Understanding Consumerism - நுகர்வோர் பயன்பாட்டைப் புரிதல் /நுகர்வுவாதம் புரிதல்
October 23, 2022, Sunday
Christian Response to Consumerism – நுகர்வோர் பயன்பாட்டிற்கான கிறிஸ்தவ பதில்-
Consumerism: The protection or promotion of the interests of consumers. நுகர்வோரின் நலன்களைப் பாதுகாத்தல் அல்லது மேம்படுத்துதல்.
ஆதாரம் : வேதாகமம் : Gen.3:1-7 , Psalm Ps.37, Epistle Phil.3:17–21, Gospel Matt.6: 25-34
முதலில் நாம் எல்லோருமே பல நிலைகளில் நுகர்வோர்(Consumer) என்பதை புரிந்து இந்த செய்தியை கேட்கும்படி கேட்டுக்கொள்ளுகிறேன்.
ஒரு நிறுவனத்தின் உற்பத்திப் பொருள்களை அல்லது சேவையை இயன்ற அளவு சிறப்பான முறையில் நுகர்வோர்(மக்கள்) முன் காட்சிப்படுத்தும் மற்றும் விளம்பரப்படுத்தும் செயல்பாடுதான்; விற்பனை நடவடிக்கை; சந்தைப்படுத்துதல்.Marketing. இதில் நேர்மறையான தாக்கம் (positive impact), எதிர்மறை தாக்கம்(negative impact) இரண்டும் இருக்கிறது. அதன் தாக்கம், வாங்கும் நபர்களுக்கு அந்தப் பொருள்களின் பயன்பாடு சரியாக பொருந்தும், பலருக்கு தேவையில்லாத காரியமாகவும் அவர்களுக்கு இடைஞ்சலாகவும் மாறிவிடும் . நாம் அநேக காரியங்களில் சூழ்நிலை நன்றாக இருப்பாதாக கருதி சிலருக்கு நன்மை செய்வதாக எண்ணி செய்ததின் விளைவு நமக்கே நஷ்டம் வருவது மட்டுமல்ல அவப்பெயர் வேறு வருகிறதல்லவா. இதை நாம் வாசிக்கலாம் ஆதியாகமம் 3 – 6 அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கபடத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது....அதின் கனியை பறித்து புசித்து தன் புருஷனுக்கும் கொடுத்தாள், அவனும் புசித்தான்......
இதுதான் இன்றைய விளம்பரம் ....நமது அறிவால் பார்ப்பது வேறு நிஜம் வேறு..
இன்றைக்கு ஒரு பொருள் அல்லது சேவையை சந்தைப்படுத்த விளம்பரம் தேவை, அவை, நவநாகரீக உலகில் கவர்ச்சி, ஆடம்பரம், ஈர்க்கும் பேச்சு, பகட்டு, அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் சொன்னால் சரியாக இருக்கும் என்று ஒரு மாய வலைக்குள் நுகர்வோர் சிக்கி வெளியே வரமுடியாமல் இருக்கும் சூழல். இது ஒரு கலாசாரமாகவே மாறிவிட்டது. பத்திரிகை, தொலைக்காட்சி, சுவரொட்டி போன்றவற்றில் செய்யும் வணிக விளம்பரம், வேலை வாய்ப்பு அறிவிப்பு முதலியன மக்களுடைய விருப்பு ஆர்வத்தைத் தூண்டும்,. இதைப்போலத்தான் நமது பிரதம மந்திரி .......On 12-04-22 உலக வர்த்தக அமைப்பு மாநாட்டில் “உலகத்திற்கு நாங்கள் உணவு தர தயார்” என்று சூளுரைத்தார். பிறகு 29-09-22 (5 months later) Central Govt submitted a report(அறிக்கை) at Supreme court of India. In India 69%(0-5 years) death due to malnutrition(சத்து குறைபாடு). Hunger death in India in 2022 – 35 cr and 2018- 19 cr – தற்பொழுது Global Hunger Index (107 / 121 countries)உலகளாவிய பசி குறியீட்டின்படி, Contradictory statement. உற்பத்தி அதிகம் ஆனால் பசியும் அதிகம் வினோதமான, முரண்பாடான தகவல் இல்லையா (Economic Times/business india). அரசியல்வாதிகளின் பேச்சு எதிர்மறை தாக்கம்(negative impact) ஆக நாட்டின் மக்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்ற சரியான புரிதல் அந்த நாட்டின் மக்களுக்கு தெரியாது அல்லது குழம்பி போய் இருப்பார்கள். சரித்திரங்கள் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன அல்லது புரட்டப் பட்டுக்கொண்டிருக்கின்றன. கிருஸ்தவர்கள் ஜாக்கிரதையாக இந்த நாட்களில் நுகர்வோர் பயன்பாட்டில் கவனமாக இருக்கவேண்டும். எது தேவை, தேவை இல்லை, ஆதி 3 – 5 : நன்மை, தீமை அறிந்து ......இந்த விளம்பரம் சரியா, தவறா என்று ஆராந்து செயல்படவேண்டும். இல்லாவிட்டால் நஷ்டம் உங்களுக்குத்தான். மிக மோசமான காரியம் ஓன்று நடைபெறுகிறது, Universal Bible-பொது வேதாகமம் ஓன்று போப்பாண்டவர் அவர்களால் நடைமுறைப் படுத்தப்படுகிறது. வேதப்புரட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. போனாவரம் Mens Fellowship குழுவில் இன்றைய நாட்களில் ஆராதனை பல இடங்களில் ஆடல் பாடல் விசில் அடித்து கத்தி வித்தியாசமாக மக்களை திசை திருப்புகிறார்கள் என்று விவாதித்தோம். கிருஸ்தவர்கள் அதிக கவனமாக இருக்கவேண்டிய நாட்கள்.
பொதுவாக வேதம் சொல்லுகிறது நாம் வேலை செய்யும் இடத்தின் அரசு அதிகாரிகளுக்கு / நிறுவனத்திற்கு / முதலாளிகளுக்கு அவர்களின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு வேலை செய்ய வேண்டும் என்று..... வேலையும் செய்யாமலும் இருக்கக்கூடாது என்றும், வேதத்தில் நாம் பார்க்கலாம் ....
எபேசியர் 6:5 & கொலோசெயர் 3:22 வேலைக்காரரே, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து,......II தெசலோனிக்கேயர் 3:10 ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே..
ஆக அனேக கிருஸ்தவர்கள் நுகர்வோர் பயன்பாடிற்கு எதிர் மறையாக செயல் ஆற்றுகிறார்கள் அல்லது தெரியாமல் அதில் மாட்டிக் கொள்கிறார்கள் என்றால் அது மிகை ஆகாது அதுவும் மிகவும் வேதனையான காரியம். நமது ஆண்டவர் படைத்த இந்த படைப்புகள் பற்றி சரியான அறிவு கிருஸ்தவர்களுக்கு கிடையாது.
ஒரு கதை ஓன்று சொல்லப்பட்டது : கிருஸ்தவர்களுக்கு வேதாகமும், குருவானவர்களும், ஊழியர்களும் பாவம் விஷம் போன்றது, பாவத்தின் சம்பளம் மரணம் என்று போதிக்கிறார்கள். ஆனால் மோட்சம் செல்லுவதற்கு வாசல் ஒன்றுதான் அதுவும் குறுகலானது, நிந்தனை போராட்டம் இருக்கும் என்றெல்லாம் கூறுகின்றனர். இதை அறிந்துகொள்ள ஒரு traveller(பிரயாணி) மோட்சம் மற்றும் நரகம் செல்ல ஒரு travel agentஐ அணுகுகிறார், அவரும் ஒரு சலுகைக் கட்டணத்தில் அங்கே அழைத்துச் செல்லுகிறார். அவருக்கு ஒரு (guide)வழிகாட்டியாக ஒரு தேவதூதன் கொடுக்கப்படுகிறார், முதலில் அவர் நரகத்திற்கு அழைத்துச் செல்லுகிறார். அங்கே வாசலில் reception மேக்கப் போட்ட இளம்பெண் ஒருவர் இருகரங்கள் கூப்பி வரவேற்கிறார். முதலில் welcome drink கொடுக்கப்படுகிறது, அது மிகவும் அருமையாக இருக்கிறது. உள்ளே ஆங்காங்கே வாலிப பையன்கள் பெண்கள் பெரியவர்கள் என்றால்லாம் சந்தோசமாக ஆடல் பாடலுடன் இருப்பதாக கண்ணாடி வழியாக தெரிகிறது. பிறகு மோட்சம் சென்றார், அங்கு ஒரு வயதானவர் மட்டுமே இருந்தார், வாங்க என்றார் “Praise the Lord” என்று கண்ணாடி வழியாக பார்க்கலாம் என்றார். அங்கிருக்கும் அனைவரும் தனது வேலையை அவரவர் பார்த்துக் கொண்டிருந்தனர். சரி இந்த traveller இப்போ அங்கிருக்கும் தேவதூதரிடம் எனக்கு இப்பவே நரகம் செல்ல ஆசையாக இருக்கிறது என்று அதனுள்ளே போகிறார், ஆனால் வெளியில் தெரிவதற்கும் உள்ளே இருப்பதற்கும் அப்படியே உல்டாவாக மாறி இருக்கிறது கண்டு ஆச்சரியப்படுகிறார். அங்கிருப்பவர் மிகவும் வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருந்தனர். என்ன இப்படி இருக்கிறது என்று அவர் கேட்டதற்கு, The angle happily replied, ”That was the advertisement department of hell. ஆம் பிரியமானவர்களே..ஆலயத்திலும் விளம்பரம் உத்தி, இதுதான் இன்றைய கிறிஸ்தவம், கவர்ச்சி, ஆவிக்குரிய சபை, ஆடல், பாடல், விசில், மிகவும் சத்தமாக, பல பாஷை பேசுபவர்கள், PROSPERITY CHRISTIANITY என்றெல்லாம் இன்றைக்கு மக்கள் ஒரு சபையை விட்டு மறுசபை என்று செல்லும் காலம். மிகவும் கவனம் கிறிஸ்தவ வாழ்க்கை கடினமான, பாடுகள் நிறைந்த வாழ்க்கை, அநேகர் நம்மை புரிந்து கொள்ள மாட்டார்கள். நீங்கள் என்ன நல்லது செய்தாலும், நமக்கு தீமை தான் செய்வார்கள். சொந்தம் பந்தமும் அப்படித்தான். எதை நீங்கள் விரும்புகிறீர்கள். இன்றைய கிறிஸ்தவர்களின் பதில் என்ன? அநேக நேரங்களின் நாம் புறாவைப் போல கபடற்றவர்களாக இருந்தாலும், சர்ப்பத்தைப் போல வினா உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.
சரி Resources(வளங்கள்)–HR-மனிதவளம், இயற்கை வளங்கள், கனிமவளங்கள் போன்ற வளங்களை பாதுகாப்பது நம்முடைய படைப்பாளியாகிய ஆண்டவர் அவரது படைப்புகளாகிய மனிதர்களிடம் ஒப்படைத்து இருக்கிறார். ஆனால் modernization நவீனமயமாக்கல், உலகமயமாக்குதல்(Globilization), வளர்ச்சி, நுகர்வோர் பாதுகாப்பு என்ற போர்வையில் அனைத்தையும் அழித்துவிட்டு அதன் பயன்பாடு அறியாமல் அல்லது அறிந்தும் கண்டுகொள்ளாமல் முடிந்தமட்டும் வணிகமயமாக்கிவிட்டு, computerised world, Robot போன்று மனிதனின் பேராசையால் இயற்கை வளம் சூறையாடப்பட்டு அதின் பாதிப்பால் மனிதரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இதை கிருஸ்தவ பிள்ளைகள் சரியாக புரிந்து கொள்ளவேண்டும். (GHI 107 / 121) ஆகவே இந்த நுகர்வோர் பயன்பாடு புரிந்தவர்களாக தற்காலத்தில் வாழவேண்டும் என்ற குறிக்கோள் நமது கிருஸ்தவர்கள் ஒவ்வொருவர் மனதிலும் இருக்கவேண்டும். இதற்கு கிருஸ்தவர்கள் இரண்டு முக்கிய காரணிகளை தெரிந்து கொள்ளவேண்டும். 1) ஒரு முன்மாதிரியான எளிய வாழ்க்கை முறையை வாழ பழக வேண்டும் –Model a simple lifestyle(மத்தேயு 6:25-34) மத்தேயு 6: 33 – முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் ........ 2) நித்தியத்தை (பரலோகம் செல்லுவதே) நமது இலக்காக ஆக்கவேண்டும் –Make Eternity the Goal (பிலிப்பியர் 3 :17-21)
அனைத்து இந்திய மக்களும் சிக்கனமாக, சேமிப்பு செய்கிறவர்களாக, எளிய வாழ்க்கை வாழுகிறவர்களாக, மற்ற மனிதர்களை மதிப்பவர்களாக, வளங்களை பாதுகாப்பவர்களாக மாறவேண்டும்.
பாடல் : பரலோகமே என் சொந்தமே
என்று காண்பேனோ
என் இன்ப இயேசுவை
என்று காண்பேனோ
1. வருத்தம் பசி தாகம் மன துயரம் அங்கே இல்லை
விண் கிரீடம் வாஞ்சிப்பேன் விண்ணவர் பாதம் சேர்வேன் ....
2. சிலுவையில் அறையுண்டேன் இனி நானல்ல இயேசுவே
அவர் மகிமையே எனது லட்சியமே
3. இயேசு என் நம்பிக்கையாம் இந்த பூமியும் சொந்தமல்ல
பரிசுத்த சிந்தையுடன் யேசுவை பின்பற்றுவேன்
4. ஓட்டத்தை ஜெயமுடன் நானும் ஓடிட அருள் செய்வார்
விசுவாச பாதையில் சோராது ஓடிடுவேன்
5. பரம சுகம் காண்பேன் பரன் தேசம் அதில் சேர்வேன்
இரா பகல் இல்லையே இரட்சகர் வெளிச்சமே
6. அழைப்பின் சத்தம் கேட்டு நானும் ஆயத்தமாகிடுவேன்
நாட்களும் நெருங்குதே வாஞ்சையும் பெருகுதே
இதற்கு வேதத்திலிருந்து ஒரு மனிதர் ஆண்டவருடைய கிருஸ்தவ பிள்ளைகள் எவ்வாறு நுகர்வோர் பயன்பாட்டை சரியாக கையாளவேண்டும் என்று அருமையாக வாழ்ந்து காட்டி இருக்கிறார்.
அந்தப் புகழ்பெற்ற மாபெரும் மனிதன்(தேவமனிதன்) – போவாஸ்
பொதுவாக வேதபண்டிதர்கள் ரூத்தின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெண்கள் இருவரைக் குறித்து அதாவது, ரூத்தின் நற்பண்புகளைக் குறித்தும், நகோமியின் வாழ்க்கையைக் குறித்தும் மெச்சிப் பேசுவார்கள். அதே நேரத்தில் அந்த ரூத் புத்தகத்தின் கதாநாயகன் போவாசின் நற்குணங்களைக் குறித்து நாம் ஆராய்ந்து பார்த்து, அவனுடைய நற்பண்புகளை பின்பற்றுவது நமக்கு மிகவும் ஆசிர்வாதமாக இருக்கும் அவற்றை நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.
பெத்லகேமில் வாழ்ந்த சகல ஜனங்களும் போவாசைப் பார்த்து, “நீ எப்பிராத்திலே பாக்கியவானாயிருந்து, பெத்லகேமிலே புகழ்பெற்றிருக்கக் கடவாய் – ரூத் 4 :11 என்று கூறினார்கள். இதற்கான அர்த்தம் “வேதாகம விரிவாக்க மொழியாக்கம் சொல்லுகிறது “எல்லா மக்களும் உன் பெயரைக் குறித்துச் சொல்லிப் போற்றுவார்கள். உனது தலைமுறைகள் மட்டுமின்றி, நீ மரித்த பின்பும் உனது பரம்பரையில் வாழும் அனைவரும் உனது புகழைச் சொல்லி மகிழுவார்கள்”, என்பதே.
இந்த போவாஸ் தாவீதின் பூட்டன். தாவீதின் வம்சத்தில் தான் இயேசுகிறிஸ்து பிறந்தார். மத்தேயு சுவிசேசத்தில் போவாசின் பெயர் காணப்படுவது ஒரு சிறப்பு அம்சமாகும். போவாஸ் இயேசுவுக்கு நிழலாட்டமான ஒரு மனிதன். ஒரு தேவ மனிதனிடத்தில் இருக்க வேண்டிய அற்புதமான சுபாவங்கள், பண்புகளை நாம் போவாசிடத்தில் காணாலாம். இன்னும் மேலாக சொல்வதென்றால் போவாஸ் ஒரு மாபெரும் மனிதன் (ரூத் 2:1) அதுமட்டுமல்ல மிகுந்த ஆஸ்தி உடையவன். போவாஸ் என்றால், “பெலன்” என்று அர்த்தம். சாலோமோன் கட்டின தேவாலயத்தில் “போவாஸ்” என்று ஒரு தூண் இருந்தது. அது தேவாலயத்தைத் தாங்கி நிற்கும் பெலன் கொண்டது. போவாஸ் உள்ளான மற்றும் புறம்பான மனிதனிலும் பெலன் பெற்றவனாக இருந்தான். ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனிதர் தயவிலும் அதிகமாக விருத்தி அடைந்தவனாக இருந்தான்.
போவாசின் கீழ் பல வேலைக்காரர்களும், வேலைக்காரிகளும், அவனுடைய நிலத்தில் வேலை செய்தார்கள். அவன் அவர்களைப் பார்த்து, “கர்த்தர் உங்களோடு இருப்பாராக” என்று சொல்லி ஆசீர்வதித்தான். ரூத் 2 : 4. கிருஸ்தவர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் போதும் “ஆண்டவர் உங்களோடு இருப்பாராக”, GOD BLESS YOU அல்லது “PRAISE THE LORD” என்று கூறுங்கள். அப்பொழுது ஆண்டவருக்கும் மனிதருக்கும் பிரியமான மனிதராக மதிக்கப்படுவீர்கள்.
போவாஸ் மற்றவர்களுடைய காரியங்களில் ஈடுபடும்போது அவன் எப்போதும் அவர்களுடைய தேவைகளை உணர்ந்து அறியக் கூடியவனாக இருந்தான். தன்னுடைய வேலையாட்கள், உறவினர், மற்றவர்களோடும் அவன் பேசிய வார்த்தைகள் பட்சமும், தயவும் நிறைந்நதவனாக இருந்தன. தாராள மனதுடன் வெளிப்படையாக மற்றவர்களுக்கு உதவி செய்ய முன் வந்தான். ரூத் யார் என்பதை அறிந்து கொண்டபோது அந்தக் குடும்பத்திற்கு உதவி செய்யும்படி பல நடவடிக்கைகள் எடுத்தான். ஏனென்றால், தனக்கு உறவினனான நகோமிக்கு ரூத் உண்மையுள்ளவனாக இருந்தாள்.
போவாஸ் சரியானபடி சொல்வதோடு அல்லாமல் உடனே செய்யவும் செய்தான். தனக்கு ஏற்பட்ட சூழ்நிலையில் அவன் சரியான முடிவுடுத்து செய்லபட்டான்.
அவனுடைய பலமும் சாதனைகளும்:
a. தான் சொல்லிய வார்த்தையின்படி செய்பவன்., b. தேவையுள்ளவர்களின் தேவைகளை அறிந்தவனாக தன்னுடைய வேலையாட்களிடம் அக்கரை காண்பித்தான். c. நல்ல பொறுப்புணர்வும் நேர்மையும் உள்ளவனாக இருந்தான். d. அவன் ஒரு வெற்றி பெற்ற, புத்திசாலியான தொழிலதிபராக இருந்தான்.
அவன் வாழ்க்கையிலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக் கொள்ளலாம்?
a. செய்ய வேண்டியவற்றை சரியான பிரகாரம் செய்வதே வீரமுள்ள செயலாகும். b. தேவன் அடிக்கடி, சிறிய தீர்மானங்களைத் தமது பெரிய திட்டத்தை நிறைவேற்ற்றுவதில் உபயோகிக்கிறார். c. நமது அன்றாட வாழ்க்கையில் தீர்மானங்களைச் செய்ய வேண்டிய சவாலை நாம் எதிர்நோக்குகிறோம். நகோமியின் நெருங்கின உறவினரைப் போல் நாமும் சரியான தெரிந்து கொள்ளுதலை செய்வதைவிட்டு, இலகுவானதைத் தெரிந்து கொள்பவர்களாக இருக்கிறோம். அநேகமாக, எது சரியான தெரிந்து கொள்ளுதல் என்பது தெளிவாகத் தெரிகிறது. இன்று நாம் தெரிந்து கொள்ளுதலில் தேவன் நமக்கு விசேஷித்த விழிப்புணர்வைத் தந்து, அத்துடன் நாம் சரியான தெரிந்து கொள்ளுதலை செய்யத் தக்கதாக புதுப்பிக்கப்பட்ட ஒப்புக் கொடுத்தலுக்காகவும் தேவனை வேண்டிக் கொள்வோமாக.
இந்த போவாசின் நான்கு முக்கிய நற்பண்புகளை நாம் தியானிக்கலாம். அவன் இந்த உலக மக்களுக்கு படைப்பாளி ஆகிய ஆண்டவர், தனது சக மனிதனுக்கு அல்லது இயற்கை வளத்திற்கு வேண்டிய காரியங்களை எப்படி, எங்கு, என்ன செய்ய விரும்புகிறாரோ அதையே செய்கிறவனாக பார்க்கலாம்:
- போவாஸ் ஒரு இரக்கமுடைய மனிதன் – ரூத் 2 :8
- போவாஸ் ஒரு நீதிமான் – ரூத் 3 : 9 - 14
- போவாஸ் ஒரு அன்புடைய மனிதன் – ரூத் 3 : 10,11
- போவாஸ் ஒரு நேர்மையுள்ள மனிதன் – ரூத் 4 : 1-4
- போவாஸ் இரக்கமுடைய மனிதன் - ரூத் 2-8 :
ரூத் 2 - 8. அப்பொழுது போவாஸ் ரூத்தைப்பார்த்து: மகளே, கேள்; பொறுக்கிக்கொள்ள வேறே வயலில் போகாமலும், இவ்விடத்தைவிட்டுப் போகாமலும், இங்கே என் ஊழியக்காரப் பெண்களோடுகூடவே இரு. ரூத் 2: 4. அப்பொழுது போவாஸ் பெத்லெகேமிலிருந்து வந்து, அறுக்கிறவர்களைப் பார்த்து: கர்த்தர் உங்களோடே இருப்பாராக என்றான்; அதற்கு அவர்கள்: கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக என்றார்கள்.
தமிழ் வேதாகமத்தில் "மகளே" என்று எழுதப்பட்டுள்ளது. ஆங்கில வேதாகமத்தில், "என் மகளே" என்று எழுதப்பட்டுள்ளது. "மகளே" என்ற சொல்லுக்கும் என் மகளே(MY DAUGHTER) என்ற சொல்லுக்கும் உள்ள வேறுபாட்டை நீங்கள் கவனித்தீர்கள் என்றால், அதில் மிகுந்த அன்பும், பரிவும், பாசமும், நேசமும், ஆறுதலும் காணப்படுகிறதல்லவா ? மேலும் ரூத் 2ம் அதிகாரம் 8,9,14,15,16 ம் வசனங்களை வாசிக்கும்போது அங்கே போவாசின் இரக்க குணத்தை நாம் பார்க்கலாம். போவாசின் வாயிலே ஆறுதலின் சொற்கள் மட்டுமே காணப்பட்டன. உங்கள் வாய்மொழிகள்கூட போவாசைப் போல இரக்கமும் ஆறுதல் படுத்துகிறவைகளாகவும் காணப்படட்டும், உங்களது மனதுருக்கம், இரக்கம் மனிதர்கள் முன்பு வெளிப்படட்டும்.
மத்தேயு 5:7 இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.
லூக்கா 1:50 அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது.
ஆண்டவர் நம்மீது வைக்கும் இரக்கம் பாராட்டுவது எப்பொழுது? நீதிமொழிகள் 28:13 தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.
முதலில் ஆண்டவர் முன்பாக நம்முடைய பாவங்களை மறைக்கக் கூடாது, இரண்டாவதாக அவைகளை அறிக்கை செய்ய வேண்டும், மூன்றாவதாக அவைகளை விட்டுவிடவேண்டும், அதாவது திரும்ப செய்யக்கூடாது, அப்பொழுதுதான் ஆண்டவரிடம் இரக்கம் அல்லது கிருபை கிடைக்கும்.
இங்கே ரூத்தும் போவாசும் எதையும் மறைக்காமல் விவாதிக்கிறார்கள், அவள் அவனிடம் இரக்கம் பெற்றுக் கொள்கிறாள். இங்கே 12ம் வசனத்தில் “உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குத் கட்டளையிடுவாராக, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என்றான்”.
கிறிஸ்தவர்களின் நுகரும் பார்வை எப்படி இருக்கிறது. அதை இங்கே போவாஸ் தெளிவாக கூறுகிறார். நான்காம் வசனம்....அறுக்கிறவர்களைப் பார்த்து; கர்த்தர் உங்களோடே இருப்பாராக என்றான், அதற்கு அவர்கள், கர்த்தர் உம்மை ஆசிர்வதிப்பாராக என்றார்கள். அவனுடைய வயலில் ஏராளமான தானியங்கள் சிந்தினதைப் பொறுக்க இங்கே என்னுடைய வேலைக்காரப் பெண்களோடு இரு என்றார். இங்கே கிருஸ்தவர்கள் இரக்க குணம் உடையவர்களாக இருக்கும்படி ஆண்டவர் விரும்புகிறார். ஒரு பொருளை, ஒரு குறிக்கோளை அடைய ரூத்தும் முயற்சி செய்கிறாள், அதை போவாசும் கொடுத்து உதவுகிறார்(பரந்து விரிந்திருக்கும் தானியக் களஞ்சியத்தை உபயோகப்படுத்தி மற்றவர்கள் பயன்பாடும் உதவி செய்யும் காரியம்) இந்த யுக்தி தான் – நுகர்வோர் பயன்பாட்டில் கிருஸ்தவர்கள் செய்யவேண்டியவை.
2 . போவாஸ் ஒரு நீதிமான் : ரூத் 3 : 9 – 14
ரூத் 3 – 9 நீ யார் என்று கேட்டான்; அவள், நான் உம்முடைய அடியாளாகிய ரூத்; நீர் உம்முடைய அடியாள்மேல் உம்முடைய போர்வையை விரியும்; நீர் சுதந்தரவாளி என்றாள்.
அதன்பிறகும் அவன் அவளை தொடக்கூட இல்லை. இங்கே நாம் போவாசுடைய தூய்மையான நடத்தையையும், அவனது ஞானமான ஆலோசனையையும், சட்டப்பிரகாரமாக சரி செய்வதை பார்க்கலாம். இதை நாம் யோசேப்பின் வாழ்விலும் (ஆதியாகமம் 39) பார்க்கலாம், எகிப்தின் அதிபதி போத்திபரின் மனைவி அவனிடம் தவறாக நடக்க முற்படும்போது, அவன் இணங்கவில்லை இதை நாம் 10ம் வசனத்தில் பார்க்கலாம் . அப்பொழுது அவனுக்கு வயது முப்பது.....அவனது நேர்மை அவனை உயர்த்தியது. 21. கர்த்தரோ யோசேப்போடே இருந்து,..... 23. கர்த்தர் அவனோடே இருந்தபடியினாலும், .....யோசேப்பின் பரிசுத்தம் அவனை உயர்த்தியது.
போவாசின் தனிப்பட்ட வாழ்விலும் பொதுவாழ்விலும் அவன் நீதிமானாக, நீதி செய்கிறவனாக காணப்பட்டான். ஆம் பிரியமானவர்களே அநேகர் இன்றைய நாட்களில் தனக்கு ஒரு நியாயம் அடுத்தவர்களுக்கு ஒரு நியாயம் என்று இருக்கிறதை நாம் பார்க்கலாம். தான் செய்வதுதான் சரி, மற்றவர்கள் சொல்லுவது சரியில்லை என்று அநேகர் நினைக்கிறார்கள். அதை மாற்றிக்கொள்ள வேண்டும்.
இங்கே ரூத் தனது மாமி நகோமி மூலம் போவாஸ் அவளுக்கு சுதந்திரவாளி (திருமண பந்தம் செய்யும் அதிகாரம் இருப்பவர்) ஆக அவளின் உரிமையோடு அவனிடம் நெருங்குகிறாள். இந்த கிருஸ்தவ பண்பு ஆண்டவர் தம்முடைய பிள்ளைகள் தம்மிடம் உரிமையோடு நெருங்கி வருவதை விரும்புகிறார்.
மேலும் போவாஸ் வசனம் 9-1௦ இல் தெரிகிறது .....நீ கர்த்தரால் ஆசிர்வதிக்கப்படுவாயாக, நீ தரித்திரரும், ஐஸ்வரியவான்களுமான, வாலிபர்களின் பிறகே போகாததினால் உன் முந்தின நற்குணத்தைப் பார்க்கிலும் உன் பிந்தின நற்குணம் உத்தமமாயிருக்கிறது.... என்று கூறி வேண்டியவை எல்லாம் செய்தான் என்று பார்க்கிறோம். இங்கு நம் கிறிஸ்தவர்களின் பதில் என்ன என்றால் நமது உரிமையை ஆண்டவரிடம் சரியான விதத்தில் கேட்கும்போது அவர் நமது தூய்மையைப் பார்த்து கனப்படுத்துகிறார். கிருஸ்தவ நுகர்வோர் பயன்பாட்டில் தூய்மை வேண்டும்.
மத்தேயு 5- 6 : நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் திருப்தியடைவார்கள். மத்தேயு 13:43 அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன். I பேதுரு 3:12 கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது; தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது. சங்கீதம் 34:17 நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார். சங்கீதம்92:12 நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான். சங்கீதம் 112:6 அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்; நீதிமான் நித்திய கீர்த்தியுள்ளவன்.
- போவாஸ் ஒரு அன்புடைய மனிதன் – ரூத் 3 : 10,11
வேலையாட்கள், ஊர்மக்கள், ஏழைகள், விதவைகள் கஷ்டப்படுவோர், புறஜாதியார் எல்லாரிடமும் அன்பாய் இருந்தார். ரூத் 3 - 11. இப்போதும் மகளே, நீ பயப்படாதே; உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன்; நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாரும் அறிவார்கள்.
நிறைவான அன்பு : உலகில் மனிதன் மட்டுமல்ல, உயிருள்ள அனைத்துமே அன்புக்காக ஏங்கி அலைகின்றன. அன்பு என்பது மனிதனுக்கு ஒரு அடிப்படைத் தேவையாக உள்ளது. ஒருவன் தனது தனிமையையும் இயலாமையையும் உணரும் போது அவன் உடல், மனம், அறிவு ரீதியாக அடுத்தவருடைய உதவியை நாடவேண்டிய நிலையில் இருக்கிறான். பிறந்த குழந்தையாக பெற்றோரின் பாசம், வளரும் போது சகோதர சகோதரிகள் மற்றும் ஒத்த வயதுடையோரின் நட்பு, வாலிபப் பருவத்தில் எதிர்பாலருடன் காதல் என ஒருவர் ஏங்கும் அன்பு பல விதங்களில் வடிவம் பெறுகிறது. காலங்கள் மாறினாலும் பருவங்கள் மாறினாலும் மாறாத ஒரு அன்பு, அது தெய்வீக அன்பு, இயேசுவின் அன்பு. .
அன்பு பலவிதம்: அன்பு என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் Love என்ற ஒரே ஒரு வார்த்தை இருப்பினும் அது பல்வேறு நிலைகளில் பல்வேறு விதமான காரியங்களைக் குறிக்கும். அன்பிற்கு பலரும் பலவிதமான வரையறைகளும் வகைப்பாடுகளையும் விளக்கங்களும் கூறினாலும், அவற்றை பின்வருமாறு குறைந்தபட்சமாக நான்கு விதமான கிரேக்க பதங்களில் வகைப்படுத்தலாம். அவை:
1) Storge எனப்படும் பெற்றோர் பிள்ளைகளுக்கிடையேயான பாசம் (affection),
2) Philia எனப்படும் சகமனிதர்களிடையே நிலவும் சகோதர நட்பு (friendship),
3) Eros எனப்படும் இருபாலருக்கிடையேயான காதல் (erotic love),
4) Agape எனப்படும் தேவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான தெய்வீக அன்பு (Love of God). பரிசுத்த வேதாகமத்தில் அனைத்து வித அன்பினைப் பற்றிய குறிப்புகள் இருந்தாலும், எந்த நிலையிலும் மாறாத உச்சநிலை அன்பு என்பது கடவுள் மனிதன் மீது பொழியும் Agape அன்பாக இருப்பதால் அதைக் குறித்தே அதிகமாக பேசுகிறது.
அன்பின் குணாதிசயங்கள்: அன்பின் உருவமாக கடவுள் இருப்பதால் பைபிள் முழுவதுமே அந்த அன்பைக் குறித்து நாம் விளங்கிக் கொள்வதாக இருந்தாலும் அன்பின் குணாதிசயங்களைக் இரத்தினச் சுருக்கமாக 1 கொரிந்தியர் 13: 4 முதல் 8 வசனங்களில் காண்கிறோம். இந்த குணாதிசயங்களை அன்பினிடத்தில் உள்ள நேர்மறையான 8 காரியங்களாகவும் அன்பினிடத்தில் இல்லாத எதிர்மறையான 8 காரியங்களாகவும் கீழ்க்கண்டவாறு அட்டவணைப்படுத்தலாம். அன்பினிடத்தில் உள்ள நேர்மறையான விஷயங்கள்: நீடிய சாந்தமுள்ளது, தயவுமுள்ளது, சத்தியத்தில் சந்தோஷப்படும், சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்
அன்பு ஒருக்காலும் ஒழியாது. அன்பினிடத்தில் இல்லாத எதிர்மறையான விஷயங்கள்:
அன்புக்குப் பொறாமையில்லை, அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது
அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாது
இது மத்தேயு 5 முதல் 7 அதிகாரங்கள் வரையிலான இயேசு கிறிஸ்துவின் நீண்ட மலைப்பிரசங்கத்தின் சுருக்கமான வரையறை எனவும் கொள்ளலாம்.
அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம் (I யோவான் 3:16). அந்த அன்பை புரிந்து கொண்டவர்களால் மற்றவர்களிடமும் நேர்மையாக அன்பு செலுத்த/அன்பை எதிர்பார்க்க முடியும். கள்ளம் கபடமற்ற நிறைவான அன்பாகிய தெய்வீக அன்பை அனுபவிக்க நாம் நம்மை ஒப்புக்கொடுக்கும் போது பாசம், நட்பு, காதல் என்ற கட்டங்களையெல்லாம் சமநிலையுடன் கடந்து நிம்மதியாக வாழ முடியும். அதற்கு ஆயத்தமா?
இங்கே ரூத் பொறுமையாக இருக்கும்படி தனது மாமி கூறுவதை அன்பின் மிகுதியால் அப்படியே கேட்கிறாள். இன்றைக்கு எத்தனை மருமகள்கள் தனது மாமியார் சொல்லைத் தட்டாது கேட்கின்றனர். நான் ஆண்டவருக்கும் பெரியோர்களுக்கும் கீழ்ப்படிந்து நடக்கும்போது ஆண்டவர் அதைக் கனப்படுத்துகிறார். இதை நாம் பார்க்கலாம் போவாசும் அவளை மனைவியாக சட்டப்பிரகாரம் ஏற்றுக் கொள்ளுகிறார். இந்த அன்பு கிருஸ்தவ நுகர்வோர் பயன்பாட்டில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது.
- போவாஸ் ஒரு நேர்மையுள்ள மனிதன் – ரூத் 4 : 1-4.
ரூத் 4 - 1. போவாஸ் பட்டணவாசலில் போய், உட்கார்ந்துகொண்டிருந்தான்; அப்பொழுது போவாஸ் சொல்லியிருந்த அந்தச் சுதந்தரவாளி அந்த வழியே வந்தான்; அவனை நோக்கி: ஓய், என்று பேர் சொல்லிக் கூப்பிட்டு, இங்கே வந்து சற்று உட்காரும் என்றான்; அவன் வந்து உட்கார்ந்தான். 2. அப்பொழுது அவன் பட்டணத்து மூப்பரானவர்களில் பத்துப்பேரை அழைத்து, இங்கே உட்காருங்கள் என்றான்; அவர்களும் உட்கார்ந்தார்கள். 3. அப்பொழுது அவன் அந்தச் சுதந்தரவாளியை நோக்கி: எலிமெலேக் என்னும் நம்முடைய சகோதரனுக்கு இருந்த வயல்நிலத்தின் பங்கை, மோவாப் தேசத்திலிருந்து திரும்பி வந்த நகோமி விற்கப்போகிறாள். 4. ஆகையால் நீர் அதை ஊராருக்கு முன்பாகவும், என் ஜனத்தின் மூப்பருக்கு முன்பாகவும் வாங்கிக்கொள்ளும்படி உமக்கு அறியப்பண்ணவேண்டும் என்றிருந்தேன்; நீர் அதைச் சுதந்தரமுறையாக மீட்டுக்கொள்ள மனதிருந்தால், மீட்டுக்கொள்ளும்; அதை மீட்டுக்கொள்ள மனதில்லாதிருந்தால், நான் அதை அறியும்படிக்கு எனக்குச் சொல்லும்; உம்மையும் உமக்குப்பின்பு என்னையும் தவிர, அதை மீட்கத்தக்கவன் வேறொருவனும் இல்லை என்றான்;...... நீர் மீட்டுக் கொள்ளும் என்று கடைசியாக கூறுகிறான்.
மத்தேயு 25:23 அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான். பிலிப்பியர் 4:8 கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள். I யோவான் 3:18 என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம். நீதிமொழிகள் 28:20 உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்.
---
ஒரு ஆட்டோவில் ஒரு பயனி தன் உடமையை மறந்து விட்டு செல்கிறார். சிறிது நேரம் கழித்து அதை பார்க்கும் ஆட்டோ டிரைவர் அதை உரியவரிடம் சேர்க்க நினைக்கிறார்.இது நியாயம். ஆனால் உரியவர் யாரென கண்டறிய இயலவில்லை. நேரே கோண்டு போய் காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறார். இது நேர்மை. காவலர்கள் உரிமையாளரை கண்டு பிடித்து அவரிடம் உடைமையை சேர்ப்பிக்கின்றனர். இது உண்மை... நேர்மை / உண்மை / நீதி / நியாயம் என்பவை கிருஸ்தவ நுவர்வோர் பயன்பாட்டில் மேலும் ஒரு முக்கிய அங்கம்.
இவை எல்லாவற்றிலும் கடை பிடித்து முக்கியமாக ஒரு கிறிஸ்தவர் இந்த உலக ஆசா பாசங்களுக்கு அடிமை ஆகாமல் ஆண்டவராகிய இயேசுவின் மேல் அன்பு வைத்து நமது குடியிருப்பு பரலோகத்தில் இருக்கிறது என்பதை மனதில் வைத்து இந்த உலக வாழ்வை வாழ வேண்டும். அதுவே கிருஸ்தவர்கள் பார்வையில் இந்த மனித வாழ்வில் நுகர்வோர் பயன்பாட்டின் முழு அர்த்தம்.
1) ஒரு முன்மாதிரியான எளிய வாழ்க்கை முறையை வாழ பழக வேண்டும் –Model a simple lifestyle.
2) நித்தியத்தை இலக்காக ஆக்கவேண்டும் –Make Eternity the Goal. இவை இரண்டையும் ஆண்டவர் கிறிஸ்தவர்களாகிய நம்மிடம் எதிர் பார்க்கிறார். பிரியமானவர்களே....
ஜெபம் :
எந்தன் இயேசு எனக்கு நல்லவர்
அவர் என்றென்றும் போதுமானவர்
ஆபத்தில் வியாதியில் என் பிரயாசங்களில்
அவர் என்றுமே போதுமானவர்
கல்வாரி மலைமேல் ஏறியே
முள் முடி சிரசில் சூடியே
என் வேதனை யாவையும் நீக்கி என்னில்
புது ஜீவனை ஊற்றினதால்
புவி யாத்திரை மிகக் கடினம்
தேவ கிருபைகள் எந்நேரமும்
பகல் மேகஸ்தம்பம் ராவில் அக்கினிஸ்தம்பம்
அனுதினம் என்னை வழி நடத்தும்
எந்தன் ஏக்கம் எல்லாம் நீங்கிப்போம்
கண்ணீர் யாவையும் துடைத்திடுவார்
இயேசு இராஜாவாய் வானத்தில் வெளிப்படும் நாள்
நான் அவருடன் பறந்திடுவேன்
எங்களை அதிகமாக நேசித்து வழிநடத்தும் அன்பின் பரம பிதாவாகிய கடவுளே, நாங்கள் உமக்கு துதி, ஸ்தோத்திர, நன்றிகளைச் செலுத்துகிறோம். குறிப்பாக இந்த உலகின் அனைத்து வளங்களையும் படைத்த படைப்பாளராகவும் அவற்றைப் பராமரிப்பவராகவும் நீர் இருக்கிறபடியால் உமக்கு நன்றி இயேசு ஸ்வாமி. எங்கள் வாழ்வாதாரத்திற்கும் வளர்ச்சிக்கும் தேவையான எண்ணற்ற வளங்களை இந்த பிரபஞ்சத்தில் வைத்துள்ளீர்கள். முக்கியாமாக இந்த நேரத்தில் இந்த உலகப் பொருட்களின் மீதான எங்கள் பேராசையையும் தீராத ஆசை, இச்சைகளையும் போக்க எங்களுக்கு உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம். எங்களை ஒருபோதும் திருப்திப்படுத்த முடியாத விஷயங்களை விட நாங்கள் சக மனிதர்களை மதிக்க எங்களுக்கு உதவிபுரியுமாறும் எங்களை நீதியின் முகவர்களாக மாற்றும்படியாகவும் கேட்டுக்கொள்ளுகிறோம்.
ஒரு முன்மாதிரியான சிக்கனமாக, எளிய வாழ்க்கை முறையை வாழ நாங்கள் பழக வேண்டுமே, ஆண்டவரே, போவாசைப்போல இரக்கமுடையவர்களாக, நீதிமான்களாக, அன்புடையவர்களாக, நேர்மையுள்ள மனிதர்களாக வாழ எங்களுக்கு உதவி செய்யும். முக்கியமாக, எப்பொழுதும் நாங்கள் நித்தியத்தை இலக்காக ஆக்கி அதற்குரிய காரியங்களில் எங்கள் செயல்பாடுகள் இருக்கும்படியாகவும், இவை எல்லாவற்றையும் எங்கள் நாதர் இயேசு கிறிஸ்து மூலமாக கேட்டுக்கொள்ளுகிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே. ஆமென்