10-அர்ப்பணங்கள்
28/03/2019 10:30
- முழு இருதயத் தோடும் ஆண்டவரை நேசிக்க அர்ப்பணிக்கிறேன். – மத்தேயு 22:37
- எல்லா தாழ்மையோடும் ஆண்டவருக்கு ஊழியம் செய்ய அர்ப்பணிக்கிறேன். – பிலிப்பியர் 2:6, அப்போஸ்தலர் 20:19
- என் முழு சிந்தையோடும் கற்றுக்கொள்ள அர்ப்பணிக்கிறேன். – மத்தேயு 11:29
- முழு பெலத்தோடும் சொல்லிக்கொடுக்கவும், பிரசங்கிக்கவும் அர்ப்பணிக்கிறேன்.- 2 தீமோத்தேயு 4:2
- எப்போதும் உண்மையே பேச அர்ப்பணிக்கிறேன். – மத்தேயு 5:37, எபேசியர் 6:14
- வாழ்நாள் முழுவதும் எல்லோரையும் நேசிக்கவும், மரியாதை செலுத்தவும் அர்ப்பணிக்கிறேன். – பிலிப்பியர் 2:3, 1 பேதுரு 2:17
- வெற்றி பெறுபவர்களை பாராட்டவும், பாதிக்கப்பட்டவர்களை தூக்கி விடவும் அர்ப்பணிக்கிறேன். – 1 தெச. 5:14
- மனிதர்களை அல்ல, பிரச்சனைகளை விவாதிக்க அர்ப்பணிக்கிறேன். – 1 சாமுவேல் 16:7
- வெற்றியின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள அர்ப்பணிக்கிறேன். – 1 கொரிந்தியர்15:57
- கிறிஸ்துவுக்காக பாடுகளை ஏற்றுக்கொள்ள அர்ப்பணிக்கிறேன் – மத்தேயு 10:38