேவரீர் எல்லாருக்கும் தலைவராய் உயர்ந்திருக்கிரீர். 12 ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது, தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர், உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு, எவரையும் மேன்மைப் படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்.

 

ஆக இந்த வசனங்களால் நாம் தெரிந்து கொள்ளலாம், இந்த அண்ட சராசரம் முழுவதும் ஆள்பவர் அல்லது அதற்கு நிறுவனர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. சரி முதலில் பழைய ஏற்பாடு குறித்துப் பார்க்கலாம்.

From Old testament – Bible (before Jesus Christ) : பழைய ஏற்பாடு – இயேசு கிறிஸ்து பூமியில் மனுஷனாக வருவதற்கு முன் உள்ள காலம்.
FORMATION OF AN INSTITUTION: ஒரு நிறுவனத்தின் உருவாக்கம்: UNIVERSE-பிரபஞ்சம்

 

வேதத்தின் முதல் வசனத்தில் கூறுவது என்னவென்றால், ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். பின்னர் (ஆதியாகமம் 1: 2) பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; And the earth was without form, and void; and darkness was upon the face of the deep.

ஆக இப்படியாக முதல் ஐந்து நாட்களில் ஆண்டாராகிய நமது முதலாளி உலகின் எல்லா அசையும் மற்றும் அசையா சொத்துக்களையும் உண்டாக்கினார். உற்பத்திக்கு தேவையான எல்லா மூலப் பொருள்களையும், உப பொருள்களையும் உண்டாக்கினார் அல்லது உருவாக்கினார்.

ஆறாவது நாளில் ஆதி 1: 26. பின்பு தேவன்: தமது சாயலாகவும் தமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.  27. தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். So God created man in his own image, in the image of God created he him; male and female created he them.   28. பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.   29. பின்னும் தேவன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது; 30. பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார்; அது அப்படியே ஆயிற்று.  31. அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று.

 

ஆதி 2 : 1. இவ்விதமாக வானமும் பூமியும், அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டுத் தீர்ந்தன. Thus the heavens and the earth were finished, and all the host of them.  2. தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார்.  And on the seventh day God ended his work which he had made; and he rested on the seventh day from all his work which he had made.

தமது ஆதீனத்தை / நிறுவனத்தை உண்டாக்கிய ஆண்டவராகிய இயேசு பிற்பாடு ஆறு நாள் வேலை, ஏழாம் நாள் ஒய்வு / விடுமுறை என்று பிரகடனப் படுத்தினார்.  ஒரு மனிதனுக்கு ஓய்வு முக்கியம் என்பதை ஆரம்பம் முதலே தெளிவுபடுத்தியவர் ஆண்டவர் அல்லது சிருஷ்டி கர்த்தா.

FIRST EMPLOYEE – முதல் தொழிலாளி : ஆதாம் 

 

வேதம் சொல்லுகிறது ஆண்டவர் தமது சாயலாக சிருஷ்டித்த மனிதனுக்கு அவரே ஆதியிலே மனிதவள (HUMAN RESOURCE) குறியீடுகளைக் கொடுத்து சில நிபந்தனைகளாக நியாயப்பிரமாணங்களை, கட்டளைகளை, விதிகளை அல்லது ஒழுங்குமுறைகளைக் (conditions, rules and regulations) கடைப்பிடிக்கவேண்டும் என்று ஆணையிட்டார்(commanded).  இதை நாம் ஒரு நிறுவனத்தின் “Standing order” நிலை ஆணை என்று தீர்மானிக்கலாம்.  ஒரு நிறுவனத்தின் தலைவராக (EMPLOYER-Proprietor) அதை உருவாக்கி அதில் மனிதனை ஆணும் பெண்ணுமாக(EMPLOYEES) பிற்பாடு திருநம்பி/திருநங்கைகளையும்(வேதம் அவர்களை அன்னகர்கள் என்று கூறுகிறது-இவர்கள் மூலம் சந்ததி விருத்தி நடைபெறாது) படைத்து அதை ஆளுகை செய்யுமாறு பணிக்கிறார்.  இந்த உலகை உருவாக்கிய ஆண்டவர் முதல் ஆறு நாளும் அந்த நிறுவனத்தின் தேவைக்கான முதலீடுகளையும், செலவீனங்களையும் (ASSETS & LIABILITIES)) அதற்கு வேண்டிய மூலப்பொருள்களையும் உருவாக்கி மனிதனிடம் ஒப்படைக்கிறார்.  அவர் ஒருவேளை ஏழாவது நாளில் ஓய்வு எடுத்தார் என்றாலும் அதன் பிற்பாடு தொளிலாளிகளாகிய மனிதர்கள் அதன் முழுப் பொறுப்பையும் எடுத்து தனது ஆதீனத்திற்கு(நிறுவனத்திற்கு) நல்ல வருமானம் அதாவது “தேவன் விரும்பும் காரியங்களை செய்வதே” மனிதனின் வேலை என்ற கோட்பாட்டில்(Production) இணைந்து செயல்படும் கோட்பாடுகளை விதித்தார். ஆதியாகமத்தில் முதலாவதாக ஆறு நாட்கள் ஒவ்வொன்றாக உண்டாக்கினார் அல்லது சிருஷ்டித்தார் பின்னர் ஏழாம் நாளில் அவர் ஓய்ந்திருந்தார் என்கிறது (ஆதி 2:2) மேலும் அந்த நாளை பரிசுத்த நாளாக ஆசிர்வதித்தார் என்கிறது வேதம். ஒரு தொழிலாளிக்கு வாரம் ஆறு நாட்கள் வேலை ஏழாம் நாள் விடுமுறை என்பதிலும் தன்னைப் படைத்த ஆண்டவரை கூட்டுப் பிராத்தனை/தொழுகை மூலம் அவரை மறவாமல் இருந்து அவரைத் துதிக்க/தொழுதுகொள்ள அந்த நாளைப் பயன்படுத்த ஆரம்பத்தில் இருந்தே முறைப்படுத்தினார்.

 

ஆனால் அதன் எதிராளியான அல்லது போட்டி நிறுவன முதலாளியாகிய சாத்தான்(fallen angel) இந்த கோட்பாடுகளைக் கெடுக்கும் நோக்கில் ஆண்டவரின் தொழிலாளியாகிய மனிதனையும், மனுஷியையும்(ஆதாம் & ஏவாள்) ஆண்டவரின் கோட்பாட்டில் இருந்து வழிவிலகச் செய்கிறான்.

ஆதி 2: 8,9 – தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உருவாக்கி, மனுஷனை அதிலே வைத்தார்.  தேவனாகிய கர்த்தர் பார்வைக்கு அழுகும் புசிப்புக்கு நலமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருச்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார்.

 

மேலே கண்ட வசனத்தில் ஆண்டவர் ஒரு தொழிலாளிக்கு வேண்டிய சகலத்தையும் முக்கியமாக “employees welfare-தொழிலாளர் நலன்” சம்பந்தமாக அவருக்கு இருக்க வீடும், அவனது வாழ்விற்கு ஆகாரம் மற்றும் மனஅழுத்தம் போக்க அனேக காரியங்களை ஏற்படுத்துகின்றார்.  எல்லாவற்றையும் ஆளும் பொறுப்பு மனிதனுக்கு வழங்கப்பட்டது. அதாவது தொழிலாளர் நலனில் முழு கவனம் செலுத்துகின்றார்.  தன்னிடம் இருக்கும், தன்னைப்போல படைக்கப்பட்ட மனிதன்(தொழிலாளி) திருமணம் மற்றும் குழந்தைகள் பெற்று அவர்களின் சந்ததி வரவேண்டும் என்று ஆண்டவர் விரும்பி ஆதி 2: 18 ஏற்ற துணையை கொடுக்கின்றார். 19ம் வசனத்தில் அவனுக்கு அந்த இடத்தில் முழு சுதந்திரமும் கொடுகின்றார்.

 

ஒரு நிறுவனத்தின் முதலாளி, அவரது தொழிலாளிக்கு வேண்டிய எல்லா நிலைகளிலும் அவர்களின் குடும்பத்தினருக்கு செய்தாலும், தொழிலாளியின் மனைவி அல்லது பெண்ணின் ஆசையினால் முதலாளி விதித்த கட்டளைகளை மதிக்காமல்(கீழ்படியாமல்) அவரது கணவனை / ஆண் தொழிலாளியை அதை மீறும்படி செய்து அதனால் மதிப்புமிக்க அவனது அனைத்து சலுகைகளையும் (benefits) இழந்தவனாக பூமியின் பரலோகம் போன்று நிறுவனத்திலிருந்து வெளியே அனுப்பப்பட்டு அவனது நெற்றி வேர்வை நிலத்தில் சிந்தி பாடுபடும்படி மாற்றப்படுகிறான்.  ஆதி 3 : 17 நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்ததோடே அதின் பலனை புசிப்பாய்..  தோட்டத்தின் நடுவே இருக்கும் ஜீவவிருச்சமாகிய அந்த ஒரு மரத்தின் கனியை மட்டும் புசிக்கவேண்டாம் என்று ஆண்டவர் சொல்லியபின்னரும் இருவரும் அதனைப் புசித்து ஆண்டவரின் கட்டளையை மீறினர்.

மேற்கூறிய அனைத்தும் ஆதியாகமம் அதிகாரத்தில் இருக்கும் நிகழ்வுகள்.  தேவன் கொடுத்த ஏதேன் தோட்டத்தின்(பூமியின் பரலோகம்) மகிமை தெரியாமல் பாவம் (தவறு) செய்து அங்கிருந்து அவனது குடும்பம் (கணவன் & மனைவி)  வெளியே அனுப்பபடுகிறார்கள்.

சரி அவர்களுக்கு முதலில் இரண்டு மகன்கள் பிறக்கிறார்கள். அதன்பின்னர் அனேக மகள்களும்/மகன்களும் பிறக்கின்றனர். முதல் இரண்டு மகன்களில் ஒருவன் –“ஆபேல்” – ஆடுகளை மேய்க்கிறவனாகவும், இரண்டாவது மகன் “காயின்” – நிலத்தைப் பயிரிடுகிறவனாகவும் இருக்கிறார்கள். இரண்டு வேலைகளை அவனது முதலாளியாகிய ஆண்டவர் கொடுக்கிறார்.  அதில் இருவரும் தனது முதல் வருமானத்தில் ஒரு பகுதியை (காணிக்கை) ஆண்டவரிடம் (முதலாளியிடம்) கொடுக்க வருகிறார்கள்.  ஆபேல் அவனது மந்தையில் இருக்கும் தரமான கொளுத்த ஆடுகளைக் காணிக்கையாக கொடுத்தான், அதை ஆண்டவர் ஏற்றுக் கொண்டார். ஆனால் காயீன் “ஏனோ தானோ” என்று கொடுத்த காய் கறிகளாகிய காணிக்கையை ஆண்டவர் நிராகரித்தார்.  முதலாளியின் திட்டப்படி/எண்ணப்படி நடக்கும் சிலருக்கு நல்ல சம்பளம்(salary) அல்லது ஊக்கத்தொகை(incentive) கொடுப்பதால் பலர் எரிச்சல் அடைவது போல இங்கே காயீனும் எரிச்சல் அடைகிறான். அதனால் ஆபேலைக் கொலைசெய்கிறான்.  அவனது முதல் தொழிலாளியான ஆதாம் மற்றும் அவனது மனைவி ஏவாள், இவர்களுக்கு பிறந்தவர்கள்தான் இந்த காயீன் & ஆபேல்(இரண்டாம் நிலை தொழிலாளிகள்). சரி இவர்கள் அனைவரும் சேர்ந்து செய்த குற்றம்/ பாவம்/ தவறு என்ன வென்று பார்க்கலாம்: -

முதலாம் பாவம்-தவறு   : கீழ்ப்படியாமை-disobedience  - ஆதாமும் ஏவாளும் செய்தது.

இரண்டாம் பாவம்-தவறு : போட்டி(சாத்தான்) நிர்வாகம் ஆசைகாட்டியபடி BREACH AN AGREEMENT – தேவனுக்கும்(Employer-நிறுவனர்/முதலாளி),  மனிதனுக்கும்(-Employee-தொழிலாளி) ஏற்பட்ட உடன்படிகையை மீறுகின்றனர். ஆதாம்-ஏவாள் செய்தது.

 

இவை இரண்டு பாவமும் ஏதேன் தோட்டமாகிய முதலாம் நிறுவனத்தில் வைத்து நடந்தது.

மூன்றாம் பாவம்-தவறு : காயீனின் எரிச்சல் – irritation – காயீன் ஆபேலின் மேல் எரிச்சல். 

 

நான்காவது பாவம் -தவறு  : ஆபேலைக் கொலை செய்தது – murder – காயீன் செய்தது.

இது அங்கிருந்து வெளியே வந்தபிறகு இரண்டாம் நிறுவனத்தில் நடந்தது.

காயீன் ஏதேன் தோட்டத்திலிருந்து (முதல் தொழிற்சாலையாகிய சொர்க்கம்) துரத்தப்பட்டு வெகு தொலைவில் தனது குடும்பத்தை விட்டு போகவேண்டிய சூழல் ஏற்பட்டது. 

அவனது வம்சத்தில் ஏனோக்கு என்பவன் தேவன் விரும்பியபடி நிறுவனத்தை நடத்தினான் அதாவது நடந்தான்.  அதன்பின் நோவா என்பவர் பிறந்து அவருக்கு முதலாளி(ஆண்டவரின்) கண்களில் கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது(ஆதி 5: 8).  அந்தக் காலத்தில் நோவா நீதிமானும், உத்தமனாக இருந்தான். அவன் தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருந்தான், என்கிறது வேதம்.

FIRST CEO/GENERAL MANAGER :  முதல் பொது மேலாளர் :   நோவா

நோவாவின் குடும்ப உறுப்பினர்கள் (ஆண் / பெண்) அனைவரும் அதன் தொழிலாளிகள்

 

ஆதியாகமம் 6:8 நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது. ஆதியாகமம் 6:13 அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி: மாம்சமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது; அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது; நான் அவர்களைப் பூமியோடுங்கூட அழித்துப்போடுவேன். 22-நோவா அப்படியே செய்தான்; தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான்.
 

இப்பொழுது நோவாவுக்கு ஒரு கட்டளையை ஆண்டவர் பிறப்பிக்கிறார். பேழையை (ஒரு கப்பல்) செய்து அதில் அனைத்து ஜோடி ஜோடியாக ஜீவராசிகள், பறவைகள், விலங்குகள், மேலும் அவனது குடும்பம் மட்டும் அதில் ஏறி தண்ணீரின் அழிவிலிருந்து மீட்கப்பட்டனர்.  


ஆதியாகமம் 7:1 கர்த்தர் நோவாவை நோக்கி: நீயும் உன் வீட்டார் அனைவரும் பேழைக்குள் பிரவேசியுங்கள்; இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன்.
ஆதியாகமம் 7:5 நோவா தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியெல்லாம் செய்தான்.

 

நோவாவின் குடும்பம் ஆண்டவர் சொன்ன வாக்கை 1௦௦% கடைப்பிடித்து நிறுவனத்தின் முழு வெற்றியையும் பெற்றார்கள்.

 

ஆதி 9 : 18 & 19 : நோவாவின் மூன்று குமாரரின் குடும்பங்கள்தான் – இவர்களாலே பூமியெங்கும் ஜனங்கள் பரம்பினார்கள்.   ஆதாம் குடும்பத்தில் ஆரம்பித்த இந் பூமியாகிய நிறுவனம் மூடப்பட்டு, தற்பொழுது நோவாவின் குடும்பத்தின் மூலம் புதிய நிறுவனம் பூமியில் ஆண்டவரால் ஏற்படுத்தப்படுகிறது.  நாம் இருக்கும் இந்த பூமி இவர்களின் வாரிசு என்பது கிருஸ்தவ நம்பிக்கை.   

 

இன்னும் அநேக காரியங்களை நாம் பழைய ஏற்பாட்டில் மனித வள மேம்பாட்டுக் கோட்பாட்டில் காணலாம். இனி புதிய ஏற்பாட்டில் (ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மனிதனாக பிறந்த பிறகு ஏற்பட்ட நிகழ்வுகளை நாம் காணலாம்.

 

From New testament – Bible ( during & after Jesus Christ) இயேசு பிறந்து, வாழ்த்த காலம் & அவர் பரமேறின பிறகு நடந்தவை :

 

 

இயேசு கிறிஸ்து தனது நித்திய ஆதீனமான பரலோக ராஜ்யத்திற்கு அவரால் படைக்கபட்ட மனுக்குலத்தின் பரிசுத்தமான ஆத்துமாக்களை தெரிவுசெய்யும் ஸ்தலமாக இந்த பூமியை ஒரு தற்காலிகமான(temporary) செயல்வடிவு பயிற்சி அமர்வு இடமாக தெரிந்து கொண்டார். அவரே அதற்கு முன் உதாரணமாக வாழ்ந்தும் காண்பித்தார்.

 

சரி, மனித வளம் (Human Rrsource-HR) என்பது ஒரு நிறுவனத்தில் பணியாளர்களை உருவாக்கி மக்கள் செயல்பாடுகளை கவனித்துக் கொள்ளும் நபர்களின் அல்லது துறை. ஆட்சேர்ப்பு, பயிற்சி, உள்வாங்குதல், வளங்களை மாற்றுதல், நிறுவனத்திற்கான சிறந்த ஆதாரங்களைக் கண்டறிதல் போன்ற ஒவ்வொரு பணியாளரின் முழு வாழ்க்கைச் சுழற்சியையும் நிர்வகிப்பதற்கு HR பொறுப்பு.

 

மனித வள மேம்பாடு (HRD) என்பது ஊழியர்களின் திறன்களை மேம்படுத்த உதவும் ஒரு நிறுவனத்தின் திட்டமாகும்.
 

மனிதவள மேலாண்மை (HRM) என்பது நிறுவன கட்டமைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க உத்தி ஆகும், இது பணியாளர்களை நிர்வகிப்பதிலும், ஊழியர்களில் நிறுவனத்தின் மதிப்புகளை உள்வாங்குவதிலும் அதிக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது, இது ஒரு நிறுவனத்தின் ஒட்டுமொத்த நேர்மறை, உற்பத்தித்திறன் மற்றும் லாபத்தை மேலும் மேம்படுத்தும்.

மனித வளங்கள் ஒரு நிறுவனத்திற்கு முக்கியமான சொத்துக்கள், ஏனெனில் ஒரு நிறுவனத்தில் முக்கிய பணிப்பாய்வு அதன் தொழிலாளர் செயல்திறன் மற்றும் செயல்திறனைப் பொறுத்தது.  எனவே, எந்தவொரு நிறுவனமும் நிறுவனத்தின் நெறிமுறைகளைத் தக்க வைத்துக் கொள்ளவும், சங்கடங்கள், சர்ச்சைகள் மற்றும் மோதல்கள் இல்லாமல் வளர்ச்சியின் விரும்பிய நோக்கத்தை நிறைவேற்றவும் மனித வள மேலாண்மை இன்றியமையாதது.  


ஒரு நிறுவனத்தின் “மனிதவள மேலாண்மை” பணிச் சூழலில் நேர்மறையை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது, ஏனெனில் ஒரு நிறுவனத்தின் பணியாளர்கள் பன்முகப்படுத்தப்பட்ட உள் மற்றும் வெளிப்புற பொதுமக்களைக் கொண்டுள்ளனர்.  நிறுவனம் என்பது சாதி, மத, இன, மொழி, ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், படித்தவன், படிக்காதவன் என்ற வேறுபாடு இன்றி செயல்படும் ஒரு கூட்டு மேலாண்மை ஆகும்.

 

 

இயேசுவின் ஆன்மீகப் பார்வையில் மனிதவள மேலாண்மை:

 

மக்களை கண்ணியத்துடன் நடத்தும் மனிதவள நடைமுறைகளை நிறுவுவது, அவர்களின் அறிவு, திறன்கள் மற்றும் திறன்களில் (KSAs- knowledge, skills and abilities) வளர உதவுவது மற்றும் பாதுகாப்பை வழங்கும் வகையில் அவர்களுக்கு ஈடுசெய்வது கடவுளின் கருணை, கிருபை மற்றும் அன்பின் ஆன்மீக வெளிப்பாடு என்று ஒருவர் எளிதாக வாதிடலாம்.

 

ஒரு நிறுவன மேலாளர், இயேசுவைப் பின்பற்றுபவராக இல்லாவிட்டாலும், இந்த ஆன்மீகப் புரிதல் இல்லாவிட்டாலும், இது உயர்ந்த மற்றும் புனிதமான வேலை ஆனபடியால், இதில்  சம்பந்தப்பட்டவர்கள் அவரை அறியாதபோதும் பொதுவான கிருபையின்(தகுதி இல்லாதவர்க்கு அளிக்கும் இரக்கம்) மூலம் கடவுளின் கொள்கைகள் செயல்படுகின்றன.

 

இருப்பினும், இயேசுவைப் பின்பற்றுபவர் ஒருவர் மனிதவள நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்த ஒரு தனித்துவமான கண்ணோட்டத்தை இந்த தளத்திற்குக் கொண்டுவருகிறார்:

 

1. ஒவ்வொரு மனிதனும் அவனது சாயலில் கடவுளால் படைக்கப்பட்டான்.

2. ஒவ்வொரு நபரும் ஒரு தனித்துவமான ஆளுமை, பலம் மற்றும் ஆர்வங்களுடன் கடவுளால் பரிசளிக்கப்பட்டவர்கள்.

3. ஒவ்வொரு நபரும் கடவுளால் நேசிக்கப்படுகிறார் மற்றும் மதிக்கப்படுகிறார், அவருடைய மகனின் விலையில் வாங்கப்படுகிறார்

4.ஒவ்வொரு நபரும் எந்த வித்தியாசமும் இல்லாமல் கடவுளால் அங்கீகரிக்கப்படுவார்.

5.ஒவ்வொரு குறைவுள்ளவரையும், குறையில்லாதவறையும் சமமாக கடவுளால் அன்பு செலுத்தப்படுவார்.

 

இந்த காரணங்களுக்காக, நம் பாதையில் வரும் ஒவ்வொரு நபரிடமும் நமது அணுகுமுறை மற்றும் நாம் அவர்களை நடத்தும் விதம் மிகவும் முக்கியமானது. மனிதவள நிர்வாகத்தின் பணியின் மூலம், நம்பிக்கை சார்ந்த வணிகங்கள் கடவுளின் அருளையும் அன்பையும் வெளிப்படுத்தும் வாய்ப்பைப் பெற்றுள்ளன. மனிதவள நிர்வாகத்தின் பணியின் மூலம், நம்பிக்கை சார்ந்த வணிகங்கள் கடவுளின் அருளையும் அன்பையும் நிரூபிக்க முடியும்.

 

பணியமர்த்துவதில், "நபர்-வேலை பொருத்தம்" மற்றும் "நபர்-அமைப்பு பொருத்தம்" ஆகியவை முக்கியமானவை.  நிறுவனத்தின் நலனை மட்டுமல்ல, வேட்பாளரின் நல்வாழ்வையும் நாட வேண்டும். தவறான இரக்க உணர்வுடன், தவறான நபரை அவரது தோல்விக்கு வழிவகுக்கும் வேலையில் அமர்த்தாதீர்கள் என்பதும் மனித வள மேலாண்மை.

மேலும், நிறுவனம் கடவுளுக்கு சொந்தமானது என்பதை மறந்துவிடாதீர்கள். அவரது பணியாளராக, அவரது நிறுவனம் வெற்றிபெற உதவுவதற்கு சரியான நபரை பணியமர்த்த நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில், கடவுள் சில சமயங்களில் உலகின் பார்வையில் பலவீனமான மற்றும் முக்கியமற்ற விஷயங்களைப் பயன்படுத்துகிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்

தாவீது ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார்.  கிதியோன் ஒரு குழியில் மறைந்திருந்தபோது, ​​தேவதூதன் அவனை அணுகினான். பேதுரு ஒரு வேகமான மீனவர், ஆயினும் கடவுள் தம் நோக்கங்களை நிறைவேற்ற இவை ஒவ்வொன்றையும் இன்னும் பலவற்றையும் பயன்படுத்தினார்.  உங்கள் பணியமர்த்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது ஞானத்திற்காக விடாமுயற்சியுடன் இறை வேண்டல் செய்யுங்கள்.

 

பணியமர்த்தப்பட்டதும், நிறுவனத்திலும் வாழ்க்கையிலும் உங்கள் ஊழியர்களின் பங்கிற்கு அவர்களைச் பக்குவப்படுத்துங்கள்.  நம்பிக்கை சார்ந்த நிறுவனத்திற்கு, பயிற்சியும் மேம்பாடும் ஆன்மீகக் கூறுகளை எடுத்துக் கொள்கிறது.

கடவுள் வடிவமைத்த ஆணாகவோ, பெண்ணாகவோ ஒரு நபர் வளர உதவுவது ஒரு கிருபை மற்றும் பொறுப்பு. பணிக்குத் தேவையான KSA (அறிவு, திறன்கள் மற்றும் திறன்கள்) உடன் பணியாளரை பக்குவப்படுத்துவதற்கான பயிற்சியை இது உள்ளடக்கியிருந்தாலும், இதைத் தாண்டி நிறுவனத்தின் மதிப்புகளில் சமூகமயமாக்கலைச் சேர்ப்பது, பணியிடத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பணியாளர்களுக்கு உதவும் மென்மையான திறன்களை வளர்ப்பது, இன்னமும் அதிகமாக.

 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த பூமியில் மனிதனாக வாழ்ந்த போது பிதாவின் சித்தப்படி வாழ்வது ஓன்று தான் அவரின் ஒரே குறிக்கோள்.

மத்தேயு 6:10 உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.  எபேசியர் 5:17 ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்.

லூக்கா 22 : 29,  ஆகையால் என் பிதா எனக்கு ஒரு ராஜ்ஜியத்தை ஏற்படுத்தினது போல, நானும் உங்களுக்கு ஏற்படுத்துகிறேன்.  3௦.என் ராஜ்ஜியத்திலே என் பந்தியில் போஜனபானம்பண்ணி இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாய்ச் சின்காசனங்களின் மேல் உட்காருவீர்கள் என்றார்.  

 

Jesus as a Human Resources Management Professional- மனித வள மேலாண்மை நிபுணராக இயேசு:-

மனித வள மேலாண்மை (HRM-Human Resource Management) என்பது ஒரு நிறுவனத்தின் பணியாளர்களை ஆட்சேர்ப்பு, பணியமர்த்தல், வரிசைப்படுத்துதல் மற்றும் நிர்வகித்தல் போன்ற நடைமுறையாகும். HRM பெரும்பாலும் மனித வளங்கள் (HR-Human Resource) என்று குறிப்பிடப்படுகிறது.

மனித வள மேம்பாடு-Human resource development-HRD)

  • மனிதவள மேம்பாடு என்பது ஒரு மனிதனின் கல்வி, உடல்நலம், அதிகாரம், வருமானம் போன்றவைகளில் மக்களுக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தும் ஒருவித செயல்முறையாகும்  .
  • எந்த ஒரு மனிதனும் நான் அடிமை படுத்தாமல் அவர்களது சுதந்திரம், சமூகம், அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றில் விருப்பு வெறுப்புகளை வரம்புகள் மூலமாக அதிகரிப்பது  .
  • போன்றவற்றில் உள்ளடக்கியதாகும் மனித வளர்ச்சியை மனித வளர்ச்சிக் குறியீடுகள் & மனித வளர்ச்சி துணை குறியீடுகள் என இரண்டு வகை மூலம் அழைக்கலாம்  .
  • மக்கள் தொகை போக்குகள் கல்வி சாதனைகள் ஆரோக்கிய வழிபாடு கூட்டமைப்பு, தேசிய வருமானம், தொழில் வேலைவாய்ப்பு, மனித பாதுகாப்பு, மற்றும் முதலீடு போன்றவை மனித வளர்ச்சியின் குறியீடுகள் எனப்படுகிறது  .
  • மனித உணர்வு மனித அடிப்படை உரிமை ஒப்பந்தங்கள், நல் வாழ்வியல் ஆகியவை மனித வள மேம்பாட்டின் குறியீடுகளாக கருதப்படுகிறது.  
  • மனித வளத்தினை மனிதனின் ஆரோக்கியம், கல்வி, வருமானம் ஆகிய மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு அளவிடப்படுகிறது 

 

மேற்கண்ட மூன்று நிலைகளில்(HR, MRM, HRD) மனித மேம்பாட்டை விவரிக்கும் வண்ணம் வேதாகமம் நமக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மூலம் கற்பிக்கப்படுகிறது.

இதைக்குறித்து கனடா நாட்டைச் சேர்ந்த Dr. Lana Adeleye-Olusae, FCPHR, CMC, MBA என்பவர் 2021ம் வருடம் தனது பார்வையில் இயேசுவானவர்  மனித வள மேலாண்மை குறித்ததான சில நடைமுறை நகர்வுகளை செய்தார் என்றும் கனடா நாட்டின் அளவுகோல்படி அவர் அதனை கூறினார்.  நாம் தற்பொழுது நமது இந்திய நாட்டின் அளவுகோல்படி அவற்றைக் குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்:-

இயேசு ஒரு மனித வள மேலாண்மை நிபுணராக செய்தநிகழ்வுகளைக் காணலாம்:-

1.  Recruitment and Selection: ஆட்சேர்ப்பு மற்றும் தேர்வுஃ

இயேசு ஒரு நிறுவனத்தை தோற்றுவித்தவர் என்ற அடையாளத்தை உருவாக்கினார், அது அவரின் சீடர்களை ஈர்த்தது மட்டுமல்ல அவர்களில் 12 அப்போஸ்தலர்களைத் தன்னுடன் (மூன்றரை ஆண்டுகள்) 24/7 பணிபுரிய தேர்ந்தெடுத்தார் என்று பின்வரும் பைபிள் பத்திகளில் கூறப்பட்டுள்ளது:

a.  லூக்கா புத்தகத்தில், இயேசு பேதுரு, அந்திரேயா, யாக்கோபு மற்றும் யோவான் ஆகியோரை அழைத்தார்(லூக்கா 5:8-11)

b.  மத்தேயுவின் அழைப்பு  (லூக்கா 5:27-28)

c.  சீடர்கள் பன்னிருவரின் திருநிலைப்படுத்தப்படுத்தல் (லூக்கா 6:12-16)

ஊழியப் பணியை நடைமுறைப்படுத்த அனுப்ப வேண்டிய சீடர்களின் எண்ணிக்கையையும் சீடர்களில் இருந்து தேர்ந்தெடுக்கும் அப்போஸ்தலர்களின் எண்ணிக்கையையும் நிர்ணயம் செய்வதற்கான பணியாளர் நியமன திட்டமிடலில் இயேசு ஈடுபட்டார்.( இயேசு 12 அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுத்தார்).  முக்கியமாக அவர்களில் பெரும்பாலும் மீன் பிடிக்கும் தொழிலில் இருந்தவர்கள்.  இயேசுவின் தேடல் அவர்கள் படித்தவர், பண்பாளர், பணக்காரன் என்றெல்லாம் இருக்கவில்லை, ஆனால் மனிதர்களை பிடிக்கும் பணி செய்ய மீனவர்களைப் பயன்படுத்தினார். மத்தேயு வரிவசூல் செய்தவர். இப்படி பல தொழில் செய்தவர்களை தன்னிடம் சீடர்களாக சேர்த்துக் கொண்டார்.  அவர்கள் அவரின் சொல்படி நடந்தால் மட்டும் போதும்.

2.  Onboarding- புதிதாக பணியமர்த்தப்பட்ட பணியாளரை ஒரு நிறுவனத்தில் அறிமுகப்படுத்துவதற்கான செயல்முறை:  ஆன்போர்டிங் (Onboarding) என்பது ஒரு மனித வளத் துறைச் சொல்லாகும், இது ஒரு நிறுவனத்தில் புதிதாக பணியமர்த்தப்பட்ட பணியாளரை அறிமுகப்படுத்தும் செயல்முறையைக் குறிக்கிறது. நிறுவன சமூகமயமாக்கல் என்றும் அறியப்படுகிறது, பணியாளர்கள் அவர்களின் புதிய நிலை மற்றும் வேலைத் தேவைகளைப் புரிந்து கொள்ள உதவுவதில் ஆன்போர்டிங் ஒரு முக்கிய பகுதியாகும்இயேசு அவர்களை மக்களிடம் சென்று இயேசு சொன்னபடி செய்ய பழக்கினார்.  உதாரணமாக பேதுருவை தலைமை சீடனாகவும், யோவானை இயேசுவுக்கு நெருக்கமான சீடனாகவும், யூதாசை பணம் கையாளும் காசாளராகவும், அமர்த்தினார்.

இயேசு தாம் ஸ்தாபிக்க வந்த ராஜ்யத்தைப் பற்றியும், என்ன எதிர்பார்க்க வேண்டும், அவர்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கப் போகிறார் என்பதைப் பற்றியும் லூக்கா 6ல் பின்வருவனவற்றைப் பற்றி சீடர்களுடன் பகிர்ந்து கொண்டார்:

a.  Four Beatitudes- நான்கு பேரின்பங்கள்,

b.  Four Woes- நான்கு துயரங்கள்

c.  Four Laws of Love- அன்பின் நான்கு சட்டங்கள்
d.  Four Laws of Retaliation- பழிவாங்கும் நான்கு சட்டங்கள்

 

e.  The Golden Rule: பொற்கால ஆட்சி பின்பற்றத்தக்க மிக சிறந்த நன்னெறி வழி பொதுவாக அல்லது ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டில் வெற்றியை உறுதிப்படுத்த எப்போதும் பின்பற்ற வேண்டிய அடிப்படைக் கொள்கை.  "இந்த வகையில் உள்ள பொன்னான விதிகளில் ஒன்று, நேரம் தவறாமை-Punctuality" (மத். 7:12) என்ற விவிலிய விதி.

f.   Four Laws of Mercy-இரக்கத்தின் நான்கு விதிகள்,

g.  Four Laws of Justice- நான்கு நீதிச் சட்டங்கள்

h.  Warning against following Blind Leaders, Goal of Every Believer- பார்வையற்ற தலைவர்களைப் பின்பற்றுவதற்கு எதிராக எச்சரிக்கை, ஒவ்வொரு விசுவாசியின் குறிக்கோள் - "குருடரை வழிநடத்தும் குருடர்”(The “Blind leading the blind) என்பது, கிறிஸ்தவர்கள் விசுவாசிகளல்லாதவர்களை வழிதவறச் செய்யும் (பாசாங்குத்தனமான வழியில் செயல்படும்) வழியில் செயல்படக் கூடாது என்பதைக் குறிக்கும் ஒரு வேதக் குறிப்பு. ஆன்மீக ரீதியில் இழக்கப்படுவதற்கு குருடனாக இருப்பதை பைபிள் அடிக்கடி பயன்படுத்துகிறது.

i.   Parable of Two Foundations- இரண்டு அடித்தளங்களின் உவமை

இயேசு கிறிஸ்து 38 உவமைகள் மூலம் படிக்காத மீனவர்களாகிய அவரின் சீடர்கள் மற்றும் அடித்தட்டு மக்களும் புரியும் வகையில் அவருடைய கருத்துக்களை எடுத்துரைத்தார். இந்த வகையான உவமைகள் மக்களின் மனதில் ஆழப்பதிந்துள்ளது என்றால் அது மிகையாகாது.

3.  Learning and Development- கற்றல் மற்றும் வளர்ச்சி:  தேர்ந்தெடுக்கப்பட்ட சீடர்களும் அப்போஸ்தலர்களும் தம்முடன் இருந்தபோது கற்றல் மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதை இயேசு உறுதிப்படுத்தினார். எடுத்துக்காட்டுகள் கீழே கூறப்பட்டுள்ளன:

a.  விதைப்பவரின் உவமை மற்றும் அவர் ஏன் அந்த உவமைகளில் பேசினார்(லூக்கா 8:4-15).

b.  ஒரு புதிய குடும்பத்திற்கு விசுவாசத்தை உருவாக்கியது(லூக்கா 8:19-21)

c.  அவர்கள் உதவியைக் கோராதபோதும் கையை நீட்டினார் - இயேசு புயலை அசைக்கிறார்(லூக்கா 8:22-25). பிரதிபலன் எதிர்பாராமல் உதவிக்கரம் நீட்டினார்.

d.  வேலையில் பயிற்சி நடத்தப்பட்டது(லூக்கா 9:10; 10:1-4).

e.  எப்படி ஜெபிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார்(லூக்கா 11:1-4).

f.   வரவிருக்கும் தேவ ராஜ்யத்தைக் குறித்த ஒரு பார்வையை வழங்கியது(லூக்கா 9:27-36).

g.  சீடர்களுக்குத் தாழ்மையைக் கற்பித்தார்(லூக்கா 9:46-48).

h.  ஜாதி/மத/இன வெறியைக் கண்டித்தார்(லூக்கா 9:49-50).

4.  Performance Management- செயல்திறன் மேலாண்மை:

சீடர்களாகிய அப்போஸ்தலர்களின் கற்றலையும் செயல்திறனையும் இயேசு பின்வருமாறு நிர்வகித்தார்:

a.  தன்னைக் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று வினாவுகிறார் (லூக்கா 9:18-20).

b.  சீடர்களைக் சோதிக்கிறார்-கிறிஸ்துவைப் பின்பற்றுவது பல பாடுகளை அனுபவிக்க வேண்டி வரும் என்பதை கூறுகிறார்  (லூக்கா  9:23-26).

c.  சக்தியற்ற சீடர் பிரச்சினையை உரையாற்றினார்(விசுவாசமில்லாத மாறுபாடான சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடிருந்து, உங்களிடத்தில் பொறுமையாயிருப்பேன்?)(லூக்கா 9:37-41).

d.  மதிப்பிடப்பட்ட பீட்டர், இயேசுவை மருதலிதபிறகும் அவருக்கு தன்னுடைய ஆதரவைப் பற்றி பேசினார் மற்றும் மற்றவர்களுக்கு ஆதரவாக இருக்க அவரை ஊக்கப்படுத்தினார். (லூக்கா 22:31-34)

5.  Recognition and Retention- அங்கீகாரம் மற்றும் தக்கவைப்பு:

இயேசு சீடர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை அங்கீகரித்தார் மற்றும் அவர் தேர்ந்தெடுத்த 12 சீடர்களில் 11 உண்மையுள்ள சீடர்களைத் தக்கவைத்துக்கொள்ள முடிந்தது. இயேசு 92% நிச்சயதார்த்த மதிப்பெண்களைப் பெற்றார். இயேசுவைக் காட்டிக் கொடுத்த சீடன் யூதாஸ் கூட அவன் செய்த தவறை உணர்ந்தான். பேதுரு இயேசுவை கடவுளின் குமாரனாக அடையாளம் காட்டியபோது பாராட்டப்பட்டார். லூக்கா 10:17-20-ல் உள்ள முக்கியமானவற்றில் கவனம் செலுத்தும்படி சீடர்களுக்கு இயேசு உதவினார், அற்புதங்களைப் பற்றி உற்சாகமடைவதற்குப் பதிலாக பரலோகத்தில் அவர்களின் பெயர்கள் எழுதப்பட்டன. கடவுளுடைய ராஜ்யத்திற்கான அவர்களின் விசுவாசமும் அர்ப்பணிப்பும் நமக்குத் தெரிந்தபடி உலக வாழ்க்கையின் முடிவில் வெகுமதி அளிக்கப்படும் என்பதை சீடர்கள் அறிந்திருந்தனர்.

6.  Succession Planning- அடுத்தடுத்து திட்டமிடல்:  சீடர்கள் எங்களைப் போல பல சீடர்களை வளர்த்தனர் என்பதற்கு நாம் அனைவரும் சாட்சிகள். இந்த உலகில் சான்றுபடி  கிருஸ்தவ மக்கள் தொகை 2.4 பில்லியனுக்கும் அதிகமான வலிமையைக் கொண்டுள்ளது, இது உலக மக்கள்தொகையில் 33% ஐக் குறிக்கிறது.  மாற்கு 16:15 பின்பு, இயேசு  அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.

 

இவ்வாறாக இயேசுவானவர் மனிதவள கருத்துக்களை மனிதராகிய நமக்கு பல விதங்களில் உவமைகள் வாயிலாகவும், செயல் வடிவமாகவும், பயிற்சி வடிவிலும், தன்னையே முழுவதும் அர்ப்பணித்து வாழ்ந்து காட்டினார்.