75th BIRTH ANNIVERSARY OF CSI IN TAMIL

26/09/2021 14:22

CSI சபை உருவானது எப்படி?

ஆண்டவர் இந்த CSI (தென்னிந்திய திருச்சபை) 75வது ஆண்டு (DIOMOND JUBILEE) டைமோன்ட் ஜூபிலி ஆண்டுவிழாவை நம்மை கொண்டாட கிருபை செய்திருக்கிறார். ஆக நமது ஆண்டவருக்கு நாம் நமது துதி ஸ்தோத்திரங்களை செலுத்துவோமாக. சரி நாம் இந்த CSI சபை உருவானது எப்படி? தென்னிந்திய திருச்சபை அதாவது CSI என்றால் என்ன என்று இப்பொழுது பார்க்கலாம் 

இந்தியா மீதான ஆங்கிலேயர்களின் ஆட்சி தனது கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருந்தது. மிஷனரிகளால் தாங்கப்பட்டும், ஊக்குவிக்கப் பட்டும் வருகின்ற பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த சீர்திருத்த கிறிஸ்தவ (Protestant) சபைகளின் எதிர்காலமும் இச்சூழ்நிலையால் கேள்விக்குறியாக மாறிவிட்டிருந்தது.

சுதந்திரத்திற்காக போராடிக்கொண்டிருந்த இந்திய தேசிய காங்கிரசும், அதைத் தலைமையேற்று வழிநடத்திக்கொண்டிருந்த மகாத்மாகாந்தியும் ஆங்கிலேயர்களின் சர்வாதிகார ஆட்சி காரணமாக வெள்ளையர்களின் மதமாக கிறிஸ்தவத்தை கருதி அவர்கள் கிறிஸ்தவர்களையும்,கிறிஸ்தவத்தையும் வெறுத்துக்கொண்டிருந்தனர். இதனால் அச்சமுற்ற, லண்டன் மிஷனரி சங்கத்தார், சுதந்திரத்துக்குப்பின் இந்தியாவில் இச்சபைகளின் எதிர்காலம் என்னவாகும் என்று ஆய்ந்து அறிக்கை அளிப்பதற்காக லண்டன் மிஷன் சங்க நிர்வாகி திரு.லியோநார்டு அவர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தனர். நிலைமையை ஆய்ந்த அவர் அறிக்கை ஒன்றை தலைமைச் சங்கத்திற்கு அளித்தார்.

Mahatma and Christianity:

Mahatma Gandhi's great respect for Christ is revealed in his following statements:

"What does Jesus mean to me? To me, he was one of the greatest teachers humanity has ever had."

"Jesus was the most active resister known perhaps to history. His was non-violence par excellence"

"Jesus expressed as no other could, the sprit and will of God. It is in this sense that I see him and recognize as the Son of God. And because the life 

of Jesus has the significance and the transcendence to which I have alluded, I believe that He(Jesus) belongs not solely to Christianity but to the entire 

world, to all races and people. It matters little under what flag, name or doctrine they may work, profess a faith or worship a God inherited 

from their ancestors".

On seeing a painting of the crucified Christ in Rome, Gandhi remarked "What would not I have given to be able to bow my head before the living image of 

Christ crucified. I saw there at once that nations like individuals could only be made through the agony of the cross and in no other way. Joy comes 

not out of infliction of pain on others but out of pain voluntarily borne by oneself."

"The New Testament gave me comfort and boundless joy, as it came after the revulsion that parts of the Old Testament had given me. Today, supposing 

I was deprived of the Gita and forgot all its contents but had a copy of the Sermon on the Mount, I should derive the same joy from it as I do from the Gita" 

(Young India 22-12-27)

Thanks to Ambassador (Retd) Alan Nazareth from his book on “Gandhi and Christianity”.

“I like your Christ, I do not like your Christians. Your Christians are so unlike your Christ.”   ― Mahatma Gandhi

 

  கிறிஸ்தவ மிஷன்களுக்கும், திருச்சபைக்கும் நேராக சுதந்திர இந்திய அரசின் அணுகுமுறைகள் எதுவாக இருக்கும் என்பது

பற்றிய விவரம் தெளிவற்ற நிலையிலும், யூகங்கள் ஏற்படுத்துவதுமாகவே அமைந்துள்ளது. பொதுவாக கிறிஸ்தவ திருச்சபைகள் தடைகளையும், துன்புறுத்தல்களையும் எதிர்நோக்கியே உள்ளது”என்று விளக்கி லண்டனுக்கு அறிக்கை சமர்ப்பித்தார்.

  தென்னிந்தியாவில் சீர்திருத்த கிறிஸ்தவ சபைகள் பல பிரிவுகளாக பிரிந்து நின்று செயல்பட்டுக் கொண்டிருந்தன. இச்சபைகளில் ஒற்றுமையும், ஒருங்கிணைப்பும் இல்லையெனில் எதிர்காலத்தில் அவர்களது நிலை அழிவுக்கு வழிவகுத்துவிடும் என்று மிஷனரிகள் கண்டுக்கொண்டனர். எனவே அவைகளிடத்தில் ஒரு ஐக்கியத்தை உருவாக்கி, அதை 

ஒரு பலம் வாய்ந்த அமைப்பாக நிலைபெறச்செய்ய வேண்டியது அன்றைய சூழ்நிலையில் மிகவும் தேவையாயிற்று.

எனவே தென்னிந்தியாவில் அன்று சுதந்திரமாக தனித்து நின்று செயல்பட்டுக்கொண்டிருந்த SPG, LMS, CMS, மெதடிஸ்ட், லூத்தரன்

Seventh Day Adventist போன்ற சபைகளை ஒருங்கிணைத்துவிடவேண்டும் என்ற தீர்மானத்தை அன்றைய மிஷனரிகள் மேற்கொண்டனர். ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் இந்தியாவில் தளர்ந்துவருவதை முன்கூட்டியே உணர்ந்துக்கொண்ட மிஷனரிகளின் சபைகளின் ஐக்கியத்தைக்குறித்து முன்கூட்டியே முடிவெடுத்து அதற்கான முயற்சியிலும் இறங்கியிருந்தனர். இதன் முதல்நிலையாக1908ம்ஆண்டு தென்னிந்தியாவில் இயங்கிக்கொண்டிருந்த (LMS)லண்டன் மிஷன் சபைகள், மதுரை அமேரிக்கன் மிஷன் மற்றும் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணம் அமேரிக்கன் மிஷன் போன்றவைகள் ஒன்றுசேர்ந்து South India United Church – (S.I.U.C) என்று ஓர் அமைப்பை உருவாக்கினர்.

இந்த அமைப்பு மற்ற சபைகளுடன் தொடர்புக்கொண்டு அவைகளையும் S.I.U.C.யில் இணைவதற்கு அழைப்பு விடுத்தது. 

அதன் பயனாக 1920ல் Anglican சபைகள் இத்துடனே இணைவதற்கு தொடர்பை ஏற்படுத்தினர். இவர்களைத் தொடர்ந்து 1925ல் Methodist சபைகளும் இணக்கம் தெரிவித்தன. இந்த நடவடிக்கைகளின் பயனாக 1947ல் தென்னிந்திய திருச்சபை (Church of South India – CSI) என்ற மாபெரும் அமைப்பு உருவாயிற்று. இந்த அமைப்பு 1947 – செப்டம்பர் 27ம் நாள் அதிகார பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது.

                                                                                      REPORT THIS AD

“The Church of South India is the church constituted by the Union in 1947 of the Madras, Madurai, Malabar, Jaffna (Ceylon), Kannada, Telgu and Travancore Church Councils of the South India United Church, the South India province of the Methodist Church, comprising the Madras, Trichinoploy, Hyderabad of the Mysore Districts and the Diocese of Madras, Dornakal, Tinnelvely and Travancore-Cochin in the Church of India, Burma and Ceylon, 

to which in 1950 was added the North Tamil Church Council of the (S.I.U.C) South India United Church. (Chapter 1- Section 2 page 1 to the Constitution of CSI – 1952).

ஆனால் இந்த ஐக்கியத்தில் ஆர்காட் லூத்தரன் சர்ச் (TALC), தமிழ்நாடு இவாஞ்சலிக்கல் லூத்தரன் சர்ச் (TELC), செவந்த்டே அட்வென்டிஸ்டு சர்ச், இரட்சணிய சேனை (Salvation Army) சபைகள், பெந்தேகோஸ்தே சபைகள் போன்றவைகள் இணைவதற்கு முன்வரவில்லை.

CSI ஐக்கியத்தில் (LMS) லண்டன் மிஷன் சபைகள் இணைந்ததன்மூலம், அவைகள் கைக் கொண்டிருந்த தன்னாட்சி உரிமைகளையும், 
Congregational கோட்பாடுகளையும் நிரந்தரமாக இழந்துவிட்டு பேராயர் (Bishop) ஆட்சி முறையையும், குருக்களின் (Rev) மேலாதிக்கத்தையும் 
ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.  தொடக்க கட்டங்களிலிருந்து அன்றே இதை எதிர்த்த வர்களும் இருந்தனர். (Bishop) பேராயர் ஆட்சிமுறையை 
முதல்முதலாக எதிர்த்தவர்கள் லூத்தரன் சபையினர் ஆவர். எனவே அவர்கள் இந்த இணைப்பில் சேராமல் வெளியேறிவிட்டனர். தவிரவும் 
Congregational கோட்பாடுகளில் உறுதியாக நின்ற A.C.லெப்பீவர், H.V.மார்ட்டின் போன்ற மிஷனரிகளும் காலப்போக்கில் சமரசம் (Compromise) 
செய்து கொண்டு பேராயர் (Bishop) முறையை ஏற்றுக்கொண்டனர். இருப்பினும் கன்னியாகுமரி பேராயத்திலும் CSI அமைப்புக்கு எதிராக சிலர் 
குரல் கொடுத்தனர். இந்த எதிர்ப்புகளை சமாளிக்கும் பொருட்டு இப்பேராயர் ஆட்சிமுறையை Constitutional Episcopacy – அதாவது 
சட்டத்திற்குட்பட்ட பேராயர் ஆட்சிமுறை என்று வர்ணித்து அன்றைய எதிர்ப்புகளைச் சமாளித்தனர். 

CSI ஐக்கியம் உருவானதைத் தொடர்ந்து 1952ல் ஒரு சட்டபுத்தகத்தை (The Constitution of the Church of South India) உருவாக்கிக்கொண்டனர். இந்த விதி முறைகளை 2003ல் விரிவாக்கி போதிய திருத்தங்களைச் செய்து பேராயர் ஆட்சியை “Historic Episcopy” என திருத்தி அமைத்துக்கொண்டனர். இதில் பேராயர்தான் சர்வவல்லமையுள்ளவர் என்ற நிலை உருவாக்கப்பட்டது. அவர்களை தட்டிக் கேட்கவோ, தவறுகள் மீது உரிய நடவடிக்கை மேற் கொள்வதற்கோ, CSI சினாடுக்கே பரிபூரண அதிகாரமோ உரிமையோ இல்லாதநிலை உருவாக்கப்பட்டது.

  இந்த சட்டதிட்டங்களை எல்லாம் முழுமையாக CSI-யின் உறுப்பினர்களான அத்தியட்சாதீனங்கள்(தற்பொழுது 25 அத்தியட்சாதீனங்கள் உண்டு- (இவை ஆந்திரா , தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் இலங்கை யை சேர்ந்தவை).

“The Governing Principle of the Church is that it believes that by this Union the Church in South India will become a more effective instrument for 

God’s work……” (Chapter 11- Article 2) இதுதான் CSIயின் முக்கிய நோக்கமே தவிர அதில் இணைந்திருக்கின்ற CSI கிறிஸ்தவர்களின் சமூக, சமுதாய, பொருளாதார அரசியல் மற்றும் கல்வி வளர்ச்சிகள் அதன் கோட்பாட்டில் கொண்டு வரப்படவில்லை. அதனால்தான் பிரதம பேராயரும் (Moderator), (Bishop) பேராயர்களும், (Rev, Pastor)ஆயர்களும் 24 மணி நேரமும் கிறிஸ்தவ ஆராதனை மற்றும் மதச்சடங்குகளை மட்டுமாகச் செய்துவருகின்றனர்.

CSIயில் இணைந்த பல்வேறு திருச்சபைகளின் ஸ்தாவர ஜங்கம சொத்துக்களைப் பரிபாலனம் செய்தவற்கு CSI Synod அமைப்புச் சட்டதிட்டங்களில் அவைகளை நிர்வகிப்பதற்கு இவர்களாகவே வேறொரு அமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்தியன் கம்பனி சட்டம் 1913 (Act VII – of 1913)ன் அடிப்படையில் 26.09.1947ல் Churches of South India Trust Association என்ற நிறுவனத்தை வரிசை எண் 46-ஆகவும் பதிவு எண் CIN – U 93090 TN 1947 NPL000346 ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது CSI சினாடு அமைப்பை அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு ஒருநாள் முன்பாகவே இந்த CSI-TAயை இந்தியன் கம்பனி சட்டத்தின்கீழ் 26.09.1947ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 

CSI-TAயை ஏழு தனி நபர்களால் பதிவு செய்திருக்கிறார்கள். இது ஒரு தனிகம்பனி என்ற அந்தஸ்துதான் இதற்கு உண்டு.

சுருக்கம் :

தென்னிந்தியாவின் திருச்சபை (சிஎஸ்ஐ) ஒரு ஒருங்கிணைந்த புராட்டஸ்டன்ட் தேவாலயம் ஆகும், இது உறுப்பினர்களின் 

எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய கிறிஸ்தவ தேவாலயமாகும்; இது தென்னிந்தியாவில் உள்ள பல புராட்டஸ்டன்ட் தேவாலயங்களின் இணைப்பின் விளைவாகும்.

தென்னிந்தியாவின் திருச்சபைக்கு உத்வேகம் மற்றும் மதச்சார்பின்மையிலிருந்து பிறந்தது மேலும் யோவான்  நற்செய்தியில் 
பதிவு செய்யப்பட்ட இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டது (17.21). யுனைடெட் சர்ச் ஆஃப் கிறிஸ்ட் (சபை), அவர்களின் 
முன்னோடி பிரிவுகளில் ஒன்று, அவர்களின் குறிக்கோள்:    அவர்கள் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக; 
நீ, தந்தையே,  என்னிலும், நான் உன்னிலும் இருப்பது போல, அவர்களும் நம்மில் ஒருவராக இருக்க வேண்டும்: நீ என்னை 
அனுப்பினாய் என்று உலகம் நம்பும். "அவர்கள் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும்" என்பது தென்னிந்திய திருச்சபையின் 
குறிக்கோளாகும்.
 
இங்கிலாந்துதிலிருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற ஒரு மாதத்திற்குப் பிறகு, செப்டம்பர் 27, 1947 அன்று மெட்ராஸில் உள்ள 
செயின்ட் ஜார்ஜ் கதீட்ரலில் சர்ச் ஆஃப் தென்னிந்திய யூனியன் விழா நடந்தது.  இது SIUC, (தென்னிந்திய ஐக்கிய தேவாலயமே சபை 
பிரஸ்பைடிரியன் மற்றும் சீர்திருத்த மரபுகளிலிருந்து தேவாலயங்களின் ஒன்றியம்) தொழிற்சங்கத்திலிருந்து உருவானது; இந்தியா 
(பாகிஸ்தான்) தேவாலயத்தின் தெற்கு மாகாணங்கள், பாகிஸ்தான், பர்மா மற்றும் சிலோன்; மற்றும் தென்னிந்தியாவின் மெதடிஸ்ட் சர்ச்.   
மறைமாவட்டத்தின். அதன் ஒரு பகுதியாக, அனைத்து மரபுகளிலிருந்தும் எடுக்கப்பட்ட ஒன்பது புதிய ஆயர்கள், அலுவலகத்தில் ஏற்கனவே 
ஐந்து ஆங்கிலிகன் ஆயர்களுடன் பணியாற்றுவதற்காக புனிதப்படுத்தப்பட்டனர்.  ஒவ்வொரு புதிய பிஷப்பும் தலைமை ஆயரால் கைகளை 
திணித்து, மேலும் இரண்டு ஆங்கிலிகன் ஆயர்கள் (Rt. Rev. AM Hollis மற்றும் Rt. Rev. GT Selvynthe) மற்றும் ஒன்றிணைக்கும் 
தேவாலயங்களில் இருந்து ஆறு பிரஸ்தாபிகளுடன் கைகளை விதித்து நியமிக்கப்பட்டனர்.] தென்னிந்திய தேவாலயத்தின் உருவாக்கத்தில் 
உணரப்பட்ட அப்போஸ்தலிக்க வாரிசு கோட்பாட்டின் மீது, மற்ற ஒன்றிணைக்கும் பிரிவுகளுடன் ஆங்கிலிகன் பார்வைகளின் இந்த 
நல்லிணக்கம் பெரும்பாலும் மதச்சார்பற்ற இயக்கத்தில் ஒரு அடையாளமாக குறிப்பிடப்படுகிறது.

CSI LOGO :
தென்னிந்திய தேவாலயத்தின் சிஎஸ்ஐ லோகோ ஒரு வெள்ளை பின்னணியில் ஒரு பகட்டான தாமரை மலரின் மீது மிகைப்படுத்தப்பட்ட 
சிலுவையைக் கொண்டுள்ளது; தேவாலயத்தின் குறிக்கோள் மற்றும் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. மதுரை அமெரிக்கன் 
கல்லூரி பேராசிரியர் ஜே.வசந்தன் இதை வடிவமைத்தார்.

 

                               

 

OUR CSI DMR LOGO :
நமது சிஎஸ்ஐ டிஎம்ஆர்(CSI DMR- LOGO) லோகோ ஒரு கிராம தேவாலயம், பைபிள், ஒளி, மீன் மற்றும் மீனவர்கள் ஒரு நீல பின்னணியில் 
கடலில் படகு ஆகியவற்றில் மிகைப்படுத்தப்பட்ட ஒரு சிலுவையைக் கொண்டுள்ளது; அதன் மேல் மறைமாவட்டத்தின் பெயர் 
பொறிக்கப்பட்டுள்ளது. 
இது திரு.சி.வி.ஜான், வரைபட மாஸ்டர், பசுமலை (MY GRANDFATHER)அவர்களால் 1958ல் வடிவமைக்கப்பட்டது மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் 
நடந்த திருமண்டல சிஎஸ்ஐ நிர்வாகக் குழுவால் 1961ல்  அங்கீகரிக்கப்பட்டது

https://paulshumanmanagement-in.webnode.in/news/biography-of-c-v-john-drawing-master-pasumalai/

 

தற்பொழுது CSI SYNOD அதிகாரிகளாக கீழ்க்கண்ட நபர்கள் நிர்வாகிகளாக இருக்கிறார்கள் :

MODERATOR ஆக - The Most. Rev. A. Dharmaraj Rasalam  அவர்களும்

DEPUTY MODERATOR ஆக - The Rt. Rev. Dr. K. Reuben Mark  அவர்களும்

General Secretary CSI & Honorary Secretary CSITA ஆக  Adv. திரு. C. Fernandas Rathina Raja, M.A., B.L., அவர்களும்

'Hon. Treasurer CSI & CSITA ஆக -Prof. Dr. B. Vimal Sukumar அவர்களும்

இவர்களின் சீரிய செயல்களால் இன்றைய CSI நிர்வகிக்கப் பட்டு வருகிறது.

மேலும் நமது மதுரை முகவை csi திருமண்டல பேராயர் மற்றும் அதிகாரிகளுக்காகவும்,  CSI SYNOD அதிகாரிகளுக்காகவும் மற்ற திருமண்டல பேராயர்கள் மற்றும் அதிகாரிகளுக்காகவும் நாம் ஜெபிப்பது நமது கடமையாகும்.

 

ஆண்டவர் இந்த CSI (தென்னிந்திய திருச்சபை )75வது ஆண்டு டைமோன்ட் ஜூபிலி ஆண்டுவிழாவை நம்மை கொண்டாட கிருபை செய்திருக்கிறார்.  இன்னும் நமது பிற்கால சந்ததிகள் இந்த பலனை பல ஆண்டாண்டுகள் புசிப்பார்கள் என்ற விசுவாசத்தோடு இந்த உரையை முடிக்கிறேன். நன்றி வணக்கம்

 

  by  S.PAUL SURESHKUMAR, MBA(HR/IR)

        PASUMALAI, MADURAI-625 004

        MOB: 98429 71959