REMOVE THE STONE : கல்லை அகற்று

15/02/2025 10:42

REMOVE THE STONE. யோவான் 11- 39 - Gideons @ 6 am on 15.02.2025(Saturday)

யோவான் 11:39 இயேசு: கல்லை எடுத்துப்போடுங்கள் என்றார். மரித்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள் அவரை நோக்கி: ஆண்டவரே, இப்பொழுது நாறுமே, நாலுநாளாயிற்றே என்றாள்.    யோவான் 11:41 அப்பொழுது மரித்தவன் வைக்கப்பட்ட இடத்திலிருந்த கல்லை எடுத்துப்போட்டார்கள். 44 அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். ஆமென்

  1. உங்களுக்கும் இயேசுவுக்கும்இடையில் ஒரு கல் நிற்கிறதோ?
  2. உங்களுக்கும் இயேசுவுக்கும்இடையில் கல்லை நீங்களே உருவாக்கினீர்களோ?
  3. உங்களுக்கும் இயேசுவுக்கும்இடையில் இருக்கும் கல் அகற்றப்பட்டால்தான், அதனால் நீங்கள் ஒரு அதிசயத்தைக் காண முடியும்.

இயேசுவின் அறிவுரை: கல்லை அகற்று.  இப்போது அது உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது, ஏனென்றால் முழு பிரபஞ்சத்திலும் உள்ள அனைத்தும் இயேசுவால் உருவாக்கப்பட்டது.  ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனோடு இருந்தது, அந்த வார்த்தை தேவனாக இருந்தது. சகலமும் அவர் மூலமாகவே படைக்கப்பட்டன.  அவர், “கல்லே நகன்று போ” என்று சொல்லியிருக்கலாம்.  இயேசு, “கடுகு விதையளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால், அந்த மலையே நகன்று போகும் என்றவர் அதனை சொல்லி இருக்கலாம்,   அதை ஒரு வார்த்தையில் நகர்த்தியிருக்கலாம், ஆனால் அவர் ஏன் செய்யவில்லை"?. ஏனென்றால் நாம் அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அவருடன். ஆச்சரியமாக இல்லையா? கடவுள் நம்மை விரும்புகிறார் அவருடன் வேலை செய்ய, அவர் ஒரு சிறந்த வேலையை செய்ய முடியும். ஆனால் அவர் நம்முடன் பணியாற்ற விரும்புகிறார்.

 ஆண்டவருக்கும் நமக்கும் இடையே இருக்கும் கல்லை எடுக்க முயற்சிக்கும் போது ஆண்டவர் செய்யும் காரியங்கள் என்ன? 

1.முதலாவது, அவிசுவாசக் கல், பாவக்கல், சாபக்கல், எதுவானாலும் அதை அகற்ற நாம் முற்படும்போது ஆண்டவர் நமக்கு உதவி செய்வார். அதுதான் ஆண்டவரின் சித்தம் அல்லது திட்டம், அதுவே உண்மையான தேவ ஆசிர்வாதம்.  

2.இரண்டாவது, இருளில் இருக்கும் நாம் வெளிச்சத்தைக் காணவேண்டுமென்றால் நமக்கும் ஆண்டவருக்கும் இடையே இருக்கும் கல் அகற்றப்படவேண்டும். 

3.மூன்றாவதாக, ஒருவேளை நமது வாழ்வு நாற்றம் எடுக்கும் வாழ்வாக இருந்தாலும் அது சுகவாழ்வாக, புதிய வாழ்வாக, ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புது சிருஷ்டி என்பது போல, நற்கந்த மணமான பரிமளதைல வாசனை வாழ்வாக மாறும். 

4.நான்காவது, யாரும் அவிழ்க்க முடியாத கட்டப்பட்ட வாழ்வாக இருந்தாலும், அந்தக் கட்டுகள் எவ்வளவு பெரியதாக, கடினமானதாக  இருந்தாலும் ஆண்டவர் அவற்றை ஒரு நொடியில் கழன்று விழ வைப்பார்.  ஆமென். 

 

ஆண்டவர் விரும்புவது எனது பிள்ளையின் சுகவாழ்வு துளிக்கவேண்டும், என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை, நன்மையையும் கிருபையும் எனது பிள்ளைகளைத் தொடரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.  அதற்கு அவரது பிள்ளைகளாகிய நாம் அந்த கல்லை அகற்ற முற்படவேண்டும்.  அப்பொழுது அவரும் நமக்கு உதவி செய்து அதிசயம் நமது வாழ்வில் நடக்கும்.  ஆமென்.

Jesus says, Remove the stone. Let me ask you this,

  1. is there a stone standing between you and Jesus?
  2. Have you created stones between you and Jesus?
  3. Is there a stone that needs removing between you and Jesus so that you can see a miracle?

Jesus instruction is: remove the stone. Now that’s amazing really, because everything in the whole cosmos was created by Jesus. In the beginning was the word, and the word was with God and the word was God. All things were created through him. If he wanted to, he could have said, “Stone move”. Because he’s the one that said, “If you have faith as small as a mustard seed, you could tell that mountain you’re in the way, move along. So he could have moved it just with a word, but he  didn’t why”?. Because he wants us to work with him. With him. Isn’t that amazing? God wants us to work with him, when he could do a better job. But he likes working with us.

யோவான்  11 - 39. இயேசு, கல்லை எடுத்துப் போடுங்கள் என்றார்.  3G Jesus *said, “Remove the stone.” “Take away the stone,” he said. 3G Jesus said, “Move the stone away.” 41 So they removed the stone. அப்பொழுது மரித்தவன் வைக்கப்பட்ட  இடத்திலிருந்த கல்லை எடுத்துப் போட்டார்கள்.41 So they took away the stone. கல்லை அகற்றின பிற்பாடு அதிசயம் நடந்தது. 44 அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். ஆமென்

 

மேற்கண்ட வார்த்தைகளை என்னுடைய மகள் Deborah Ratna 14.02.25 அன்று இரவு குடும்ப ஜெபத்தில் ஜெபிக்கும்போது உறுதிப் படுத்தி ஜெபித்தாள்.